LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!

நரேந்திரமோடிக்கு, விசா வழங்குவது பெரிய விசயமல்ல என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவரது செல்வாக்கும் உலக அரங்கில் உயர தொடங்கியுள்ளது. 

 

கடந்த 2002 ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திரமோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடந்து, ஏற்பட்ட கலவரத்தை நரேந்திர மோடி அடக்க தவறி விட்டதாக, புகார் எழுந்தது. இந்த கலவரத்தில் சிறுபான்மை மக்களை காக்க தவறியதற்காக, பிரிட்டனும், அமெரிக்காவும், மோடிக்கு, "விசா' வழங்குவதில், தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நரேந்திர மோடி விண்ணப்பித்தால், "விசா' வழங்க தயாராக உள்ளதாக பிரிட்டன் அரசு சமீபத்தில் தெரிவித்தது. 

 

மோடி விசா குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. பிரதமர் மன்மோகனுடன், அமெரிக்கா நட்புறவை பேணி வருகிறது. இதற்கு முன், பாரதிய ஜனதா ஆட்சி காலத்திலும், இந்தியாவுடன் நட்புறவோடு தான் இருந்தோம். எனவே, நரேந்திரமோடி பிரதமரானாலும், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதே போல, அவருக்கு, "விசா' வழங்குவது, பெரிய காரியமல்ல. இந்த விஷயத்தை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. அவர், "விசா'வுக்கு விண்ணப்பிக்கட்டும். நாங்கள் பரிசீலிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 08 Nov 2013  0 Comments
Tags: Modi   Narendira Modi   Modi US Visa   US Visa Issue   மோடி   நரேந்திர மோடி   அமெரிக்கா விசா  
 தொடர்புடையவை-Related Articles
பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள் : நரேந்திர மோடி புகழாரம் ! பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள் : நரேந்திர மோடி புகழாரம் !
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !! பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !!
ராஜ்நாத்சிங், மோடியை சந்தித்தார் வைகோ !! ராஜ்நாத்சிங், மோடியை சந்தித்தார் வைகோ !!
பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !! பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !!
மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !! மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!
பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !! பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.