LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

மயில் விருத்தம்

காப்பு
நாட்டை - ஆதி 2 களை
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்
கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே
(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)
சந்தனம், குங்குமப் பூ, குங்குமம் இவைகள் பூசப் பட்டதும், மகிழ்ச்சியை ஊட்டுவதும், சண்பக மாலையை சூடியுள்ளதும், வீர வளைகள் அணிந்துள்ளதுமான, திருத் தோள்களை உடைய, போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவனே, குமாரக் கடவுளே, ஆறுமுகத்தோனே, குரா மலர்களை அணிந்துள்ள, கூந்தல் பாரத்தை உடைய, வேடர்குலத்தில் பிறந்த பழையவளாகிய வள்ளிப் பிராட்டியின் கணவா, என்றும் புகழப்படும், சரவணப் பொய்கையில் உதித்தவனே, யானையால் வளர்க்கப்பட்டு, தளிர்போன்று அழகுடைய தேவயானையைத் தழுவி அணைப்பவனே, கந்தக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவனே, அழகான குடம் போன்ற கபோலத்தை உடையவரும், மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும், சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும், அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும் எனக்கு தந்தை போன்றவரும், பெரு வயிறு உடையவரும், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும், சிவ குமாரனாகிய கணபதி, விக்னங்களை அகற்றும் விநாயகர் ஆகிய, தெய்வத்திற்கு சகோதரனே, கூதாள மலர் அணிந்துள்ள குளிர்ச்சி பொருந்திய உனது திரு அடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். 
மயில் விருத்தம் - 1
கம்சட்வனி - கண்ட சாபு
சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக
சரண யுகளமிர்த்த ப்ரபா
சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக வினாயகன் முதற்
சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்
மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க
வன சரோதய கிர்த்திகா
வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்
இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் வினோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே
(ரத்னக் கலாப மயிலே 
ரத்னக் கலாப மயிலே)
தேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின், நறு மணம் வீசுவதும், சதங்கையை தன்னிடத்தில் கொண்டதும், அமிர்த ஒளியை வீசுவதும் ஆகிய, இரண்டு திரு அடிகளை உடையவரும் (யுகள இரண்டு), பிறைச் சந்திரனை அணிந்தவரும், மூஷிக வாகனரும், மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும், தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும், தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும், முக் கண்ணை உடையவருமாகிய கணபதி, முன்னொரு காலத்தில், கனிக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில், சராசலங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த, அழகான தோகைகளை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) கங்கையில் உதித்தவரும், மனக் கவலைகளை பிளந்து எறிபவரும், சரவணத்தில் உதித்தவரும், கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும், தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும், பாம்பு வடிவமான அந்த சீர்மிகு நாகாசல வேலவனும், வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின், மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும், போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும், அருளைச் சுரக்கும், இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள் வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது. 
மயில் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டுக் க்ரவுஞ்ச சயிலன்
தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு
தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி
பத்மப் பதங்க் கமழ்தரும்
பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய
பரம உபதேசம் அறிவி
கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
கந்த சுவாமி தணிகை
கல்லார கிரியுருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே
(கலாபத்தில் இலகு மயிலே
மரகத கலாபத்தில் இலகு மயிலே)
சக்ரவாளம் என்கிற பெரிய வலிமை உடைய மலை, அடியோடு பிளவு பட்டு, வெளியில் சிதறவும், கிரவுஞ்ச மலை பொடியாகப் போகவும், பெரிய தங்க நிற மயமான பெரிய சிகரங்களை உடைய மேரு மலையும், சூரனுக்குக் காவலாக இருந்த ஏழு மலைகளும், அழகிய பூவுலகும், எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட குல கிரியும் ஒன்று பட்டு சேர்ந்து குலுங்கவும், அடி எடுத்து வருகின்ற அழகிய கால்கள் மெதுவாக வந்தவுடனேயே, ஆதிசேஷனின் திருமுடிகள் கலங்க, போர் புரியும் அசுரர் திண்டாட, திகைத்து நடுக்கமுற நடனம் செய்யும் மயிலாகும் (அது யாருடையது என வினாவினால்) தனது இடப்பக்கத்தில் சேர்ந்திருக்கும், பச்சை நிறமுடைய பார்வதி தேவியின், தாமரை போன்ற திருவடிகளின் நறு மணம் வீசும், கங்கையை புனைந்திருக்கும் ஜடா முடியை உடைய, யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு தகுந்த பிரணவ உபதேசம் செய்வதற்காக, வளமான சரவணப் பொய்கையில் அவதரித்தக் கந்தக் கடவுளின், திருத்தணிகையில், செங்கழுநீர்மலை உருகும் படி, போரொளி பொருந்திய, மரகத நிறம் உடைய, தோகைகளை உடைய மயிலே அது. 
மயில் விருத்தம் - 3
சாரங்கா - கண்டசாபு
ஆதார பாதளம் பெயர அடி பெயர மு
தண்ட முகடது பெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
கவுட்கிரி சரம் பெயரவே
வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்
மிக்க ப்ரியப்பட விடா
விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்
விச்தார நிர்த்த மயிலாம்
மாதானு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா
மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
வள்ளிமணி ஞூபுர மலர்
பாதார விந்த சேகரனேய மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே
(பசுந்தோகை வாகை மயிலே
பச்சை பசுந்தோகை வாகை மயிலே)
இப்பூவுலகுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள, பாதாள லோகம் அசையவும், மயில் தனது அடியை எடுத்து வைத்த உடனேயே, மிகவும் பழமையான பிரமாண்டத்தின் உச்சிக் கூரையானது அசைவு பெறவும், இப்பூவுலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் ஆடுகின்ற ஆயிரம் முடிகளும் அசைந்து கொடுக்கவும், எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும், மத நீரை சிந்தி எறிகின்ற கன்னங்களை உடைய அஷ்ட திக்கு கஜங்களும் (யானைகளும்) இடம் பெயரவும், வேதாள கணங்கள் தாளம் போட அதற்குத் தகுந்த வகையில் நடனமாடும் நடராஜப் பெருமான், மிகவும் அன்புடன் பாராட்டவும், வைத்த கண்களை அகற்றாதபடி மயிலின் நடனத்தைக் கண்ட பார்வதி தேவி, உள்ளத்தில் களிப்புகொள்ளவும், பலவிதமான நடன வகைகளைக் காட்டி விளையாடுகின்ற மயில் (அது யாருடையது என வினாவினால்) திருவள்ளுவர் என பெருமை மிக்கவரின் சகோதரியானவள், மலையில் பிறந்தவள், வேடர் வம்சத்தில் வளர்ந்தவள், சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ முனிவரின் புத்திரி, மான் வயிற்றில், ஒப்பற்ற வகையில் உதித்த, நமது வள்ளித் தாயரின், கிண்கிணிகளும் சிலம்பும் அணிந்துள்ள தாமரை மலர் போன்ற, பாதங்களை திருவடியில் அணிந்த முருகனின், அன்பிற்கு உகந்ததாய், பூத்திருக்கும், நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில், வீற்றிருக்கும் பெருமையை உடையவன், படையுடன் வந்த அசுரர்களின், சேனைகள் சிதறிப் போகும்படி, நடத்துகின்ற, பச்சை நிறமான தோகையை உடைய வெற்றி மயிலே அது. 
மயில் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு
விசும்பிற் பறக்க விரினீர்
வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
முரிக் கலாப மயிலே
(விகடதட முரிக்கலாப மயிலே 
சிறகை வீசிப் பறக்கு மயிலாம்)
