LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

முப்பெரும் பாடல்கள் - பாஞ்சாலி சபதம் - இரண்டாம் பாகம் பகுதி - 2

53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி

திக்குக் குலுங்கிடவே-எழுந் தாடுமாம்தீயவர் கூட்டமெல் லாம்.தக்குத்தக் கென்றே அவர்-கதித் தாடுவார்தம்மிரு தோள்கொட்டு வார், ஒக்குந் தருமனுக் கே-இஃதென்பர், ஓ! ஓ! வென் றிரைந்திடு வார்; கக்கக்கென் றேநகைப் பார்-துரியோ தனாகட்டிக் கொள் எம்மைஎன் பார்.  247
மாமனைத் தூக்காயென் பார்-அந்த மாமன் மேல்மாலை பலவீசு வார், சேமத் திரவியங் கள்-பல நாடுகள்சேர்ந்ததி லொன்று மில்லை; காமத் திரவிய மாம்-இந்தப் பெண்ணையும்கைவச மாகச் செய் தான்; மாமனொர் தெய்வமென்பார்; -துரியோதனன்வாழ்கவென் றார்த்திடு வார்.  248
54. துரியோதனன் சொல்வது நின்று துரியோத னன்-அந்த மாமனைநெஞ்சொடு சேரக் கசட்டி, என்துயர் தீர்த்தா யடா! -உயிர் மாமனே! ஏளனந் தீர்த்துவிட் டாய்.அன்று நகைத்தா ளடா! -உயிர் மாமனே! அவளைஎன் ஆளாக்கி னாய்.என்றும் மறவே னடா! -உயிர் மாமனே! என்ன கைம்மாறுசெய் வேன்?   249
ஆசை தணித்தா யடா! -உயிர் மாமனே! ஆவியைக் காத்தா யடா! பூசை புரிவோ மடா! -உயிர் மாமனே! பொங்க லுனக்கிடு வோம்! நாச மடைந்த தடா! -நெடு நாட் பகை, நாமினி வாழ்ந்தோ மடா! பேசவுந் தோன்று தில்லை; -உயிர் மாமனே! பேரின்பங் கூட்டிவிட டாய்  250
என்று பலசொல்லு வான், -துரியோ தனன்எண்ணி எண்ணிக்குதிப் பான்; குன்று குதிப்பது போல்-துரியோ தனன்கொட்டிக் குதித்தாடு வான்.மன்று குழப்பமுற் றே, -அவர் யாவரும்வகைதொகை யொன்று மின்றிஅன்று புரிந்ததெல் லாம்-என்தன் பாட்டிலேஆக்கல் எளிதாகு மோ?   251
55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச்சொல்லியதுபற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
வேறு
தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக, பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக, வானத்துத் தேவர் வயிற்றிலே துப்பாய், மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க, வேதம் பொருளின்றி வேற்றுரையே யாகிவிட,  5
நாதங் குலைந்து நடுமையின்றிப் பாழாக, கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே, நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட, வான்முகிலைப் போன்றதொரு வண்ணத்திருமாலும் 10
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிடசெறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்சீதேவி தன்வதன்ம செம்மைபோய்க் காரடைய, மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட-வாலை, உமா தேவி மாகாளி, வீறுடையாள். 15
மூலமமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையறேறாள், மாயை தொலைக்கும் மஹாமாய தானாவாள், பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்.சிங்கத்தி லேறிச் சிரிப்பாள் <உலகழிப்பாள்சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்,  20
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும் சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள், கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்இடாது பணிசெய்ய இலங்குமஹா ராணி, மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி 25
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள். ஆக்கந் தானாவாள், அழிவுநிலை யாவாள்போக்கு வரவெய்தும் புதுமையெலாந் தானாவாள், மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள் 30
ஆதி பராசக்தி-அவள்நெஞ்சம் வன்மையுறச்சோதி கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்முகத்தே இருள் படர-
56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது  அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன், துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி 35
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:-செல்வாய், விதுரா! நீ சக்தித் திருப்பதேன்? வில்வா ணுதலினாள், மிக்க எழி லுடையாள், முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள், இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால் 40
சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி, மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன்நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கேஎன்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய் என்றான்.
