LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1113 - களவியல்

Next Kural >

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது.) வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும் (பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று, 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.)
மணக்குடவர் உரை:
தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு. இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
( கூட்டுதற் குடம்பட்ட பாங்கற்குத் தலைமகன் தலைமகளதியல்பு கூறியது . ) வேய்த்தோளவட்கு - பசுமூங்கில் போலுந் தோளினையுடையவட்கு ; மேனி முறி - உடம்பு மாந்தளிர் நிறமாயிருக்கும் ; முறுவல் முத்தம் - பல் வெண்முத்துப் போன்றிருக்கும் ; நாற்றம் வெறி - இயல்பான மணம் நறுமணமாயிருக்கும் ; உண்கண் வேல் - மையூட்டிய கண்கள் வேல்போற் கூராயிருக்கும் . பெயராலும் ஒர் இயல்பு கூறப்பட்டது . ' முறி ' ' முறுவல் ' ஆகு பெயர்கள் . உவமைகள் வுருவக வடிவிற் கூறப்பட்டன . இத்துறை உன்னாற் கருதப்பட்டவளை அறியேனென்று சேட்படுத்திய தோழிக்குத் தலைமகன் சொன்னதுமாம் .
கலைஞர் உரை:
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!.
சாலமன் பாப்பையா உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.
Translation
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend; Darts are the eyes of her whose shoulders like the bambu bend.
Explanation
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
Transliteration
Murimeni Muththam Muruval Verinaatram Velunkan Veyththo Lavatku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >