LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள்

தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !! 

மயன்மார் எனும் பர்மா நாட்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் குடியேறிய தமிழர்கள் அங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வந்தாலும் , பர்மாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழர்களின் நிலங்கள் பர்மா அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதனால் பல லட்சம் பர்மா தமிழர்கள் நாட்டை விட்டு தமிழகம் திரும்பிய வரலாறும் உண்டு. அங்கேயே தங்கி விட்ட பர்மா தமிழர்களின் தாய் மொழிக் கல்வி உரிமை பறிக்கப்பட்டு பர்மா மொழி திணிக்கப்பட்டது. தமிழ் வழிப் பள்ளிக் கூடங்கள் பர்மா அரசால் மூடப்பட்டன . இதனால் 1960 க்கு பிறகு பர்மா தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாய் மொழியை மறக்கத் தொடங்கினர் . அவர்களுக்கு தமிழை எழுதவோ , படிக்கவோ , பேசவோ தெரியாமல் போனது . இப்போது அங்குள்ள புதிய தலைமுறை தமிழர்கள் , தாங்கள் ஏன் தமிழ் மொழியை படிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளனர் . தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு , வணிக வாய்ப்பு கிடைக்காத நிலையில் தாங்கள் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றனர் . இது ஒரு நியாயமான கேள்வியாக இருந்தாலும் , தமிழர்களின் அடையாளம் அவர்கள் தாய் மொழி தானே . அதை தக்க வைத்துக் கொண்டால் தானே அவர்கள் தமிழர்களாக தங்களை அடையாளப்படுத்த இயலும் என்று கேட்கின்றனர் தமிழ்ப் பற்றாளர்கள். 

உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியில் எழுதப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு உலகத் தமிழர்களுக்கு என்று ஒரு அரசு வேண்டும் . தமிழர்களுக்கான ஒரு அரசு, நாடு உலகில் இல்லாத காரணத்தால் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருகின்றனர் . இந்தியாவிற்கு ஒரு இந்தி அரசு உள்ளது . அந்த அரசு இந்தி மொழியை உலகில் புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வழங்கி வருகிறது . வளைகுடா நாட்டில் கூட இந்திப் பள்ளிக் கூடங்கள் அமைத்து இந்தியை கற்றுக் கொடுக்கிறது இந்திய அரசு . அதே போல் பர்மா நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இந்தி பாடங்களை கற்றுக் கொடுக்க முன்வருகிறது . ஆனால் பர்மா தமிழர்களுக்கு தமிழ்ப் பாடங்களை கற்றுக் கொடுக்க இந்திய அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை . வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்ப் பாடங்களை வழங்க தமிழக அரசு இனியாவது முயற்சி மேற்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு என்று ஒரு வெளியுறவு துறை உருவாக வேண்டும் . இது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 

பர்மா நாட்டில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை தக்க வைக்க பெரு முயற்சி எடுத்து வருகின்றனர் . சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியில் இப்போது தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு வருகிறது . இங்கு தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது . தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வசதி படைத்த தமிழ் வணிகர்கள் சம்பளமும் கொடுக்கின்றனர். தமிழ்க் கோவில்கள் பல அங்கு இருந்தாலும் அனைத்திலும் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளது . தமிழர்களின் பண்பாட்டை காக்கவும் அங்கு பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. 

by Swathi   on 06 Mar 2014  1 Comments
Tags: பர்மா   மியான்மர்   தமிழ் மக்கள்   Miyanmar Tamil People   Miyanmar        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
06-Aug-2014 12:18:54 SALEM ARUL.A said : Report Abuse
Thamizhai Valarkka Thamizhaga Arasu Uthava Vendum.Valga Thamizh
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.