திரேதா யுகம், கிருதா யுகம், துவார யுகம், கலி யுகம் என்கிற சதுர் யுகங்களின், எல்லையின் முடிவு காலங்களில், உக்ரமாக வீசும், சூராவளிக் காற்று, இப்போதே வந்து விட்டதோ என்று, பிரமன் நடுக்கமுற, கோடிக்கணக்கான தேவலோகங்களும், கீழ் உலகங்களும், பொன் மயமான சிகரங்களை உடைய, கோடிக் கணக்கான மலைகளும், மயில் அடி வைக்கும் பொழுதே, பொடியாகி, பெரிய ஆகாசத்தில் தூளாக பறக்கவும், பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும், தேவர்கள் பயப்படவும், தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) எண்ணிலடங்காத நகங்களைக் கொண்டு, அரக்கர்களின் மார்பைப் பிளந்த, நரசிங்க மூர்த்தி, முரன் எனற அசுரனைக் கொன்றவர், மேக வண்ணன், பாற்கடலில் வசிப்பவர், கேசி என்ற அசுரனை வதைத்தவர், மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்துள்ளவர், தேவகியின் திருக் குமாரர், முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவர், ஆகிய மஹா விஷ்ணுவின் மருமகனும், ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன், வெள்ளை நிறமாக பரவிச் செல்லும், மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற, திருத்தணி மலையில் வீற்றிருக்கும், முருக மூர்த்தி, பார்வதி பாலன், ஆறுமுகக் கடவுள், செலுத்துகின்ற, அழகும், பெருமையும், மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது. 
மயில் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்டசாபு
ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால்
அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங்க் கலப மயிலாம்
நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன் 
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன் 
வரமுதவு வாகை மயிலே
(முருகன் கலாப மயிலே
வரமுதவு வாகை மயிலே)
ஒளிவடிவினளாய், இமய மலையின்கண், தோழியர்கள் பாதுகாத்து வந்த, மிகுதியான அலங்காரம் உடையவளும், பரிசுத்தம் மிகுந்தவளும், சந்தரன் போல் தண்ணொளி வீசும் முகம் உடையவளும், சிறந்த, மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தைக் கையில் கொண்டவளும், எலும்பு மாலையை அணிந்தவளும், சிவபெருமானையே எப்பொழுதும் நாடி விரும்பி இருக்கும் பார்வதி தேவி, படைத்த, ஒழுங்குமுறையும் வரிசை கொண்டதுமான, புராதனமானவையும் பரந்துள்ளதுமான, மிகப் பெரிய பிரபஞ்ச படைப்புகளான உலகங்கள் எல்லாமும், வெளி உலகங்கள் யாவையும், வளைந்த தனது சிறகினால், ஒரு ஆண் மயில் தனது பேடை மயிலின் முட்டைகளைக் காப்பது போல், அகில பிரபஞ்களையும் பாதுகாக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள், வர்ணிக்கும், வெளி உலகங்களில் வாழும், 33 கோடி தேவர்களும் துதித்து வணங்கும் மலையாகிய, திருத்தணியில் வாழும் வேலாயுதக் கடவுள், தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன், பயமில்லாதவன், மனத் துன்பம் இல்லாதவன், பாஞ்ச சனியம் எனும் சங்கு, நாந்தகம் எனும் வாள், பெருமை மிக்க சுதர்சனம் எனும் சக்ரம், சாரகங்கம் எனும் வில், கெளமேதகம் எனும் கதை, ஆகியவைகளை ஏந்தியுள்ள புயங்களை உடையவனும், மாதவனும் முராரியும் திருமாலும், மது கைடவன் என்ற இரு அசுரர்களை அழித்தவனாகிய திருமாலினுக்கும், மகாலட்சுமிக்கும், மருமகன், முருகவேள் குமரக் கடவுளின், வேலும் மயிலும் துணை என்கிற மகா மநிதிரத்தின் பொருளாக நின்று அதை ஜெபிக்கும் அடியார்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில் தான் அது. 
மயில் விருத்தம் - 6
சின்துப்கைரவி - கண்ட சாபு
சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
சகல லோகமு நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த
காரம் பிறன்டிட நெடும் 
ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்
கற்றை கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
சித்ரப் பயோதர கிரி
தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீதரன் இருங்க்
கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே
(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)
நான்கு யுகங்களின் முடிவில் எல்லாம் அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று, திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும், எல்லா உலகங்களும் அச்சப்படவும், சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும் இந்தராதி அமரர்கள் குழப்பமடையவும், உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த சிவனார், ஒப்பற்ற சர்வ சங்கார நடனம் செய்த சமயம், பிரளய இருள் மூடி இருந்தது போல், விரிந்த மேல் உலகத்தின் உச்சியும், வானத்தின் உச்சியும், மறையும்படி செய்த பசிய தோகையை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) பேரழகுடைய, குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும், கஸ்தூரியையும் புனைந்த, இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட, தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின், மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான, குமரக் கடவுள், திருத்தணி மலையில் வாழ்பவன், பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக ஏந்தப்பட்டவன், இசைக்கு ஆதாரமான ஏழு சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன், கருணைக் கடல், கிருத்திகை மாதர்களின் புதல்வன், வலிமை மிக்க சூரபத்மாதிகள் மடியவும், கிரவுஞ்ச மலை பிளவுபடவும், போர்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த மயிலே தான் அது. 
மயில் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு
தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்
ஜகதலமு நின்று சுழல
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
தீக் கொப்புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த்த கலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
மானந்த வல்லி சிறுவன்
கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகை வேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
குடிபுகுத நடவு மயிலே
(பச்சை ப்ரவாள மயிலாம்
வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)
மிகவும் நன்றாக, சமுத்திரங்களும், எட்டுத் திசைகளும், மேல் வானமும், பூவுலகும், நின்ற நிலையில் சுழற்சி அடையவும், விளங்குகின்ற, ஆயிரம் பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும், கொடிய உச்சியின் மேல் உள்ள படங்கள் நெருப்பைக் கக்கவும், பயத்தை அடைந்த, கனத்தப் படக் கூட்டங்களை உடைய, ஆதிசேடன் முதலான சர்ப்பக் கூட்டங்கள், பட படவென்று அச்சமுற்று நடுங்கவும், எங்கும் பரந்துள்ள சக்ரவாளகிரி, தூள் தூளாகப் போகவும், பயணத்திற்கு ஏற்றபடி சவாரிக்கு வரும், பச்சை நிறத்தையும் பவள நிறத்தையும் உடைய தோகைகளைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) மிக்க கீர்த்தி உடையதாய், புளகாங்கிதம் கொண்டதாய் ஒளி மிகுந்ததாய், சந்தனப் பூச்சுக்கள் அணியப் பெற்றதாய், அமிர்தம் நிறைந்த குடத்தைப் போன்ற தன பாரங்களைக் கொண்டவள், தோகையை விரித்து ஆடும் மயிலைப் போன்றவள், பேரழகு உடையவள், பேரானந்தத்தில் திகழ்ந்து கொண்டிருப்பவள், இப்பேற்பட்ட பார்வதி தேவியின் திருக்குமரன், கோரமான முத்தலை சூலத்தை ஏந்தியவரும், முக்கண்ணரும் நிமிர் சடையானும், லோக குருவாகிய சிவபெருமான், தந்தருளிய, தணிகேசன், கொடிய செயல்களையே செய்து வந்த அசுரர்களின் வயிற்றில் எரி புகவும், தேவர்கள் அமராவதி நகரில் குடியேறவும், செலுத்திய மயிலே தான் அது. 
மயில் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
சிந்தப் புராரி அமிர்த்தம்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங்க் கொப்புளிப்ப
சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயன
தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு
சண்டப் பரசண்ட மயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட உணர்த்தி அருளி
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த
சுவாமி வாகனம் ஆனதோர்
துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல
துஷடர் நிஷடுர மயிலே
