LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

மெய்ப் பொருள் நாயனார்

  ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.


     அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.


     இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.


     விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.


     அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.


     சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.


     இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.


     தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.


     இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, “தத்தா நமர்” இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.


     மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.


     தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.