57. விதுரன் சொல்வது துரியோ தனன் இச் சுடுசொற்கள் கூறிடவும் 45
பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு, மூட மகனே!  மொழியொணா வார்த்தையினைக்கேடுவரல் அறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய், புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல்பிள்ளைத் தவளை பெரம்பாம்பை மோதுதல்போல்,  50
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய், தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய்; நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்லுகிறேன்; என்னுடைய சொல், வேறு எவர்பொருட்டும் இல்லையடா? பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்,  55
மாண்டு தலைமேல், மகனே! கிடப்பாய் நீ, தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா? முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ? நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான்பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான். 60
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ? மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ? கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்; பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாதுவெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும்,  65
மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.சொல்லிவிட்டேன்;  பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்! புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது.பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்! வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும். 70
பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம்.மீண்டவர்க்கே ஈந்து விட்டு, விநயமுடன்ஆண்டவரே! யாங்கள் அறியாமை யால்செய்தநீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர் என்றுரைத்து, மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் 75
குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல், மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர், பூபால ரேஎன்றப் புண்ணியனும் கூறினான்.சொல்லிதனைக் கேட்டுந் துரியோதன மூடன், வல்லிடிபோல் சீச்சீ!  மடையா, கெடுக நீ 80
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே, இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொள்ளார், யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்பாரதர்க்கு வேந்தன் பணித்தான் எனக்கூறிப்பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே 85
ஈண்டழைத்து வாஎன் றியம்பினான்.ஆங்கே தேர்ப்பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்சோகம் ததும்பித் துடித்தகுரலுடனே, அம்மனே போற்றி!  அறங்காப்பாய், தாள் போற்றி! வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார் 90
மாமன் சகுனியொடு மாயச்சூ தாடியதில், பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார்.சாற்றிப் பணயமெனத் தாயேஉனை வைத்தார்.சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார் 95
எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே, நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்என்ன உரைத்திடலும், யார்சொன்ன வார்த்தையடா! சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்துமாதர் வருதல் மரபோடா?  யார் பணியால் 100
என்னை அழைக்கின்றாய்? என்றாள் அதற்கவனும்.மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்.என்றிட்டான்.நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டுவாவல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்என்னை முன்னே கூறி இழந்தாரா?  தம்மையே 105