(சண்ட ப்ரசண்ட மயிலாம்)
(வாசுகியின்) வரிசையாக அமைந்துள்ள படங்களின் கூட்டம், சிவந்த நிறமுள்ள குபேரனின் செல்வத்தைப் போன்ற, விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை, சிதற, திரிபுர சம்ஹாரியான சிவனார் முன்பு அமிர்தம் போல் உண்ட ஆலகால விஷம், மீண்டும் தோன்றி விட்டதோ என அனைவரும் அஞ்ச, பிளவு பட்ட ஆயிரம் வாய்களும், நெருப்பைப் போல் எரியும் விஷத்தைக் கக்க, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட தேசங்கள் யாவையும், ஒரே மூச்சில் அழிக்க வல்ல, கொடூரமான பார்வையை உடைய, வீரமும் கொடூரமும் உள்ள வாசுகியின், படக்கூட்டங்களை ஒரே அடியாகத் தூக்கி வீசுகிற, உக்ரமும் வேகமும் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) வீரம் மிக்க வேடர் வம்சத்தில் வளர்ந்து வந்த, வள்ளி புனத்திற்கு சென்று உலாவி வந்த, கிழ ரூபம் எடுத்த மேலோன், சானித்தியம் கொண்டு திகழும் திருத்தணி தலத்தில் வாழும் வேலாயுதக் கடவுள், என்னுடைய பூர்வ ஜென்ம வினைகள், துன்பத்தை ஒழித்து, நான் யார் என்பதை எனக்கு உபதேசம் மூலமாக உணர்த்தி அருளி, இன்ப துன்பங்களை கடந்த அத்துவித நிலையில் என்னை இருத்தி அருளிய கந்த சுவாமி, வாகனமாக திகழும், ஒப்பற்ற, குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்ட, பெருமை உள்ளதும் அகன்றதுமான, அசுரர்குல தீயோர்களை கொடுமையை காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது. 
மயில் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு
சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல
கிரி எனவும் ஆயிரமுக
தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா
நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்ற மா முகில் என்னவே
நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்
அடியவர்கள் மிடி அகலவே
அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற்குழாம் அசையவே
மகரகன கோமள குண்டலம் பல அசைய
வல்லவுணர் மனம் அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய
வைய்யளி ஏறு மயிலே
(வையாளீ ஏறு மயிலே
நீலக் கலாப மயிலாம்)
பொன் நிறமான சிகரங்களை உடைய, மேரு மலை என்று சொல்லும்படியாகவும், கைலாய மலை எனும்படியாகவும், நீலோற்பல மலர்கள் வளரும் தணிகை மலை எனும்படியும் (இவ்வாறு பல நிறங்களைப் பெற்று) ஆயிரம் கிளை நதிகள் கொண்ட கங்கை, யமுனை நதி போல, ஒளி வீசும், வெண்நிலா போன்ற சங்கின் நிறத்தைப் போலவும், தேவர்களின் சிலைகளை அலங்கரிக்கும் திரு வாச்சி போலவும், எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும், நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும், தோகையை வீசி நிமிர்ந்திருக்கும், ஒப்பற்ற, நீல நிறத் தோகையைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) அகில் மருக் கொழுந்து மணம் வீசும், திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன், தன்னுடைய பக்தர்களின் வறுமை நீங்கும்படி, திருக் கரத்தில் வலிமை வாய்ந்த வேலாயுதம் விளங்கி நிற்கவும், பன்னிருத் திருத் தோள்களில் பலவித மலர்களில் தொடுக்கப்பட்ட மாலைகள் அசையவும், மீன் வடிவமுள்ள பொன்நிறமான, அழகிய காதில் குண்டலங்கள் அசையவும், கொடிய அரக்கர்களின் மனம் சஞ்சலப் படவும், மயக்கம் தரும் கிரவுஞ்ச கிரி நடுங்கவும், பாதாள லோகம் கிடுகிடென நடுங்கவும், எட்டுத் திக்குகளும் அசைவுறவும், பவனிக்காக சவாரிக்கு புறப்படும் மயிலே தான் அது. 
மயில் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
நிராஜத விராஜத வரோதய பராபர
நிராகுல நிராமய பிரா
நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி
நிலாவிய உலாச இதயன்
குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்
குரானிழல் பராவு தணிகை
குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய 
குலாவிய கலாப மயிலாம்
புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக
லாகும் அயில் ஆயுத நெடுன்
தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல
சாதனன் வினோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்
ஷடானனன் நடாவு மயிலே
(மயிலே, ஷடானனன் நடாவு மயிலே
ஷடானனன் நடாவு மயிலே)
'நி' + 'ராஜத', மூன்று குணங்களில் ஒன்றான ராஜத குணம் அற்றவன், 'வி' + 'ராஜத', ராஜத குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவன், பரமேஸ்வரன், மன வருத்தம் இல்லாதவன், 'நிர்' + 'அமயம்' (நோய்), நோய் இல்லாதவன், தலைவன், தர்ம நெறி அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால், நன்நெறி பூண்டு ஒழுகி மனக்களிப்புடன் எப்போதும் இருப்பவன், குரா மரங்களில் தோன்றி, கலந்து வெளிப்பட்டு விளங்கும், பருத்த அடிமரத்தின் கீழ், (திருவிடைக்கழியில்) சானித்தியத்துடன் விளங்குபவன், ஒளி வீசும், குரா மரங்களின் நிழலில், படர்ந்திருக்கும், திருத்தணிகை முதலிய சிரேஷ்டமான மலை முதல், பூவுலகெங்கும், களிப்புடன் திரிந்து, குலாவுகின்ற தோகை மயில் (அது யாருடையது என வினாவினால்) திரிபுரமெரித்த சிவ பெருமானின் மைந்தா, சிவ குருமூர்த்தியே, என்று துதித்து வணங்கும், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குபவன், பழம் பெரும் கடவுளானவரும், 'முரன்' என்ற அசுரனைக் கொன்றவரும் ஆன திருமாலின் மருமகன், (பழங்களையே உண்டு வாழும்) கிளி போன்ற இந்திராணியால், வணங்கப்படுகின்றவன், இந்திரனுக்கு சரணாகதி அளித்த வேலாயுதக் கடவுள், நீண்ட பூமியின் கண் உள்ள மலைகளில் வாழும், வேடுவர்களின் குலத்திற்கு சூரியனைப் போல், மாப்பிள்ளையாகிய பேரழகன், வலிமையை சாதித்தவன், போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன், மலையான கிரவுஞ்சத்தை அழித்தவன், தொந்தரவுசெய்து வந்த சூரபத்மாவை, கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன், நன்மையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆறுமுகப் பெருமான், செலுத்துகின்ற மயிலே தான் அது. 
மயில் விருத்தம் - 11
மத்யமாவதி
என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்
இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு
நம் பிரானான மயிலை
பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன் 
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறை ஞூல்
மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிஜ மடந்தை யுடன் வாழ்
அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதா சனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்
அழியா வரம் பெறுவரே.
(அழியா வரம் பெறுவரே
அழியா வரம் பெறுவரே)
ஒரு நாள் கூட தவறாமல் எப்பொழுதும், ஒப்பற்ற, நீர் மடுவில், இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல மலர் விளங்குகின்ற, தணிகாசலத்தில் வாழும், எமது தெய்வமாகிய கந்தக் கடவுள், தேவர்களின் தலைவன், ஊர்தியாக ஏறும், ஒப்புவமை இல்லாத நாம் வழிபடும் தெய்வமான மயில் வாகனத்தை, பல நாட்களாக துதித்து வணங்கும், அருணகிரிநாதனாகிய நான், இயற்றிய, இனிமை நிறைந்ததும், விசித்ரமான அழகுகள் நிறைந்ததும், இசைக்குரிய பாடலாகச் சொன்ன, எவ்வித குற்றமும் இல்லாத, இந்த பத்து விருத்தப் பாக்களையும், தினமும் பாராயணமாக ஓதி உணர்ந்தவர்கள், மிகவும் பழமையான வேதங்கள், நிலை பெற்று விளங்கும், பிரம தேவனின் சொரூபத்தை அடைவார்கள், பிரம்மனின் அன்ன வாகனத்தில் ஏறும் பாக்யத்தைப் பெறுவார்கள், கலைவாணியாகிய சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்று அவருடன் கூடி வாழ்வார்கள், சுறா மீன்கள் வாழும் சமுத்திரத்தின் தலைவனாகிய வருண பதவியை அடைவார்கள், கருட வாகனத்தில் ஏறுவார்கள், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும் சிறந்த தலைமைப் பதவியை பெறுவார்கள், தேவேந்திரனுடன் அயிராவதத்தின் மேல் பவனி வருவார்கள், தேவர்கள் போல் அமுதத்தை அருந்தி மகிழ்வர், அதற்கு மேலும் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்யப் பெறுவார்கள், மிகச் சிறந்த பெருமையும் புகழும் அடைவார்கள், முடிவில் அழிவில்லாத முக்தி சாம்ராஜ்யத்தை அடைவார்கள். 
மயில் விருத்தம் முற்றிற்று.

