|
||||||||||||
தினை அரிசி பாயசம் |
||||||||||||
தேவையானவை 1. தினை அரிசி, பால், திக்கான தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப் 2. நெய் - ஒரு டீஸ்பூன் 3. முந்திரிபருப்பு - 10 செய்முறை 1. கடாயில் நெய் விட்டு தினை அரிசியை வறுத்து, குக்கரில் போட்டு ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
2. ஆறியதும், குக்கரை திறந்து அதில் பால் ஊற்றவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தினை அரிசியில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
3. எல்லாம் ஒன்றாக கலந்து திக்காக வரும் சமயத்தில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
4. நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை அதில் சேர்த்துப் பரிமாறவும். |
||||||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||||||
Tags: தினை அரிசி பாயசம் Millet Recipes | ||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|