LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

மின்னெலை ரசம் (Minnelai Soup)

தேவையானவை :


மின்னெலை -20 இலைகள்

புளிக்கரைசல் - ஒரு கப்

உப்பு -தேவையான அளவு

கடுகு -1/2 டீஸ்பூன்

துவரம்பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்

தக்காளி -ஒன்று (நறுக்கியது)

ஜீரகப்பொடி -1/2 டீஸ்பூன்

மிளகுப்பொடி- 1/2 டீஸ்பூன்

வெந்தயம் -1/ 2 டீஸ்பூன்

கருவேப்பிலை -1 கொத்து

பச்சை மிளகாய் -1 (நறுக்கியது)

வெங்காயம் -பாதி

பூண்டு பல்  -4

மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்

சோம்புப்பொடி- 1/2 டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி- 1/2 டீஸ்பூன்

எண்ணை -ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை :


1.முதலில் வெங்காயம், பூண்டை தோல் உறித்து ஒன்றாய் சேர்த்து நசுக்கி கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்பிறகு கரைத்துவைத்துள்ள புளிகரைசலில் பருப்பு நீரை சேர்க்கவும்.அதனுடன் மிளகாய்ப்பொடி தவிர்த்து அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய வெங்காயம் பூண்டில் பாதி சேர்க்கவும்.

2.நன்கு கழுவிய மின்னெலையை புளித்தண்ணீரில் சேர்த்து, கைகளால் நன்கு நொறுங்க பிசையவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். புளிக்கரைசல், பருப்பு நீர் அனைத்தும் சேர்ந்து முக்கால் லிட்டர் அளவிற்கு இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விடவும். அதில் கடுகு, வெந்தயம், போட்டு தாளித்து, ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்


3.மேலும் அதனுடன் மீதம் வைத்துள்ள வெங்காயம் பூண்டைப் போடவும். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின்பு, மிளகாய்ப்பொடியை சேர்க்கவும்.மிளகாய் போடி சேர்த்து அதை சிறிது நேரம் கிளறிவிடவும்.கிளறிய பின்பு அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்கலவையை ஊற்றவும். கலவையை மிதமான தீயில் வைக்கவும்.ரசம் நன்கு நுரைத்து கொதி வரும்போது கிளறிவிட்டு இறக்கவும். 

Minnelai Soup

Ingredients for Minnelai Soup:

 

Minnelai -20 Leaves

Tamarind Juice-1 Cup

Salt-as Needed

Mustard-1/2 tsp

Split Gram-1 tbsp

Tomato-1 (Chopped)

Cumin Powder-1/2 tsp

Pepper Powder-r1/2 tsp

Fenugreek-1/2 tsp

Curry Leaves-1 Bunch

Green Chilly-1 (Chopped)

Onion-Half

Garlic-4 Flakes

Turmeric Powder-1/2 tsp

Fennel Powder-1/2 tsp

Chilly powder-1/2 tsp

Oil-1 tbsp

 

Procedure to make Minnelai Soup:

 

1.Peel the onion,garlic and grind them. Wash the split gram and boil in a cooker and keep aside. Mix the tamarind juice along with dal water. Then add the given masala except chilly powder. Then add chopped tomato, green chilly, half quantity of grinded onion and garlic.

2. Wash the minnelai, mix with tamarind juice and mash well by using hands. Then add salt together with that juice. Mix tamarind juice and dal water , take 3/4th quantity of this mixure and set aside. Heat oil in a pan, add mustard, fenugreek, dry chilly and let them splutter.

3. Then add the remaining onion, garlic paste. After that add curry leaves and chilly powder and stir well. Then add the prepared tamarind mixure and allow medium flame. when foam comes, stir well.

 

 

 

by valarmathi   on 28 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.