காப்புநாட்டை - ஆதி 2 களை

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புயசமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்
கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுகசிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே
(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)

சந்தனம், குங்குமப் பூ, குங்குமம் இவைகள் பூசப் பட்டதும், மகிழ்ச்சியை ஊட்டுவதும், சண்பக மாலையை சூடியுள்ளதும், வீர வளைகள் அணிந்துள்ளதுமான, திருத் தோள்களை உடைய, போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவனே, குமாரக் கடவுளே, ஆறுமுகத்தோனே, குரா மலர்களை அணிந்துள்ள, கூந்தல் பாரத்தை உடைய, வேடர்குலத்தில் பிறந்த பழையவளாகிய வள்ளிப் பிராட்டியின் கணவா, என்றும் புகழப்படும், சரவணப் பொய்கையில் உதித்தவனே, யானையால் வளர்க்கப்பட்டு, தளிர்போன்று அழகுடைய தேவயானையைத் தழுவி அணைப்பவனே, கந்தக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவனே, அழகான குடம் போன்ற கபோலத்தை உடையவரும், மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும், சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும், அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும் எனக்கு தந்தை போன்றவரும், பெரு வயிறு உடையவரும், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும், சிவ குமாரனாகிய கணபதி, விக்னங்களை அகற்றும் விநாயகர் ஆகிய, தெய்வத்திற்கு சகோதரனே, கூதாள மலர் அணிந்துள்ள குளிர்ச்சி பொருந்திய உனது திரு அடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். 

