|
|||||
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த |
|||||
இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால்" சப்தஸ்வரங்களான"" ச,ரி,க,ம,ப,த,நி" என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் 53 தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில்" மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி" போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது. அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது. இசைத் தூண்கள் எதற்காகப் பயன்பட்டன என சற்றே ஆராய்வோம். அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞர்கள், கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியைக் கூடப் பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பைச் சேர்க்கின்றது. இந்த இசைத்தூண்களை "மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான அலைக் கற்றையை உருவாக்குகின்றது. எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் இது எப்படி சாத்தியமானது என்று கேட்கலாம். இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார்" என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள" இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை என்ற புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது "தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள்" என தெரிய வந்தது. ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது" தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால்" சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது? நினைவில் கொள்ளுங்கள். நாம் சுத்தியலைக் கொண்டு அடிக்கப் போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரத்தைக்கூட உருவாக்கவில்லை. இதைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த "இசைத்தூண்கள்" ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய்த் தந்து கொண்டு இருக்கின்றது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத் தூண் போன்ற இசைத் தூண்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழகம் மற்றும் தென் இந்தியக் கோவில்களில் காணலாம். இதுபோன்ற இடங்களுக்குச் சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறியச் செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாக்கவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காத்து நம் இளைய தலைமுறையினர்களுக்கு நம் தமிழைக் கொண்டு சேர்ப்பது நம் தலையாய கடமையாகும் |
|||||
by Mani Bharathi on 21 Jan 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|