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில்இச் செய்தி தெரிந்து வாஎன்றவளுங் கூறி இவன்போ யியபின்னர், தன்னந் தனியே தவிக்கு மனத்தாளாய்வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய. 110
உள்ளத்தை அச்சம் உலைவுறுத்தப் பேய்கண்டபிள்ளையென வீற்றிருந்தாள் பின்னந்தத் தேர்ப்பாகன்மன்னன் சபைசென்று, வாள் வேந்தே!  ஆங்கந்தப்பொன்னரசி தாள்பணிந்து போதருவீர்என்றிட்டேன்.என்னை முதல்வைத் திழந்தபின்பு தன்னைஎன் 115
மன்னர் இழந்தாரா?  மாறித் தமைத்தோற்றபின்னரெனைத் தோற்றாரா? என்றேநும் பேரவையைமின்னற் கொடியார் வினவிரத் தாம் பணித்தார்வந்துவிட்டேன்என்றுரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம்நொந்துபோ யொன்றும் நுவலா திருந்துவிட்டார். 120
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்ன ரெலாம்முற்றும் உரையிழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 252
58. துரியோதனன் சொல்வது
வேறு
உள்ளந் துடித்துச் சுயோ தனன்-சினம்ஓங்கி வெறிகொண்டு சொல்லு வான்; -அட! பிள்ளைக் கதைகள் விரிக்கி றாய்.-என்றன்பெற்றி யறிந்திலை போலும், நீ! -அந்தக்கள்ளக் கரிய விழியி னாள்-அவள்கல்லிகள் கொண்டிங்கு வந்த னை! -அவள்கிள்ளை மொழியின் நலத்தை யே-இங்குக் கேட்கவிரும்புமென் னுள்ள மே  253
வேண்டிய கேள்விகள் கேட்க லாம்.-சொல்லவேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம்-மன்னர்நீண்ட பெருஞ்சபை தன்னி லே-அவள்நேரிடவே வந்த பின்பு தான், -சிறுகூண்டிற் பறவையு மல்ல ளே! -ஐவர்கூட்டு மனைவிக்கு நாண மே-சினம்மூண்டு கடுஞ்செயல் செய்யு முன்-அந்தமொய்குழ லாளைஇங் கிட்டு வா. 254
மன்னன் அழைத்தனன் என்று நீ- சொல்லமாறி யவளொன்று சொல்வ தோ? -உன்னைச்சின்னமுறச் செய்குவே னடா! -கணஞ்சென்றவளைக் கொணர்வாய் என்றான்-அவன்சொன்ன மொழியினைப் பாகன் போய்-அந்தத்தோகைமுன் கூறி வணங்கி னன்-அவள்இன்னல் விளைந்திவை கூறு வாள்-தம்பி, என்றனை வீணில் அழைப்ப தேன்?  255
59. திரௌபதி சொல்லுதல்
நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின்-என்னைநல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத்தாயத்தி லேவிலைப் பட்டபின்-என்னசாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? -அவர்தாயத்தி லேவிலைப் பட்டவர்; -புவிதாங்குந் துருபதன் கன்னி நான்-நிலைசாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -பின்புதார முடைமை அவர்க்குண் டோ?  256
கௌரவ வேந்தர் சபைதன் னில்-அறங்கண்டவர் யாவரும் இல்லை யோ? -மன்னர்சௌரியம் வீழ்ந்திடும் முன்ன ரே-அங்குசாத்திரஞ் செத்துக் கிடக்கு மோ? -புகழ்ஒவ்வுற வாய்ந்த குருக்க ளும்-கல்விஒங்கிய மன்னருஞ் சூதி லே-செல்வம்வவ்வுறத் தாங்கண் டிருந்த னர்! -என்றன்மான மழிவதும் காண்ப ரோ?   257
இன்பமுந் துன்பமும் பூமியின்-மிசையார்க்கும் வருவது கண்ட னம்; -எனில்மன்பதை காக்கும் அரசர் தாம்-அறமாட்சியைக் கொன்று களிப்ப ரோ?-அதைஅன்புந் தவமுஞ் சிறந்துளார்-தலையந்தணர் கண்டு களிப்பரோ? -அவர்முன்பென் வினாவினை மீட்டும் போய்ச்-சொல்லிமுற்றுந் தெளிவுறக் கேட்டு வா  258
என் றந்தப் பாண்டவர் தேவி யும்-சொல்ல, என்செய்வன் ஏழையப் பாகனே? -என்னைக்கொன்றுவிட் டாலும் பெரிதில்லை-இவள்கூறும் வினாவிற் கவர் விடை-தரினன்றி இவளை மறுமுறை -வந்துஅழைத்திட நானங் கிசைந்திடேன்-(என)நன்று மனத்திடைக் கொண்டவன் சபைநண்ணி நிகழ்ந்தது கூறி னான்.  259
மாத விடாயி லிருக்கி றாள்-அந்தமாதர சென்பதும் கூறினான்-கெட்டபாதகன் நெஞ்சம் இளகி டான்-நின்றபாண்டவர் தம்முகம் நோக்கி னான்-அவர்பேதுற்று நிற்பது கண்ட னன்-மற்றும்பேரவை தன்னில் ஒருவரம-இவன்தீதுற்ற சிந்தை தடுக்க வே-உள்ளத்திண்மையி லாதங் கிருந்த னர்.  260
