LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 786 - நட்பியல்

Next Kural >

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.(நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.
தேவநேயப் பாவாணர் உரை:
முகம் நக நட்பது நட்பு அன்று-கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு-அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பதே உண்மையான நட்பாவது. இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. அகமும் முகமும் ஒருங்கே மலர்வதே நட்பென்றவாறு.
கலைஞர் உரை:
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
Translation
Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near.
Explanation
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
Transliteration
Mukanaka Natpadhu Natpandru Nenjaththu Akanaka Natpadhu Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >