கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. மயில் போன்ற அட்டைக் கூட்டின் நடுவில் இருக்கும் சிறுவனே மயிலின் முன் பகுதியைப் பிடித்துக் கொண்டு சிவன், முருகன் போன்ற வேடங்களிட்டுக் கொண்டு மயில் போன்று அகவிக் கொண்டும், தோகை விரித்தும் ஆடுவான். மயிலாட்டத்தில் குரல் சாகசம், நடை சாகசம், தோகை சாகசம் போன்றவை முக்கியமாகக் கருதப்படுகிறது.
|