|
||||||||
மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி.. |
||||||||
![]() சென்னையில் மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களால் 100 அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி தொடங்கிவைத்த திருக்குறள் முற்றோதல் இயக்கம் இலவச திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டம் , மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி நடத்த இடமும், ஒரு முழுநேர பயிற்சியாளருக்கான மாத ஊதியமும் வழங்க முன்வந்துள்ள திருக்குறள் புரவலர் மதிப்பிற்குரிய திரு.ஜெனிபர் பவுல்ராஜ் (மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம்) அவர்களுக்கு நன்றி..
ஒவ்வொரு மாவட்டத்திலும்:
*மாவட்டத்திற்கு 2000 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசத் திருக்குறள் நூல்கள் வழங்குதல் ( புரவலர்:உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் , ஹார்வர்டு தமிழிருக்கை புரவலர் மருத்துவர். ஜானகிராமன் , அமெரிக்கா )
* மாவட்டத்திற்கு ஒரு திருக்குறள் முற்றோதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
* மாவட்டம் முழுதும் பயணித்து பள்ளிகளிலும், கிடைக்கும் இடங்களிலும் தொடர்ந்து திருக்குறள் முற்றோதல் உத்திகளை கற்றுக்கொடுத்து ஆண்டுக்கு 100 மாணவர்களை உருவாக்கும் திறனுடைய தமிழ்ப் படித்த திருக்குறள் ஆர்வமுள்ள ஒருவருக்கு திருக்குறள் முற்றோதல் வேலைவாய்ப்பு.
* அந்தந்த மாவட்டத்தை சார்ந்த ஒரு தமிழ் உணர்வுள்ள, அறம் சார்ந்த வணிக நிறுவனம் திருக்குறள் புரவலராக அடையாளம் காணப்பட்டு மாவட்டத்தில் ஒரு பயிற்சியாளருக்கு அடிப்படை ஊதியம் வழங்க ஏற்பாடுசெய்தல்.
* ஆண்டு முழுதும் 100 , 500 , 1000 , 1330 திருக்குறள் என்று ஒவ்வொரு நிலையிலும் மாவட்ட அளவில் மாணவர்களை ஊக்குவித்து , மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருக்குறள் புரவலர், பயிற்சியாளர் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தி மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, நூலகத்துறை மாவட்ட ஆளுமைகளை அழைத்து நிகழ்ச்சி நடத்தி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு.
உங்கள் மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக, திருக்குறள் புரவலராக, பயிற்சியாளராக விருப்பமா ? உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு kural.mutrothal@gmail.com மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.
திருக்குறள் முற்றோதல் இயக்கம் நன்கொடை பெறுவதில்லை. எனவே ஆங்காங்கு ஏற்படும் தேவைகளை அந்தந்த மாவட்ட திருக்குறள் ஆர்வலர்கள், புரவலர்கள் இணைந்து பொறுப்பேற்று தற்சார்பு இயக்கமாக செயல்படுவோம்.
திருக்குறள் பரப்புரை சேவையில்...
-உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
27-05-2023
|
||||||||
![]() |
||||||||
by Swathi on 27 May 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|