|
|||||
மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன் |
|||||
![]() அன்பு வலைத்தமிழ் வாசகர்களுக்கு, ஆயகலைகளுள் ஒன்றான மாயக் கலையை வலைத்தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். மாயக்கலை அல்லது மந்திர வித்தை கலை உலகின் தலை சிறந்த மன மகிழ் கலைகளுல் ஒன்றாக விளங்குகிறது. இக் கலையில் ஆர்வம் என்னுடய பத்தாவது வயதிலிருந்து தொடர்ந்து கடந்த 59 ஆண்டுகளாக என்னை ஆட்கொண்டிருக்கிருக்கிறது. இக்கலையை பயில்வதினல் என்ன பயன்!!
என்னுடைய தமையனார் திரு பி. கே. இளங்கோவும், நானும் இக்கலையினால் உலகப் புகழ் பெற்றோம். திரு பி. கே. இளங்கோ அவர்கள் பல மந்திர வித்தைகளை தானே உருவாக்கி இவ்வுலகுக்கு அளித்தார். அவைகள் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு பல மந்திர வித்தை கலைஞர்களை உருவாக்கியது. எனது அருமை நண்பர் திரு. பார்த்தசாரதி அவர்கள் நான் அமெரிக்க நாட்டிற்கு வருகை தந்த பொழுது என்னை சந்தித்து ஏன் அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மந்திர வித்தை கற்று கொடுக்க கூடாது என்று கேட்டார். அதற்கு பதில்தான் வலைத்தமிழில் வரப்போகும் மந்திர தொடர்கள் !! வாசகர்களை சந்திப்பதில் மிக்க ஆர்வமாக இருக்கின்றேன். அன்புடன், |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
by Swathi on 07 Jun 2018 6 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|