|
||||||||
திருமணப் பொருத்தம் பார்ப்பது தமிழர் மரபா? |
||||||||
திருமணம் செய்துகொள்ளும் பார்க்கப்படும் பத்துப் பொருத்தங்களாகக் சோதிடர்கள் கீழ்காணும் பொருத்தங்களை பார்க்கிறார்கள். இவர்கள் இதை எங்கிருந்து அறிந்தார்கள்? இதன் பின்புலம் என்ன என்று பார்ப்போம். 1.தினப் பொருத்தம் (நட்சத்திரப் பொருத்தம்) 2.கணப் பொருத்தம் 3.மகேந்திரப் பொருத்தம் 4.ஸ்திரீ தீர்க்கம் 5.யோனிப் பொருத்தம் 6.ராசிப் பொருத்தம் 7.ராசி அதிபதி பொருத்தம் 8.வசியப் பொருத்தம் 9.ரஜ்ஜுப் பொருத்தம் 10.வேதைப் பொருத்தம்
ஆனால் இப்படிப் பொருத்தம் பார்க்கும் முறையினை இவர்கள் எங்கிருந்து "எடுத்து உள்ளனர் தெரியுமா? பத்துப் பொருத்தம் பார்த்து மணம் முடிக்கும் முறையினைத் தமிழர்கள் தொன்றுதொட்டே கொண்டிருந்த்திருக்கின்றனர் தமிழர்கள் இப்படியான முறையினை வகுத்துள்ளார்கள். ஆனால் மேலேயுள்ள வகையிலல்ல. பின் எப்படி? அதனைத் தொல்காப்பியரே விளக்கியுள்ளார் கேளுங்கள். "பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" தொல்... மெய்ப்பாட்டியல் (1224)
என்கிறார். இதன் பொருள் என்ன? 1) ஒத்த பிறப்பும், (2) ஒத்த ஒழுக்கமும், (3) ஒத்த ஆண்மையும், (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம்! (இங்கே 'பிறப்பே' என்பது சாதீயப் பிறிவுகளைக் குறிப்பதாகாது. ஒருவன் சார்ந்த தொழில் குடியைப் பொறுத்ததாகும். அதாவது, நல்லொழுக்கம் உள்ள குடியில் பிறந்த எனப் பொருள் கொள்ள வேண்டும்)
|
||||||||
by Swathi on 02 Nov 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|