LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

மரியா மாண்டிசோரி

குழந்தை வளர்ச்சி பெறும் உடலையும் ,

மலரும் உள்ளத்தையும் கொண்டது .

குழந்தையின் நல்ல வளர்ச்சிக்கு அடித்தளம்

அமைப்பது கல்வியாகும் .


உலகில் ஒரு புதிய கல்வி முறையை 20 ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி ( Maria Mantessori ) ஆவார் . இவர் மனோதத்துவ மருத்துவர் . இத்தாலியில் முதன்முதலாக மருத்துவம் பயின்ற பெண் . அதனால் இத்தாலி நாட்டில் பெண்கள் மத்தியிலும் , முற்போக்காளர்கள் மத்தியிலும் இடம் பிடித்தார் . இவர் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இத்தாலியில் பிறந்தார் . மருத்துவராக இருந்தவர் கல்வி போதிக்கும் திசையில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியதால் உலகப் புகழ் பெற்றார் . சிறு குழந்தைகள் கல்வி கற்கும் புதிய முறையை உருவாக்கினார் . மந்த புத்தி உள்ளவர்கள் நோயாளிகள் அல்ல . அவர்களுக்கு கல்வி கொடுத்தாலே சரியாகிவிடும் என்பதனை நிரூபித்துக் காட்டினார் . போக்கிரிகளாக இருந்த குழந்தைகளை திருத்தி படிக்க வைத்தார் .

குழந்தைகளின் உளவியல் தேவைகளை அறிந்து கல்வி பயிலச் செய்தார் . ஒவ்வொரு குழந்தையும் தானாக கல்வி கற்கும் முறையைக் கொண்டு வந்தார் . இந்தக் கல்வி முறை குழந்தைகள் தாமாக முன் வந்து செயல்படுவதற்கும் , தனது தேவைகளைத் தானே செய்து கொள்ளவும் வழி வகுத்தது . இம்முறையில் கல்வி கற்ற குழந்தைகள் சிறுவயதிலேயே சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர் . இதனால் மாண்டிசோரி கல்வி முறை உலகம் முழுவதும் பரவியது . சர்வதேச அளவில் இவரின் கல்வி முறைக்கு அங்கீகாரம் கிடைத்தது . இவர் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதினார் . பெண்ணுரிமை இயக்கங்களிலும் பங்கு கொண்டார் . இவர் 1952 ஆம் ஆண்டு மே 6 இல் இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
20-Apr-2017 22:17:57 bharathi said : Report Abuse
நல்ல தகவல்கள் நன்றி. அப்படியே கலெக்டர்க்கு படிப்போருக்கு வேண்டிய தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.