மயில் விருத்தம் - 1கம்சட்வனி - கண்ட சாபு

சந்தான புஷப பரிமள கிண்கிணீ முகசரண யுகளமிர்த்த ப்ரபா
சன்ற சேகர முஷிகாருட வெகுமோகசத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரியம்பக வினாயகன் முதற்
சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வருசித்ர கலாப மயிலாம்
மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்கவன சரோதய கிர்த்திகா
வர புத்ர ராஜீவ பரியங்க தந்தியவராசலன் குலிசாயுதத்
இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரணஇகல்வேல் வினோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே
(ரத்னக் கலாப மயிலே ரத்னக் கலாப மயிலே)

தேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின், நறு மணம் வீசுவதும், சதங்கையை தன்னிடத்தில் கொண்டதும், அமிர்த ஒளியை வீசுவதும் ஆகிய, இரண்டு திரு அடிகளை உடையவரும் (யுகள இரண்டு), பிறைச் சந்திரனை அணிந்தவரும், மூஷிக வாகனரும், மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும், தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும், தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும், முக் கண்ணை உடையவருமாகிய கணபதி, முன்னொரு காலத்தில், கனிக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில், சராசலங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த, அழகான தோகைகளை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) கங்கையில் உதித்தவரும், மனக் கவலைகளை பிளந்து எறிபவரும், சரவணத்தில் உதித்தவரும், கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும், தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும், பாம்பு வடிவமான அந்த சீர்மிகு நாகாசல வேலவனும், வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின், மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும், போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும், அருளைச் சுரக்கும், இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள் வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது. 

மயில் விருத்தம் - 2மோகனம் - கண்ட சாபு

சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளிபட்டுக் க்ரவுஞ்ச சயிலன்
தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழுதனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவருசித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரிபத்மப் பதங்க் கமழ்தரும்
பகீரதி ஜடில யொகீசுரர்க் உரியபரம உபதேசம் அறிவி
கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒருகந்த சுவாமி தணிகை
கல்லார கிரியுருக வரு கிரண மரகதகலாபத்தில் இலகு மயிலே
(கலாபத்தில் இலகு மயிலேமரகத கலாபத்தில் இலகு மயிலே)

சக்ரவாளம் என்கிற பெரிய வலிமை உடைய மலை, அடியோடு பிளவு பட்டு, வெளியில் சிதறவும், கிரவுஞ்ச மலை பொடியாகப் போகவும், பெரிய தங்க நிற மயமான பெரிய சிகரங்களை உடைய மேரு மலையும், சூரனுக்குக் காவலாக இருந்த ஏழு மலைகளும், அழகிய பூவுலகும், எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட குல கிரியும் ஒன்று பட்டு சேர்ந்து குலுங்கவும், அடி எடுத்து வருகின்ற அழகிய கால்கள் மெதுவாக வந்தவுடனேயே, ஆதிசேஷனின் திருமுடிகள் கலங்க, போர் புரியும் அசுரர் திண்டாட, திகைத்து நடுக்கமுற நடனம் செய்யும் மயிலாகும் (அது யாருடையது என வினாவினால்) தனது இடப்பக்கத்தில் சேர்ந்திருக்கும், பச்சை நிறமுடைய பார்வதி தேவியின், தாமரை போன்ற திருவடிகளின் நறு மணம் வீசும், கங்கையை புனைந்திருக்கும் ஜடா முடியை உடைய, யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு தகுந்த பிரணவ உபதேசம் செய்வதற்காக, வளமான சரவணப் பொய்கையில் அவதரித்தக் கந்தக் கடவுளின், திருத்தணிகையில், செங்கழுநீர்மலை உருகும் படி, போரொளி பொருந்திய, மரகத நிறம் உடைய, தோகைகளை உடைய மயிலே அது. 

மயில் விருத்தம் - 3சாரங்கா - கண்டசாபு

ஆதார பாதளம் பெயர அடி பெயர முதண்ட முகடது பெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறிகவுட்கிரி சரம் பெயரவே
வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்மிக்க ப்ரியப்பட விடா
விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்விச்தார நிர்த்த மயிலாம்
மாதானு பங்கியெனு மாலது சகோதரிமகீதரி கிராத குலிமா
மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்தவள்ளிமணி ஞூபுர மலர்
பாதார விந்த சேகரனேய மலரும் உற்பலகிரி அமர்ந்த பெருமாள்
படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்பசுந்தோகை வாகை மயிலே
(பசுந்தோகை வாகை மயிலேபச்சை பசுந்தோகை வாகை மயிலே)

இப்பூவுலகுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள, பாதாள லோகம் அசையவும், மயில் தனது அடியை எடுத்து வைத்த உடனேயே, மிகவும் பழமையான பிரமாண்டத்தின் உச்சிக் கூரையானது அசைவு பெறவும், இப்பூவுலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் ஆடுகின்ற ஆயிரம் முடிகளும் அசைந்து கொடுக்கவும், எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும், மத நீரை சிந்தி எறிகின்ற கன்னங்களை உடைய அஷ்ட திக்கு கஜங்களும் (யானைகளும்) இடம் பெயரவும், வேதாள கணங்கள் தாளம் போட அதற்குத் தகுந்த வகையில் நடனமாடும் நடராஜப் பெருமான், மிகவும் அன்புடன் பாராட்டவும், வைத்த கண்களை அகற்றாதபடி மயிலின் நடனத்தைக் கண்ட பார்வதி தேவி, உள்ளத்தில் களிப்புகொள்ளவும், பலவிதமான நடன வகைகளைக் காட்டி விளையாடுகின்ற மயில் (அது யாருடையது என வினாவினால்) திருவள்ளுவர் என பெருமை மிக்கவரின் சகோதரியானவள், மலையில் பிறந்தவள், வேடர் வம்சத்தில் வளர்ந்தவள், சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ முனிவரின் புத்திரி, மான் வயிற்றில், ஒப்பற்ற வகையில் உதித்த, நமது வள்ளித் தாயரின், கிண்கிணிகளும் சிலம்பும் அணிந்துள்ள தாமரை மலர் போன்ற, பாதங்களை திருவடியில் அணிந்த முருகனின், அன்பிற்கு உகந்ததாய், பூத்திருக்கும், நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில், வீற்றிருக்கும் பெருமையை உடையவன், படையுடன் வந்த அசுரர்களின், சேனைகள் சிதறிப் போகும்படி, நடத்துகின்ற, பச்சை நிறமான தோகையை உடைய வெற்றி மயிலே அது. 

