LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இசையில் ஒரு புது அத்தியாயம்

                                                                               வலைத்தமிழுக்காக: பாலமுரளி கோதண்டராமன், நியுஜெர்சி 

                                                                                Photos courtesy - Satish Balasubramanian, Meru Designs, NJ


பிப்ரவரி 23, 2013 சனிக்கிழமை மாலை 7:௦௦ மணி, கருமேகங்கள் வடக்கு நியூ ஜெர்சியை சூழ்ந்து கொண்டுஆங்காங்கே மிச்சமிருந்த பணிக்குவியல்களை கரைத்துக்கொண்டிருந்தது. காலையிலிருந்து அடாது பெய்து கொண்டிருந்த மழையினால் சாலை எங்கிலும் போக்குவரத்து நெரிசல். இதனிடையே பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட இதயங்கள் மெல்ல துடித்துக்கொண்டிருந்த தாளமும், சுவாசக்காற்றினால் வந்த ராகமும் இணைந்து Prudential Center அரங்கில் நிலவிய அமைதிக்கு பின்னணி இசை சேர்த்துக்கொண்டிருந்தது. அது புயலுக்கு முன் நிலவிய அமைதி, அது இசைக்கு ரசிகர்கள் தந்த மரியாதை, அது இசைஞானிக்கு அமெரிக்கா வாழ் ரசிகர்கள் தந்த முதல் மரியாதை!இசைக்கு உருவம் இல்லையாம்! யார் சொன்னது?! அன்று அமைதியாக அந்த அமைதியை கிழித்துக்கொண்டு வெள்ளை உடை தரித்து வணங்கியபடியே மேடையில் நடந்து வந்ததே, அது தான் இசை. ஏங்கித்துடித்த ஆயிரமாயிரம் ரசிகர்களின் இதயங்களிலும் மகிழ்ச்சி அன்று மடைதிறந்த வெள்ளம் போல் பாய்ந்தது.


முகிலினங்கள் இவரது நிகழ்ச்சி நடக்கும் இடம் Prudential Centerஎன்று அறியாமல் முகவரி தேடி அலைந்து அலைந்து அழுததினால் தான் அன்று மழை பெய்ததோ அல்லது இந்த இசைஞானியின் இசையிலும் பாசத்திலும் உருகப்போகும் ஆயிரமாயிரம் உள்ளங்களை எண்ணி தான் அந்த வானமே அன்று ஆனந்த கண்ணீர் வடித்ததோ!
இளையராஜா இந்தியா, துபாய் போன்ற நாடுகளில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி இருந்தாலும் இவர் அமெரிக்க ரசிகர்களை இசை மேடையில் சந்திப்பது இதுவே முதல் முறை. சரியாக 25நாட்களில்iDreamMediaநிறுவனத்தினால் திட்டமிட்டு நடந்தப்பட்ட அரங்கு நிரந்த நிகழ்ச்சி இது என்பது வியக்கத்தக்க உண்மை.தனது 24வது வருடத்தில் அடியெடுத்து வைத்த நியூ ஜெர்சி தமிழ் சங்கம் இந்த நிகழ்ச்சிகுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. மற்ற அண்டை மாநில தமிழ், தெலுங்கு சங்கங்களும் நியூ ஜெர்சி தமிழ் சங்கத்துடன் இணைந்து  இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தது. 30க்கும் மேற்ப்பட்ட இசைக்கலைஞர்களுடன் பாடு நிலா S.P.பால சுப்பிரமணியன், சின்னகுயில் சித்ரா, மனோ, பாடகர் கார்த்திக், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, கீதா மாதுரி, அனிதா, பிரியதர்சினி, சத்யன். நாகூர் பாபு, ரம்யா, செந்தில் இப்படி பாடகர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போனது.


