|
|||||
முதிரி ஹல்வா |
|||||
தேவையானவை : முந்திரி - 200 கிராம் சர்க்கரை - 200 கிராம் ஏலக்காய் - 5 (பொடி செய்தது) நெய் - 50 கிராம் செய்முறை 1. முதலில் முந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் நைசாக பொடியாக்கிக் கொள்ளவும். 2. அடுத்ததக அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும். 3. அதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும். 4. கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும். 5. நுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|