மயில் விருத்தம் - 4மனோலயம் - ஆதி

யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாளலோகமும் பொற் குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இருவிசும்பிற் பறக்க விரினீர்
வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகைவீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நரகேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீநந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்முகிலுலவு நீலகிரிவாழ்
முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதடமுரிக் கலாப மயிலே
(விகடதட முரிக்கலாப மயிலே சிறகை வீசிப் பறக்கு மயிலாம்)

திரேதா யுகம், கிருதா யுகம், துவார யுகம், கலி யுகம் என்கிற சதுர் யுகங்களின், எல்லையின் முடிவு காலங்களில், உக்ரமாக வீசும், சூராவளிக் காற்று, இப்போதே வந்து விட்டதோ என்று, பிரமன் நடுக்கமுற, கோடிக்கணக்கான தேவலோகங்களும், கீழ் உலகங்களும், பொன் மயமான சிகரங்களை உடைய, கோடிக் கணக்கான மலைகளும், மயில் அடி வைக்கும் பொழுதே, பொடியாகி, பெரிய ஆகாசத்தில் தூளாக பறக்கவும், பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும், தேவர்கள் பயப்படவும், தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) எண்ணிலடங்காத நகங்களைக் கொண்டு, அரக்கர்களின் மார்பைப் பிளந்த, நரசிங்க மூர்த்தி, முரன் எனற அசுரனைக் கொன்றவர், மேக வண்ணன், பாற்கடலில் வசிப்பவர், கேசி என்ற அசுரனை வதைத்தவர், மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்துள்ளவர், தேவகியின் திருக் குமாரர், முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவர், ஆகிய மஹா விஷ்ணுவின் மருமகனும், ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன், வெள்ளை நிறமாக பரவிச் செல்லும், மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற, திருத்தணி மலையில் வீற்றிருக்கும், முருக மூர்த்தி, பார்வதி பாலன், ஆறுமுகக் கடவுள், செலுத்துகின்ற, அழகும், பெருமையும், மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது. 

மயில் விருத்தம் - 5பாகேஸ்ரீ - கண்டசாபு

ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபிநய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாமசுந்தரி பயந்த நிரைசேர்
ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால்
அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவேஅணைக்குங்க் கலப மயிலாம்
நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடிநித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்நிர்வியாகுலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன் மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன் வரமுதவு வாகை மயிலே
(முருகன் கலாப மயிலேவரமுதவு வாகை மயிலே)

ஒளிவடிவினளாய், இமய மலையின்கண், தோழியர்கள் பாதுகாத்து வந்த, மிகுதியான அலங்காரம் உடையவளும், பரிசுத்தம் மிகுந்தவளும், சந்தரன் போல் தண்ணொளி வீசும் முகம் உடையவளும், சிறந்த, மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தைக் கையில் கொண்டவளும், எலும்பு மாலையை அணிந்தவளும், சிவபெருமானையே எப்பொழுதும் நாடி விரும்பி இருக்கும் பார்வதி தேவி, படைத்த, ஒழுங்குமுறையும் வரிசை கொண்டதுமான, புராதனமானவையும் பரந்துள்ளதுமான, மிகப் பெரிய பிரபஞ்ச படைப்புகளான உலகங்கள் எல்லாமும், வெளி உலகங்கள் யாவையும், வளைந்த தனது சிறகினால், ஒரு ஆண் மயில் தனது பேடை மயிலின் முட்டைகளைக் காப்பது போல், அகில பிரபஞ்களையும் பாதுகாக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள், வர்ணிக்கும், வெளி உலகங்களில் வாழும், 33 கோடி தேவர்களும் துதித்து வணங்கும் மலையாகிய, திருத்தணியில் வாழும் வேலாயுதக் கடவுள், தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன், பயமில்லாதவன், மனத் துன்பம் இல்லாதவன், பாஞ்ச சனியம் எனும் சங்கு, நாந்தகம் எனும் வாள், பெருமை மிக்க சுதர்சனம் எனும் சக்ரம், சாரகங்கம் எனும் வில், கெளமேதகம் எனும் கதை, ஆகியவைகளை ஏந்தியுள்ள புயங்களை உடையவனும், மாதவனும் முராரியும் திருமாலும், மது கைடவன் என்ற இரு அசுரர்களை அழித்தவனாகிய திருமாலினுக்கும், மகாலட்சுமிக்கும், மருமகன், முருகவேள் குமரக் கடவுளின், வேலும் மயிலும் துணை என்கிற மகா மநிதிரத்தின் பொருளாக நின்று அதை ஜெபிக்கும் அடியார்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில் தான் அது. 

மயில் விருத்தம் - 6சின்துப்கைரவி - கண்ட சாபு

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறசகல லோகமு நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்தகாரம் பிறன்டிட நெடும் 
ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்கற்றை கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகளசித்ரப் பயோதர கிரி
தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்திருத்தணி மகீதரன் இருங்க்
கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலயக்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரிகிழிபட நடாவு மயிலே
(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)

நான்கு யுகங்களின் முடிவில் எல்லாம் அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று, திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும், எல்லா உலகங்களும் அச்சப்படவும், சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும் இந்தராதி அமரர்கள் குழப்பமடையவும், உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த சிவனார், ஒப்பற்ற சர்வ சங்கார நடனம் செய்த சமயம், பிரளய இருள் மூடி இருந்தது போல், விரிந்த மேல் உலகத்தின் உச்சியும், வானத்தின் உச்சியும், மறையும்படி செய்த பசிய தோகையை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) பேரழகுடைய, குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும், கஸ்தூரியையும் புனைந்த, இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட, தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின், மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான, குமரக் கடவுள், திருத்தணி மலையில் வாழ்பவன், பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக ஏந்தப்பட்டவன், இசைக்கு ஆதாரமான ஏழு சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன், கருணைக் கடல், கிருத்திகை மாதர்களின் புதல்வன், வலிமை மிக்க சூரபத்மாதிகள் மடியவும், கிரவுஞ்ச மலை பிளவுபடவும், போர்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த மயிலே தான் அது. 

மயில் விருத்தம் - 7பீம்பலாச் - கண்ட சாபு

தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்ஜகதலமு நின்று சுழல
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகைதீக் கொப்புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்பதைபதைத்தே நடுங்க
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவருபச்சை ப்ரவாள மயிலாம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீரஅமிர்த்த கலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பரமானந்த வல்லி சிறுவன்
கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதாரகுருதரு திருத்தணிகை வேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதிகுடிபுகுத நடவு மயிலே
(பச்சை ப்ரவாள மயிலாம்வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)

மிகவும் நன்றாக, சமுத்திரங்களும், எட்டுத் திசைகளும், மேல் வானமும், பூவுலகும், நின்ற நிலையில் சுழற்சி அடையவும், விளங்குகின்ற, ஆயிரம் பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும், கொடிய உச்சியின் மேல் உள்ள படங்கள் நெருப்பைக் கக்கவும், பயத்தை அடைந்த, கனத்தப் படக் கூட்டங்களை உடைய, ஆதிசேடன் முதலான சர்ப்பக் கூட்டங்கள், பட படவென்று அச்சமுற்று நடுங்கவும், எங்கும் பரந்துள்ள சக்ரவாளகிரி, தூள் தூளாகப் போகவும், பயணத்திற்கு ஏற்றபடி சவாரிக்கு வரும், பச்சை நிறத்தையும் பவள நிறத்தையும் உடைய தோகைகளைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) மிக்க கீர்த்தி உடையதாய், புளகாங்கிதம் கொண்டதாய் ஒளி மிகுந்ததாய், சந்தனப் பூச்சுக்கள் அணியப் பெற்றதாய், அமிர்தம் நிறைந்த குடத்தைப் போன்ற தன பாரங்களைக் கொண்டவள், தோகையை விரித்து ஆடும் மயிலைப் போன்றவள், பேரழகு உடையவள், பேரானந்தத்தில் திகழ்ந்து கொண்டிருப்பவள், இப்பேற்பட்ட பார்வதி தேவியின் திருக்குமரன், கோரமான முத்தலை சூலத்தை ஏந்தியவரும், முக்கண்ணரும் நிமிர் சடையானும், லோக குருவாகிய சிவபெருமான், தந்தருளிய, தணிகேசன், கொடிய செயல்களையே செய்து வந்த அசுரர்களின் வயிற்றில் எரி புகவும், தேவர்கள் அமராவதி நகரில் குடியேறவும், செலுத்திய மயிலே தான் அது. 

மயில் விருத்தம் - 8மாண்ட் - கண்ட சாபு

செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரைசிந்தப் புராரி அமிர்த்தம்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்தீவிஷங்க் கொப்புளிப்ப
சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகலசங்கார கோர நயன
தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொருசண்டப் பரசண்ட மயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீத் உலாவியவிருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனைவெளிப்பட உணர்த்தி அருளி
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தசுவாமி வாகனம் ஆனதோர்
துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குலதுஷடர் நிஷடுர மயிலே
(சண்ட ப்ரசண்ட மயிலாம்)

(வாசுகியின்) வரிசையாக அமைந்துள்ள படங்களின் கூட்டம், சிவந்த நிறமுள்ள குபேரனின் செல்வத்தைப் போன்ற, விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை, சிதற, திரிபுர சம்ஹாரியான சிவனார் முன்பு அமிர்தம் போல் உண்ட ஆலகால விஷம், மீண்டும் தோன்றி விட்டதோ என அனைவரும் அஞ்ச, பிளவு பட்ட ஆயிரம் வாய்களும், நெருப்பைப் போல் எரியும் விஷத்தைக் கக்க, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட தேசங்கள் யாவையும், ஒரே மூச்சில் அழிக்க வல்ல, கொடூரமான பார்வையை உடைய, வீரமும் கொடூரமும் உள்ள வாசுகியின், படக்கூட்டங்களை ஒரே அடியாகத் தூக்கி வீசுகிற, உக்ரமும் வேகமும் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) வீரம் மிக்க வேடர் வம்சத்தில் வளர்ந்து வந்த, வள்ளி புனத்திற்கு சென்று உலாவி வந்த, கிழ ரூபம் எடுத்த மேலோன், சானித்தியம் கொண்டு திகழும் திருத்தணி தலத்தில் வாழும் வேலாயுதக் கடவுள், என்னுடைய பூர்வ ஜென்ம வினைகள், துன்பத்தை ஒழித்து, நான் யார் என்பதை எனக்கு உபதேசம் மூலமாக உணர்த்தி அருளி, இன்ப துன்பங்களை கடந்த அத்துவித நிலையில் என்னை இருத்தி அருளிய கந்த சுவாமி, வாகனமாக திகழும், ஒப்பற்ற, குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்ட, பெருமை உள்ளதும் அகன்றதுமான, அசுரர்குல தீயோர்களை கொடுமையை காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது. 

மயில் விருத்தம் - 9டுர்கா - கண்ட சாபு

சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீலகிரி எனவும் ஆயிரமுக
தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்திங்கள் சங்கெனவும் ப்ரபா
நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடையநின்ற மா முகில் என்னவே
நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொருநீலக் கலாப மயிலாம்
அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்அடியவர்கள் மிடி அகலவே
அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்அலங்கற்குழாம் அசையவே
மகரகன கோமள குண்டலம் பல அசையவல்லவுணர் மனம் அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசையவைய்யளி ஏறு மயிலே
(வையாளீ ஏறு மயிலேநீலக் கலாப மயிலாம்)