பாகனை மீட்டுஞ் சினத்துடன்-அவன்பார்த்திடி போலுரை செய்கின் றான்; -பின்னும்ஏகி நமதுளங் கூற டா-அவள்ஏழு கணத்தில் வரச் செய் வாய்? -உன்னைச்சாக மிதித்துடு வேன ! -என்றுதார்மன்னன் சொல்லிடப் பாக னும்-மன்னன்வேகந் தனைப்பொருள் செய்திடான்-அங்குவீற்றிருந் தோர்தமை நோக்கியே. 261
சீறும் அரசனுக் கேழை யேன்-பிழைசெய்த துண்டோ? அங்குத் தேவி யார்-தமைநூறு தரஞ்சென் றழைப்பி னும், -அவர்நுங்களைக் கேட்கத் திருப்பு வார்; -அவர்ஆறுதல் கொள்ள ஒருமொழி-சொல்லில்அக்கண மேசென் றழைக்கி றேன்; -மன்னன்கூறும் பணிசெய வல்லன் யான்; -அந்தக்கோதை வராவிடில் என்செய் வேன்?  262
60. துரியோதனன் சொல்வது
பாகன் உரைத்தது கேட்ட னன்- பெரும்பாம்புக் கொடியவன் சொல்கி றான்; -அவள்பாகன் அழைக்க வருகிலள்; -இந்தப்பையலும் வீமனை அஞ்சி யே-பலவாகத் திகைப் புற்று நின்றனன்; -இவன்அச்சத்தைப் பின்பு குறைக்கி றேன்-தம்பீ! போகக் கடவை இப்போ தங்கே; -இங்கப்பொற்றொடி யோடும் வருக நீ!   263
திரௌபதியை சபைக்கு அழைத்த சருக்கம் முற்றும்
ஐந்தாவது சபதச் சருக்கம்
61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்கு கொணர்தல்
இவ்வுரை கேட்டதுச் சாதனன்-அண்ணன்இச்சையை மெச்சி எழுந்தனன்-இவன்செவ்வி சிறிது புகலு வோம்; -இவன்தீமையில் அண்ணனை வென்றவன்; -கல்விஎவ்வள னேனுமி லாதவன்; -கள்ளும்ஈரக் கறியும் விரும்பு வோன்; -பிறதெவ்வர் இவன்றனை அங்சுவார்; -தன்னைச்சேர்ந்தவர் பேயென் றொதுங்கு வார்;  264
புத்தி விவேக மில்லாத வன்; -புலிபோல உடல்வலி கொண்டவன்; -கரைதத்தி வழியுஞ் செருக்கி னால-கள்ளின்சார்பின் றியேவெறி சான்ற வன்; -அவசக்தி வழிபற்றி நின்ற வன்; -சிவசக்தி நெறிஉண ராத வன்; -இன்பம்நத்தி மறங்கள் இழைப்ப வன்; -என்றும்நல்லவர் கேண்மை விலக்கி னோன்;  265
அண்ண னொருவனை யன்றி யே-புவிஅத்தனைக் குந்தலை யாயி னோம்-என்னும்எண்ணந் தனதிடைக் கொண்டவன்; -அண்ணன்ஏது சொன்னாலும் மறுத்தி டான்; -அருட்கண்ணழி வெய்திய பாத கன்; .அந்தக்காரிகை தன்னை அழைத்து வா-என் றவ்அண்ண னுரைத்திடல் கேட்ட னன்; -நல்லதாமென் றுறுமி எழுந்த னன்.  266
பாண்டவர் தேவி யிருந்த தோர்-மணிப்பைங்கதிர் மாளிகை சார்நத் னன்; -அங்குநீண்ட துயரில் குலைந்துபோய்-நின்றநேரிழை மாதினைக் கண்ட னன்; -அவள்தீண்டலை யெண்ணி ஒதுங்கி னாள்; -அடி! செல்வ தெங்கேயென் றிரைந்திட்டான்; -இவன்ஆண்டகை யற்ற புலையனென்று -அவள்அச்ச மிலா தெதிர் நோக்கி யே  267
62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
தேவர் புவிமிசைப் பாண்ட வர்; -அவர்தேவி, துருபதன் கன்னி நான்; -இதையாவரும் இற்றை வரையி னும், -தம்பி, என்முன் மறந்தவ ரில்லை காண்; -தம்பி, காவ லிழந்த மதிகொண் டாய்; -இங்குக்கட்டுத் தவறி மொழி கிறாய்; -தம்பிநீ வந்த செய்தி விரைவி லே-சொல்லிநீங்குகஎன்றனள் பெண்கொடி.  268
பாண்டவர் தேவியு மல்லைநீ; -புகழ்ப்பாஞ்சாலத் தான்மக ளல்லை நீ; -புவியாண்டருள் வேந்தர் தலைவ னாம்-எங்கள்அண்ணனுக் கேயடி மைச்சிநீ; -மன்னர்நீண்ட சபைதனிற் சூதிலே-எங்கள்நேசச் சகுனியோ டாடியங்கு-உன்னைத்தூண்டும் பணய மெனவைத் தான்-இன்றுதோற்று விட்டான் தருமேந்திரன். 269
ஆடி விலைப்பட்ட தாதி நீ; -உன்னைஆள்பவன் அண்ணன் சுயோத னன்; -மன்னர்கூடி யிருக்குஞ் சபையிலே-உன்னைக்கூட்டி வருகென்று மன்ன வன் சொல்லஓடி வந்தேனிது செய்திகாண்; -இனிஒன்றுஞ் சொலா தென்னோ டேகுவாய்-அந்தப்பேடி மகனொரு பாகன் பாற்-சொன்னபேச்சுக்கள் வேண்டிலன் கேட்க வே 270
வேறு
துச்சா தனனிதனைச் சொல்லினான், பாஞ்சாலி; -அச்சா, கேள் மாதவிலக் காதலா லோராடைதன்னி லிருக்கின்றேன்.தார்வேந்தர் பொற்சபைமுன்என்னை யழைத்தல் இயல்பில்லை, அன்றியுமே, சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி,  5
ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல், மன்னர் குலத்து மரபோகாண்? அண்ணன்பால்என்னிலைமை கூறிடுவாய், ஏகுக நீஎன்றிட்டாள்.கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் 10
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான், ஐயகோவென்றே யலறி யுணர்வற்றுப்பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவரநீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றிமுன்னிழுத்துச் சென்றான்.வழிநெடுக.மொய்த்தவராய். 15
என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார், ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்தன்னை மிதத்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,  20
நெட்டை மரங்களென நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே 25கூடுதலும் அங்கேபோய்க் கோவென்றலறினாள்.
63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்  விம்மி யழுதாள்; -விதியோ கணவரே! அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனைவேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்துபாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?  30
என்றாள், விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமேகுன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார், தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்பொருமி யவள்பின்னும் புலம்புவாள்:-வான் சபையில்கேள்விபல வுடையர் கேடிலா நல்லிசையோர். 35
வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்மேலோ ரிருக்கின்றார், வெஞ்சினமேன் கொள்கிலரோ? வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார், இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை, மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே 40
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய், நின்னை யெவரும்நிறுத் தடாஎன்பதிலர், என்சேய்கேன்? என்றே இரைந்தழுதாள், பாண்டவரைமின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.மற்றவர்தாம் முன்போ வாயிழந்து சீர்குன்றிப் 45
பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டுதாதியடி தாதி; யெனத் துச்சாதனன் அவளைத்தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்; சகுனி புகழ்ந்தான்.சபையினோர் வீற்றிருந்தார்! தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்லுகிறான்; தையலே 50
64. வீட்டுமாசார்யன் சொல்வது
சூதாடிநின்னையுதிட்டிரனே தோற்று விட்டான்வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய், சூதிலே வல்லான் சகுனி தொழில்வலியால், மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான், மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே 55
குற்றமென்று சொல்லுகிறாய், கோமகளே, பண்டையுகவேத முனிவர் விதிப்படி, நி சொல்லுவதுநீதமெனக் கூடும்; நெடுஞ்காலச் செய்தியது; ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்பேணிவந்தார்; பின்னாளில் இஃது பெயர்ந்துபோய் 60
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்கொப்பில்லை மாதர்.ஒருவன்தன் தாரத்தைவிற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லைதன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன் 65
நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.செல்லு நெறியோர் செய்கையிங்கு பார்த்திடிலோகல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும்.செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான்வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால். 70
ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன்.தீங்கு தடுக்குந் திறமிலேன்என்றந்தமேலோன் தலைகவிழ்ந்தான்.மெல்லியளுஞ் சொல்லுகிறாள்:-
65. திரௌபதி சொல்வது
சாலநன்கு கூறினீர்!  ஐயா!  தருமநெறிபண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் 75
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுறமந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே, செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்தக்கது நீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கைஒக்கும்என்று, கூறி உகந்தனராம் சாத்திரிமார்!  80
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்! மாய முணராத மன்னவனைச் சூதாடவற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ?  நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ? மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?  85
பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்! பெண்பாவ மன்றோ?  பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்! என்று கையெடுத்துக் கும்பிட்டாள்அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத் 90
தேவி கரைந்திடுதல் கண்டே, சில மொழிகள்பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான்,  271
வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -அவள்ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும்மாயட நகர்த்த துச்சாதனன்-அவள்மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப்பீடையை நோக்கினன் வீமனும்-கரைமீறி எழுந்தது வெஞ்சினம்; -துய்கூடித் ததருமனை நோக்கியே, -அவன்கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?  272
66. வீமன் சொல்வது
வேறு
சூதர் மனைகளி லே-அண்ணே! தொண்டு மகளி ருண்டு, சூதிற் பணயமென் றே-அங்கோர்தொண்டச்சி போவ தில்லை. 273
ஏது கருதி வைத்தாய்? -அண்ணேயாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குல விளக்கை-அன்பேவாய்ந்த வடி வழகை. 274
பூமி யரச ரெல்லாங்-கண்டேபோற்ற விளங்குகிறான், சாமி, புகழினுக்கே-வெம்போர்ச்சண்டனப் பாஞ்சாலன்,  275
அவன் சுடர் மகளை-அண்ணே! ஆடி யிழந்து விட்டாய்.தவறு செய்து விட்டாய்-அண்ணே! தருமங் கொன்று விட்டாய். 276
சோரத்திற் கொண்ட தில்லை; -அண்ணே! சூதிற் படைத்த தில்லை.வீரத்தினாற் படைத்தோம்; -வெம் பார்வெற்றியினாற் படைத்தோம்;  277
சக்கரவர்த்தி யென்றே-மேலாந்தன்மை படை திருந்தோம்; பொக்கென ஓர்கணத்தே-எல்லாம்போகத் தொலைத்து விட்டாய். 278
நாட்டை யெல்லாந் தொலைத்தாய்; -அண்ணே! நாங்கள் பொறுத் திருந்தோம்.மீட்டும் எமை யடிமை-செய்தாய், மேலும் பொறுத் திருந்தோம் 279
துருபதன் மகளைத் -திட்டத்துய்ம னுடற் பிறப்பை, இரு பகடை யென்றாய், -ஐயோ! இவர்க் கடிமை யென்றாய்!  280
இது பொறுப்ப தில்லை, -தம்பி! எரி தழல் கொண்டு வா.கதிரை வைத் திழந்தான்-அண்ணன்கையை எரித்திடுவோம். 281 67. அர்ஜூனன் சொல்வது
வேறு
எனவீமன் கசதேவ னிடத்தே சொன்னான்இதைக் கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்; மனமாரச் சொன்னாயோ? வீமா! என்னவார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்?  யாவர் முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்; சினமான தீ அறிவைப் புகைத்த லாலேதிரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 282
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும் எனு மியற்கைமருமத்தை நம்மாலே உலகங் கற்கும்வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.கருமத்தை மேன்மேலுங காண்போம்; இன்றுகட்டுண்டோம், பொறுத்திருப்போம்;  காலம் மாறும்தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்என்றான். 283

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.