LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !!

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் சாரங்கபாணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழிக் காக்க தன்னுயிரை தீயினுக்குக் கொடுத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுத்தான் என்பது மொழிப் போராட்ட வரலாறு. 


குத்தாலத்தை அடுத்த மருதஞ்சேரயில் கடந்த 1945 ல் பிறந்த சாரங்கபாணி மயிலாடுதுறை ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து வந்தார். " தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்பவர்கள் உண்மையான தமிழர்கள்" என உணர்ச்சிக் கொந்தளிப்போடு தொடர்ந்து மாணவர்களிடம் பேசி மாணவர் போராட்டத்தை வேகப்படுத்தும் வேளைகளில் வேகம் காட்டிய சாரங்கபாணி, அதன் தொடர்ச்சியாக 15.03.1965 அன்று உடலுக்கு தீ வைத்துக் கொண்டு உயிர் துறந்தார்..


சாரங்கபாணி தமிழ் மொழிக்காக செய்த உயிர் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு கடந்த 29-01-2007ம் தேதி, அவர் பயின்ற ஏவிசி கல்லூரி வாயிலில் நினைவுத்தூனை நிறுவியது. மேலும் அவரது நினைவாக மயிலாடுதுறையில் ஒரு மேம்பாலம் இருக்கிறது.

by Swathi   on 15 Mar 2014  2 Comments
Tags: Mayiladuthurai Sarangapani   Sarangapani   சாரங்கபாணி   ஏ.வி.சி   இந்தி எதிர்ப்பு போராட்டம்        
 தொடர்புடையவை-Related Articles
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !!
கருத்துகள்
25-Nov-2015 12:21:04 SENTHIL said : Report Abuse
hindi must be ban in THAMIL NAADU.
 
23-Jan-2015 09:22:25 அப்பர்சுந்தரம் said : Report Abuse
மாயவரம் பல்வேறு புகழ் பெற்ற ஊர் என்றால் அதில் மிக முக்கிய பங்கு மொழிப்போருக்கு உண்டு என்றால் மிகையாகாது. அன்னை தமிழை, தாய் தமிழை, பேசும் தமிழை காத்திட வாய்சொல் வீரராக மட்டுமல்லாது செயலில் இறங்கி போராடினார் சாரங்கபாணி. பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்த தானே தனது தேகத்தில் தீ வைத்துக்கொண்டு தமிழ் வாழ்க .இந்தி ஒழிக என்று கூறியவாறே தாய் மண்ணில் சரிந்தார். இன்னுயிர் நீத்ததால் இந்தி விரட்டப்பட்டது. உலகம் உள்ள அளவில் அல்லது தமிழ் உள்ளளவில் சாரங்கபாணியின் நினைவும் அகலாது. -- அப்பர்சுந்தரம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.