எப்போழுதும் போல் அன்றும் “ஜனனி ஜனனி ...” பாடலை பாடி இசைஞானி அன்று நிகழ்ச்சியை துவக்கிய போது அங்கு கூடியிருந்த 12,000 க்கும் மேற்ப்பட்ட இசை ரசிகர்களை மயிர் கூச வைத்தது. தொடர்ந்து நான் கடவுள் திரைப்படத்திலிருந்து “ஓம் சுபோகம் ...” என்ற பாடலை பாடி மேலும் மயிர் கூச வைத்தார் பாடகர் கார்த்திக். தொடர்ந்து SPB, சித்ரா, மனோவுடன் மற்ற பாடகர்களும் தமது இனிய குரலால் அனைவரையும் தொடர்ந்து 5 மணி நேரம் இசைக்கடலில் மூழ்கடித்தனர். இளையராஜாவும் அவரது இசைக்குழு நடத்துனர் பிரபாகரனும் நின்று கொண்டே சற்றும் சலிக்காமல் 5மணி நேரம் அனைவருக்கும் இசை அமுது படைத்தனர்.
இசைக்குழு பாடிய தமிழ் பாடல்களில் சில :இது சங்கீத திருநாளோ (காதலுக்கு மரியாதை), செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்), சொர்கமே என்றாலும் (ஊரு விட்டு ஊரு வந்து), சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி), வனிதாமணி (விக்ரம்), தொகை இளமையில் (பயணங்கள் முடிவதில்லை), என்னோடு வா என்று செல்லமாட்டேன் (நீ தானே எந்தன் பொன் வசந்தம்), ஒளியிலே தெரிவது (அழகி), பூவரம்பூ பூத்தாச்சு (கிழக்கே போகும் ரயில்), தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்),சாய்ந்து சாய்ந்து (நீ தானே எந்தன் பொன் வசந்தம்), ஓரம்போ ருக்குமணி வண்டி வருது (பொண்ணு ஊருக்கு புதுசு), நிலா அது வானத்து மேலே (நாயகன்).

இடை இடையே இளையராஜா, SPB,சித்ரா, மனோ நிகழ்த்திய யதார்த்த உரையாடல்மேலும் சுவாரஸ்யம் சேர்த்தது. இது போன்ற இசை நிகழ்ச்சிகளை இளையராஜா முன்னமே தொடங்கியிருக்க வேண்டும் என்று SPBகூறியதற்கு இசை மேடைகளில் சிறு சிறு தவறுகள் நடந்தாலும் தனது இதயத்தில் ஊசியால் குத்துவது போல இருக்கும் என்று இசை ஞானி கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. தன்னை காணவும் தனது இசையை ரசிக்கவும் வந்த ஆயிரமாயிரம் ரசிகர்களை தான் காண அரங்கின் விளக்குகளை ஒளிர வைக்க அவர் கேட்டுக் கொண்டது ரசிகர்களின் மீது அவர் கொண்ட பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. நிகழ்ச்சிக்கு இடையே சப்தம் எழுப்பிய ரசிகர்களை அவர் அமைதியாக இருக்கவும் கேட்டுக்கொண்டார். அறிவித்தபடி சில பாடகர்கள் வராத போதும் தமிழ், தெலுங்கு, பழய பாடல், புதிய பாடல் என்று அனைவரையும் திருப்த்திப்படுத்தும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்தது சிறப்பு.
நாயகன் திரைப்படத்திலிருந்து “தென் பாண்டி சீமையிலே ...” பாடலின் வரிகளை தனது வரிகளால் மாற்றி அவர் பாடியது ரசிகர்களை உருக்கியது மட்டுமின்றி அவரும் கலங்கியது நிகழ்ச்சியின் உச்சகட்டம்.


“ஏழேழு கடல் கடந்து, என் வாழ்வில் சில நொடிகள், உன் வாழ்வில் சில நொடிகள், என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடி தானே...”


இசைஞானியின் இசை யாருக்கு தான் திகட்டும்! நள்ளிரவிற்கு சில வினாடிகளே மிச்சமிருந்த பொழுது அந்த பண்ணைபுரத்து நிலவு ரசிகர்களை வணங்கி மேடையை விட்டு இறங்கினாலும் ஆயிரமாயிரம் நெஞ்சங்களில் மீண்டும் ஓர் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் ராசய்யா (எ) இளையராஜா!!!

A Night to Remember For a Lifetime

Live bands preparing for concerts and tours normally happen months before the actual performance date or even sometimes more than a year before. But have you ever heard of a concert put together in less than a month! On a February night, Prudential Center at Newark, NJ was filled entirely with South Indian music fans and all these happened in just 25 days. Many records were written in the history book of South Indian music on Feb 23, 2013 at Prudential Center, Newark, NJ by the maiden show of Padmabhushan ‘Maestro’ Ilaiyaraja, a living legend of South India music organized by iDream Media. Even though the living legend of South Indian music industry had performed a handful of concerts in India, East and abroad this was his first live concert in the West. The tour for Ilaiyaraja’s band composed of singers along with many musicians is a 3 week back-to-back tour which includes Toronto, New Jersey & California.


