LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

தொழிலாளர் தினம் !

உலகம் முழுதும் எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள் இன்று. காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த நாளே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம். 

 

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய், விடியல் நாளாய், விடுமுறை நாளாய் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்ட போதிலும். அந்த விடியல்; உலகம் முழுக்க பரவ சுமார் 33 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. கடந்த 1889ஆம் ஆண்டுதான்  முதல்முறையாக உலகம் முழுதும் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 

 

1806ஆம் ஆண்டு தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த மிருகத்தனமான 18 மணி நேர வேலையை எதிர்த்து ஒலித்த குரல்கள் முதலாளி வர்க்கத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட போதும், முப்பது வருடங்களுக்கு பின் வீறு கொண்ட எரிமலையாய் தொழிலாளர்களின் உணர்வுகள் சீற்றம் கொண்டு முதலாளிகளின் மிருகத்தனமான வேலைவாங்கும் நடைமுறையை சுட்டு பொசுக்கியது. இதன் விளைவாய் அமெரிக்காவில் அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்களாயினர். இதனால் தொழிலாளர்களின் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது..வேகம் கொண்டது 1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல் கண்டது. 8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வ 8 மணி நேர உறக்கம். உலகமே தொழிலாளர்களின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்து கொண்ட பின்பும், நமது பாரத தேசத்தில் 1927 ஆம் ஆண்டுதான் தொழிலாளர் தினம் நடைமுறைக்கு வந்தது. வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும், உலக முதலாளிகளின் வர்கத்திற்கு பறைசாற்றிய இன்னால், தொழிலாளர்கள் வாழ்வில் ஒரு பொன்நாள்.

 

இந்நன்னாளில், உலக தொழிலாளர்கள் அனைவரும், எல்ல வளமும், செல்வமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறது வலைத்தமிழ்.காம்.      

by Swathi   on 01 May 2013  1 Comments
Tags: May Day   தொழிலாளர் தினம்   மே 1   May 1           
 தொடர்புடையவை-Related Articles
மே 18 ல் 49 ஓ இசை வெளியீடு !! மே 18 ல் 49 ஓ இசை வெளியீடு !!
மே 1 ல் கோச்சடையான் ரிலீஸ் !! மே 1 ல் கோச்சடையான் ரிலீஸ் !!
தொழிலாளர் தினம் ! தொழிலாளர் தினம் !
கருத்துகள்
30-Apr-2019 20:25:45 Tamilselvan A said : Report Abuse
Nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.