LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

மும்மணிக்கோவை

16.1:
அருடரு மடியர்பான் மெய்யை வைத்துத்
தேருடர நின்ற தெய்வநா யகநின்
னருளெனுஞ் சீரோ ரரிவையா னதென
விருள்செக வெமக்கோ ரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன நின்றிரு வுருவி
லணியம ராகத் தலங்கலா யிலங்கி
நின்படிக் கெல்லாந் தன்படி யேற்க
வன்புட னின்னோ டவதரித் தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
தீண்டிய வினைகண் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக
நின்னுடன் சேர்ந்து நிற்குநின் றிருவே.

16.2:
திருமாலடியவர்க்கு மெய்யனார், செய்ய
திருமாமகளென்றுஞ்சேரும் திருமார்பில்
இன்மணிக்கோவையுடன் ஏற்கின்றார், என்றனின்
மும்மணிக்கோவை மொழி.

16.3:
மொழிவார் மொழிவன மும்மறையாகும் அயிந்தையில்வந்து
இழிவாரிழிகவென்று இன்னமுதக் கடலாகிநின்ற
விழிவாரருள் மெய்யர் மெல்லடிவேண்டிய மெல்லியல்மேற்
பொழிவாரனங்கர் தம்பூங்கரும்புந்தியபூமழையே.

16.4:
மழையி லெழுந்த மொக்குள்போல் வைய
மழியவொன் றழியா வடியவர் மெய்ய
வருமறை யின்பொரு ளாய்ந்தெடுக் குங்காற்
றிருவுட னமர்ந்த தெய்வ நாயக
நின்றிருத் தனக்கு நீதிரு வாகி
யிந்துதன் னிலவுட னிலங்குதன் மையினை
நந்துத லில்லா நல்விளக் காகி
யந்தமி லமுத வாழியாய் நிற்றி
பாற்கட றன்னிற் பன்மணி யன்ன
சீர்க்கணஞ் சேர்ந்த சீலமெல் லை
யிலையடியவர் பிழைக ணின்கருத்
தடையாதடையவாண் டருளு மரசனு நீயே
யுயர்ந்தநீ யுன்னை யெம்முடன் கலந்தனை
யயிந்தைமா நகரி லமர்ந்தனை யெமக்காய்ச்
சித்திர மணியெனத் திகழுமன் னுருவி
லத்திர மணியென வனைத்துநீ யணிதி
விண்ணு ளமர்ந்த வியனுரு வதனா
லெண்ணிய வீரிரண் டுருக்களு மடைதி
பன்னிரு நாமம் பலபல வுருவா
யின்னுரு வெங்கு மெய்திநீ நிற்றி
மீனோ டாமை கேழல்கோ ளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரிற்
றுன்னிய பரந்தீர் துவரைமன் னனுமாய்க்
கலிதவிர்த் தருளுங் கற்கியாய் மற்று
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா வுருவங் கொண்டுநல் லடியோர்
வானா ரின்ப மிங்குற வருதி
யோருயி ருலகுக் கென்னுநீ திருவோ
டேருயி ரெல்லா மெந்தியின் புறுதி
யாவரு மறியா தெங்குநீ கரந்து
மேவுருச் சூழ்ந்து வியப்பினான் மிகுதி
கொண்டிட வெம்மை யடைக்கல முலகிற்
கண்டிலங் கதியுனை யன்றிமற் றொன்றும்
பல்வகை நின்ற நின்படி யனைத்தினுந்
தொல்வகை காட்டுந் துணிந்துதூ மறையே.

16.5:
தூமறையினுள்ளம் துளங்காத்துணிவு தரும்
ஆமறிவாலார்ந்தடிமை யாகின்றோம் பூமறையோன்
பாராயணத்திற்பணியும் அயிந்தைநகர்
நராயணனார்க்கே நாம்.

16.6:
ஆர்குங்கருணை பொழிவான் அயிந்தையில் வந்தமர்ந்த
கார்க்கொண்டலைக்கண்ட காதற்புனமயில் கண்பனியா
வேர்க்குமுகிழ்விக்கும் விதிர்விதிர்க்கும் வெள்கிவெவ்வுயிர்க்கும்
பார்க்கின்றவர்க்கிது நாமென்கொலென்று பயிலுவமே.

16.7:
பயின்மதிநீயே பயின்மதிதருதலின்
வெளியுநீயே வெளியுறநிற்றலின்
றாயுநீயே சாயைதந்துகத்தலின்
றந்தையு நீயே முந்திநின்றளித்தலின்
உறவுநீயே துறவாதொழிதலின்
உற்றதுநீயே சிற்றின்பமின்மையி
னாறுநீயே யாற்றுக்கருள்தலி
னறமுநீயே மறநிலைமாய்த்தலின்
றுணைவனு நீயே யிணையிலை யாதலின்
றுய்யனுநீயே செய்யாளுறைதலின்
காரணநீயே நாரணானாதலின்
கற்பகநீயே நற்பதந்தருதலின்
இறைவனுநீயே குறையொன்றிலாமையின்
இன்பமுநீயே துன்பந்துடைத்தலின்
யானுநீயே யென்னுளுறைதலி
னெனதுநீயே யுனதன்றி யின்மையி
னல்லாய்நீயே பொல்லாங்கிலாமையின்
வல்லாய்நீயே வையமுண்டுமிழ்தலின்
எஞ்ஞமாகு மெய்யநின்வியல்பே
யங்ஙனேயொக்க வறிவதாரணமே.

16.8:
ஆரணங்கள்தேட அயிந்தைநகர்வந்துதித்த
காரணராய்நின்ற கடல்வண்ணர் நாரணனார்
இப்படிக்குமிக்கு அன்றெடுத்த பாதங்கழுவ
மெய்ப்படிக்கமானது பொன்வெற்பு.

16.9:
வெற்புடனொன்றி அயிந்தையில் வெவ்வினை தீர்மருந்தொன்று
அற்புதமாக வமர்ந்தமைகேட்டு அருள்வேண்டிநிற்கப்
பற்பிலமர்ந்தசெய்யாள் படிகாடியபண்புடையெம்
விற்புருவக்கொடிக் கோர்விலங் காமயல் பெற்றனமே.

16.10:
பெற்றனைநீயே மற்றுளவெல்லாம்
பெறுவதுநின்னையுறுவதுகொள்வார்
நின்னாலன்றி மன்னாரின்ப
நின்னபொருட்டுநீயென்ன பொருட்டிலை
நின்னரு நின்றுமின்னுருத்தோன்று
நின்றனக் குநிகர் நின்னடி யடைவார்
நின்பாலன்றியன் பாலுய்யார்
வாரண மழைக்க வந்த காரணனே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
அடிவரவு: அருள்தரும், திருமால், மொழிவார்,
மழை, தூமறை, ஆர்க்கும், பயின்மதி,
ஆரணங்க, வெற்புடன், பெற்றனை, ஒருமதி.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.