While the legend landed in Toronto the fever spread to the East coast of USA. Right after the Toronto event the expectation raised sky high as many of NRIs living in USA grew up with Ilaiyaraja’s phenomenal music which is spanning more than 30 years. The organizers of the event Chinna Vasudeva Reddy and Rajkumar Akella from iDreamMedia planned the event to satisfy both Tamil and Telugu Ilaiyaraja fans which pulled a houseful crowd in to the stadium even on a rainy cold Saturday night. New Jersey Tamil Sangam which has successfully set foot in 24th year supported and promoted this Maestro's maiden event in USA along with the other local Tamil and Telugu associations. The event started with local MCs entertaining and engaging the audience to sing in Tamil, Telugu & English. At 7:02 PM, followed by a 2 minute pin-drop silence in the auditorium the legend walked in. This was the planned start time for the Maestro to be on stage. All the fans in the auditorium eagerly waited for his arrival and gave a standing ovation for the legend’s maiden show in USA. By this a new chapter in the history of South Indian music was written. Legendary singers who accompanied the orchestra were S.P.Bala Subramiam, Mano, Chitra, Karthik Raja, Yuvan Shankar Raja, Karthik, Bhavatharini, Priya Himesh, Anitha, Priyadharshini, Geetha Madhuri, Sathyan, Babu, Senthil and the list goes on.


Magic started auspiciously with “Janani Janani…” a very popular hit song sung by Ilaiyaraja himself followed by another auspicious number - Om Shivoham from Naan Kadavul sung by singer Karthik. Right after these 2 songs SPB kick started the Telugu numbers with Jagadananda kaaraka from Sri Ramarajyam along with Geetha Madhuri. Followed by these were heavenly numbers such as Ithu Sangeetha thirunalao (Kadhalukku Mariyadhai), Shenbagame (Enga Ooru Paatukaran),  Mounamenaloyi (Sagaara sangamam),  Ninnukori Varnam (Agni Natchatram), Sorgame Endraalum (Ooru Vittu Ooru Vanthu), Enno Raatrulostayi (Dharmaskhetram), Sundari Kannal Oru Sethi (Thalapathi), Prema Entha Madhuram (Abhinandana), Vanitha Mani (Vikram) etc. There were also some unexpected surprise numbers such as Oram Po Rukumani Vandi Varuthu (Ponnu Oorukku Pudhusu), Saaindhu Saaindhu (Neethane En Ponvasantham) etc. The entire songs list was a good mixture of melodies, fast beats, popular songs etc. spanning both Tamil & Telugu for the audience to relate to themselves. SPB and Chitra rocked the audience with many numbers as always. SPB made a remark that Ilaiyaraja must do more of these kinds of public live concerts. In response Ilaiyaraja explained the reason why doesn't do a lot of live shows. He explained that he doesn't want to alter the original music while performing live shows. Mistakes tend to happen even when you try to reproduce your own work and as a man of high conscience and discipline he expressed that he feels highly guilty when such mistakes happen in the music or lyric or even because of himself. Such a candid conversation from a legend was a treat of the lifetime to everyone who was there that night. SPB, Mano and Chitra also entertained everyone with their evergreen hit songs and casual conversations between songs which was as candid as Ilaiyaraja sir's. Few singers who were to join the band originally didn't make it due to personal constraints made some audience unhappy which vaporized before the high quality music that filled the arena. During the show Ilaiyaraja requested to turn on the house lights to see the audience who came to see him. He said the fans can always see him in other ways but he want to see everyone who came to see him. That portrayed his humbleness and touched everyone. During the show audience were requesting Telugu songs which was responded rightly by the singers and the maestro himself.


More than 5 hours of packed complete entertainment that took the entire arena to a different level. The orchestra conductor, Mr. Prabaharan and Ilaiyaraja himself standing all through the concert to deliver a high quality entertainment to the audience portrayed the highest level of professionalism. The musicians performed without any break all through the event proved that they are not any band but they are The Maestro's band. To top everything, the grand finale from the legend was Thenpaandi Cheemaiyile (Nayagan). Ilaiyaraja himself improvised the lyrics with his personal touch which brought tears in many eyes. During those last few minutes he definitely touched everyone's soul and melted most.


Ezhezhu kadal kadanthu, en vazhvil sila nodigal un vazhvil sila nodigal, endrendum ninaivil nirkum in nodi thaanae....


It was an emotional moment for the 12,000+ souls that were present in the auditorium that night. That sure is a night to remember for a lifetime.

நியூ ஜெர்சியில் இளையராஜா
by Swathi   on 19 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
20-Mar-2013 17:07:39 ரம்யா said : Report Abuse
மிக அருமையாக இருந்தது ... விசில் அடிக்கமுடியாம போனதுதான் வருத்தம்.. கலக்கிட்டிங்க ராஜா சார்.. உங்கள் இசைமழையில் நனைந்த நேரங்கள் என்றும் மனதில் நிற்கும் .. நன்றி!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.