பொன் நிறமான சிகரங்களை உடைய, மேரு மலை என்று சொல்லும்படியாகவும், கைலாய மலை எனும்படியாகவும், நீலோற்பல மலர்கள் வளரும் தணிகை மலை எனும்படியும் (இவ்வாறு பல நிறங்களைப் பெற்று) ஆயிரம் கிளை நதிகள் கொண்ட கங்கை, யமுனை நதி போல, ஒளி வீசும், வெண்நிலா போன்ற சங்கின் நிறத்தைப் போலவும், தேவர்களின் சிலைகளை அலங்கரிக்கும் திரு வாச்சி போலவும், எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும், நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும், தோகையை வீசி நிமிர்ந்திருக்கும், ஒப்பற்ற, நீல நிறத் தோகையைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) அகில் மருக் கொழுந்து மணம் வீசும், திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன், தன்னுடைய பக்தர்களின் வறுமை நீங்கும்படி, திருக் கரத்தில் வலிமை வாய்ந்த வேலாயுதம் விளங்கி நிற்கவும், பன்னிருத் திருத் தோள்களில் பலவித மலர்களில் தொடுக்கப்பட்ட மாலைகள் அசையவும், மீன் வடிவமுள்ள பொன்நிறமான, அழகிய காதில் குண்டலங்கள் அசையவும், கொடிய அரக்கர்களின் மனம் சஞ்சலப் படவும், மயக்கம் தரும் கிரவுஞ்ச கிரி நடுங்கவும், பாதாள லோகம் கிடுகிடென நடுங்கவும், எட்டுத் திக்குகளும் அசைவுறவும், பவனிக்காக சவாரிக்கு புறப்படும் மயிலே தான் அது. 

மயில் விருத்தம் - 10மத்யமாவதி - கண்ட சாபு

நிராஜத விராஜத வரோதய பராபரநிராகுல நிராமய பிரா
நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறிநிலாவிய உலாச இதயன்
குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்குரானிழல் பராவு தணிகை
குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய குலாவிய கலாப மயிலாம்
புராரி குமரா குருபரா எனும் வரோதயபுராதன முராரி மருகன்
புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புகலாகும் அயில் ஆயுத நெடுன்
தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வலசாதனன் வினோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்ஷடானனன் நடாவு மயிலே
(மயிலே, ஷடானனன் நடாவு மயிலேஷடானனன் நடாவு மயிலே)

'நி' + 'ராஜத', மூன்று குணங்களில் ஒன்றான ராஜத குணம் அற்றவன், 'வி' + 'ராஜத', ராஜத குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவன், பரமேஸ்வரன், மன வருத்தம் இல்லாதவன், 'நிர்' + 'அமயம்' (நோய்), நோய் இல்லாதவன், தலைவன், தர்ம நெறி அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால், நன்நெறி பூண்டு ஒழுகி மனக்களிப்புடன் எப்போதும் இருப்பவன், குரா மரங்களில் தோன்றி, கலந்து வெளிப்பட்டு விளங்கும், பருத்த அடிமரத்தின் கீழ், (திருவிடைக்கழியில்) சானித்தியத்துடன் விளங்குபவன், ஒளி வீசும், குரா மரங்களின் நிழலில், படர்ந்திருக்கும், திருத்தணிகை முதலிய சிரேஷ்டமான மலை முதல், பூவுலகெங்கும், களிப்புடன் திரிந்து, குலாவுகின்ற தோகை மயில் (அது யாருடையது என வினாவினால்) திரிபுரமெரித்த சிவ பெருமானின் மைந்தா, சிவ குருமூர்த்தியே, என்று துதித்து வணங்கும், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குபவன், பழம் பெரும் கடவுளானவரும், 'முரன்' என்ற அசுரனைக் கொன்றவரும் ஆன திருமாலின் மருமகன், (பழங்களையே உண்டு வாழும்) கிளி போன்ற இந்திராணியால், வணங்கப்படுகின்றவன், இந்திரனுக்கு சரணாகதி அளித்த வேலாயுதக் கடவுள், நீண்ட பூமியின் கண் உள்ள மலைகளில் வாழும், வேடுவர்களின் குலத்திற்கு சூரியனைப் போல், மாப்பிள்ளையாகிய பேரழகன், வலிமையை சாதித்தவன், போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன், மலையான கிரவுஞ்சத்தை அழித்தவன், தொந்தரவுசெய்து வந்த சூரபத்மாவை, கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன், நன்மையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆறுமுகப் பெருமான், செலுத்துகின்ற மயிலே தான் அது. 

மயில் விருத்தம் - 11மத்யமாவதி

என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒருநம் பிரானான மயிலை
பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறை ஞூல்மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிஜ மடந்தை யுடன் வாழ்அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதா சனம் பெறுவர் மேல்ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்
அழியா வரம் பெறுவரே.
(அழியா வரம் பெறுவரேஅழியா வரம் பெறுவரே)

ஒரு நாள் கூட தவறாமல் எப்பொழுதும், ஒப்பற்ற, நீர் மடுவில், இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல மலர் விளங்குகின்ற, தணிகாசலத்தில் வாழும், எமது தெய்வமாகிய கந்தக் கடவுள், தேவர்களின் தலைவன், ஊர்தியாக ஏறும், ஒப்புவமை இல்லாத நாம் வழிபடும் தெய்வமான மயில் வாகனத்தை, பல நாட்களாக துதித்து வணங்கும், அருணகிரிநாதனாகிய நான், இயற்றிய, இனிமை நிறைந்ததும், விசித்ரமான அழகுகள் நிறைந்ததும், இசைக்குரிய பாடலாகச் சொன்ன, எவ்வித குற்றமும் இல்லாத, இந்த பத்து விருத்தப் பாக்களையும், தினமும் பாராயணமாக ஓதி உணர்ந்தவர்கள், மிகவும் பழமையான வேதங்கள், நிலை பெற்று விளங்கும், பிரம தேவனின் சொரூபத்தை அடைவார்கள், பிரம்மனின் அன்ன வாகனத்தில் ஏறும் பாக்யத்தைப் பெறுவார்கள், கலைவாணியாகிய சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்று அவருடன் கூடி வாழ்வார்கள், சுறா மீன்கள் வாழும் சமுத்திரத்தின் தலைவனாகிய வருண பதவியை அடைவார்கள், கருட வாகனத்தில் ஏறுவார்கள், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும் சிறந்த தலைமைப் பதவியை பெறுவார்கள், தேவேந்திரனுடன் அயிராவதத்தின் மேல் பவனி வருவார்கள், தேவர்கள் போல் அமுதத்தை அருந்தி மகிழ்வர், அதற்கு மேலும் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்யப் பெறுவார்கள், மிகச் சிறந்த பெருமையும் புகழும் அடைவார்கள், முடிவில் அழிவில்லாத முக்தி சாம்ராஜ்யத்தை அடைவார்கள். 

மயில் விருத்தம் முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.