|
||||||||
நினைவுகள் |
||||||||
இந்த
நெஞ்சைக் கழற்றி நாய்க்குப் போட்டால்
நின்று போகலாம்.
அது
இருந்த இடத்தில் களிமண் நிறைத்தால்
ஓட்டை மறையலாம்.
நிமிடத்திற்குள் நிலத்தை வெட்டித்
தண்ணீர் காணும்,
கப்பலில் பறக்கும்,
கடலில் மூழ்கி முத்தும் குளிக்கும்.
செத்துப்போனதை செவியில் பிடித்து
இழுத்துவந்து கண்முன் வைக்கும்.
ஆடை உாியும்,
அலுத்துக் கொண்டு சுருட்டிப் படுத்தால்
ஆளை உசுப்பும்.
சும்மா எனக்கு முதுகில் தட்டும்,
சுகமாய் இருக்கும்.
இருந்தாற்போல குணத்தை மாற்றி
புழுத்துக் கிடக்கும் பொன்னாங்கண்ணியை
கந்தப் பார்க்கும்.
கொத்தைக் காட்டி
ஆட்டைக் கூட்டும்
குதியில் தேனைத் திறாவி விட்டு
நக்கச் சொல்லும்.
ஓ....
அவைகளுக்குத்தான் அற்புதம் தொியும்.
அவைகளுக்குத்தான் அபார சக்தி.
நுரையாகவும்,
குமிழியாகவும்,
முட்டையாகவும்,
நினைவுகள்....
அலையாகவும்,
சிலநேரம்,
சீறிக் கொத்தும் பாம்பாகவும்
அவைதான்....
இந்த நெஞ்சைக் கழற்றி நாய்க்குப் போட்டால் நின்று போகலாம்.
அது இருந்த இடத்தில் களிமண் நிறைத்தால் ஓட்டை மறையலாம்.
நிமிடத்திற்குள் நிலத்தை வெட்டித் தண்ணீர் காணும், கப்பலில் பறக்கும், கடலில் மூழ்கி முத்தும் குளிக்கும்.
செத்துப்போனதை செவியில் பிடித்து இழுத்துவந்து கண்முன் வைக்கும். ஆடை உாியும், அலுத்துக் கொண்டு சுருட்டிப் படுத்தால் ஆளை உசுப்பும்.
சும்மா எனக்கு முதுகில் தட்டும், சுகமாய் இருக்கும். இருந்தாற்போல குணத்தை மாற்றி புழுத்துக் கிடக்கும் பொன்னாங்கண்ணியை கந்தப் பார்க்கும்.
கொத்தைக் காட்டி ஆட்டைக் கூட்டும் குதியில் தேனைத் திறாவி விட்டு நக்கச் சொல்லும்.
ஓ.... அவைகளுக்குத்தான் அற்புதம் தொியும். அவைகளுக்குத்தான் அபார சக்தி.
நுரையாகவும், குமிழியாகவும், முட்டையாகவும், நினைவுகள்....
அலையாகவும், சிலநேரம், சீறிக் கொத்தும் பாம்பாகவும் அவைதான்....
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|