|
|||||
கமல் நடிக்கும் பாபநாசத்தில் மோகன்லால் மகன்! |
|||||
![]() மலையாள நடிகர் மம்முட்டி மகனை தொடர்ந்து, மோகன்லாலின் மகன் பிரணவ்வும் தற்போது திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் திரையுலகில் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் பிரணவ்வும் எப்போது ஹீரோவாக களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் மோகன்லாலோ தனது மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார். இருந்தாலும் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மோகன்லால் நடித்த ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் பிரணவ். தொடர்ந்து பிரணவ் ஹீரோவாக அறிமுகமாவார் என மலையாள ரசிகர்கர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகவில்லையாம், கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் ‘பாபநாசம்’ என்ற படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமாகிறாராம். பாபநாசம் படம் மலையாளத்தில், மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டானா த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 02 Sep 2014 0 Comments | |||||
Tags: Papanasam Mohanlal son Pranav மோகன்லால் மகன் பாபநாசம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|