LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

மெத்தப் படிப்பும்….உருகிய வெண்ணையும்…

     ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர். அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான். தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம். அவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை மேய்க்கிறான் என்பதற்காக அவனுக்கு நல்ல சாப்பாடு,முட்டை, பால் எல்லாம் கொடுப்பார். தம்பி பாடம்தானே படிக்கிறான் அவனுக்கு அதிக உழைப்பு இல்லை என்பதால் அண்ணனுக்குக் கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார். ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு உறவுக்கார பாட்டி வந்தாங்க. அம்மா செய்வதைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க அம்மா கடினமான உழைப்பு மாடு மேய்ப்பவனுக்குத்தானே படிப்பவனுக்கு அவ்வளவு சக்தி விரையமாகாது என்றாள். பாட்டி சொன்னாங்க பெரியவன் மாடுகளை வயலில் அவிழ்த்து விட்டு விட்டு நன்றாக மரத்தடியில் படுத்துத் தூங்குகிறான். அவனுக்கு எந்த கவலையும் இல்லை.


     ஆனால் படிப்பவனுக்குத்தான் அதிக உழைப்பு தேவைப்படும்.பாடங்களைப் படிக்கவும்,எழுதவும் ,மனனம் செய்யவும் ,பரீட்சைக்குத் தயாராகவும் என இவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும். மேலும் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் செய்கிறான். இப்படி படிக்க விளையாட என அதிக சக்தி தேவைப்படும். படிப்பது என்பது சுலபமல்ல என்று கூறினாள். இதைச் சோதித்துப் பார்க்க அம்மாவுக்கு ஒரு உபாயமும் சொன்னாள். இரவு தூங்கும் போது இருவரின் தொண்டைக்குழியிலும் ஒரு உருண்டை வெண்ணையை வைக்கச் சொன்னாள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது. படிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது. பாட்டி சொன்னாள் ‘படிப்பவனுக்கு எந்த நேரமும் அதே சிந்தனை,கவலை ,பயம்.அதனால் உடல் சூடாகி வெண்ணை உருகி விட்டது. ஆனால் மாடு வீட்டுக்கு வந்த பிறகு மறு நாள் வரை பெரியவன் கவலைப் படுவதில்லை. எனவே அவன் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது.எனவேதான் வெண்ணை உருகவில்லை.


     அம்மா புரிந்து கொண்டு படிக்கும் சின்ன மகனுக்கும் நல்ல உணவு,பால்,பழம் எல்லாம் தரத் தொடங்கினாள். குட்டீஸ் படிப்பதாலும், விளையாடுவதாலும் வீணாகும் சக்திக்கு ஈடு செய்ய நீங்கள் நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிடப் பழகனும். காய்கறிகள்,கீரைவகைகள்,பழங்கள் பால் எல்லாம் சாப்பிடனும்.சில குட்டீஸ் காய்கறிகளே சாப்பிட மாட்டாங்க. சிலபேர் பால் வாசனை பிடிக்காதுன்னு நோ சொல்லிடுவாங்க. சில குட்டீஸ் சாப்பாடு சாப்பிடாம ஒன்லி ‘நொறுக்ஸ்’ [ஸ்நேக்ஸ்] மட்டும் சாப்பிடுவாங்க. வெறும் ஸ்நேக்ஸ்,சாக்லெட்ஸ்,பிஸ்கட்ஸ் மட்டும் சாப்பிடுதலும் பெப்ஸீ,கோக் மட்டுமே அடிக்கடி குட்ப்பதும் தப்பு.

by kalaiselvi   on 07 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
24-Jul-2018 07:21:30 vennila said : Report Abuse
nice information
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.