LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் சொதி -வறுவல் (Mutton Soothi salna)

தேவையானவை:


மட்டன் - 1/4 கி,

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,

மிளகு - 1/2 டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)

தேங்காய் - 1 மூடி,

பட்டை - ஒரு துண்டு,

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

சோம்பு - 2 டீஸ்பூன்

மல்லி - 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 8,(நீளமாக நறுக்கியது)

கிராம்பு - 2

எலுமிச்சம்பழம் - 1 மூடி

புளி - ஒரு நெல்லிக்காயளவு,

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.


செய்முறை :


1.குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்பொடி,3 கப் தண்ணீர் சேர்த்து ஆறு விசில் வரை வேகவைக்கவும்.குக்கர் ஆவி அடங்கியதும் மட்டன் தனியாகவும் வேக வைத்த தண்ணீர் தனியாகவும் பிரிக்கவும்.சொதி செய்வதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீர் மட்டும்தான் போதுமானது.தேங்காயை துருவி முதல் பால் 1 கப் எடுக்கவும்.இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும்.

2.வெங்காயம், பச்சைமிளகாய்,மிளகு, சீரகம், சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.கறி வேக வைத்த தண்ணீர், இரண்டாவது தேங்காய் பால், அரைத்து வைத்திருக்கும் மசாலா ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அரை டீஸ்பூன் சோம்பு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

3.கலந்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.புளியை உருண்டையாக உருட்டி சொதியில் போடவும்.உப்பு சேர்த்து.15 நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு இறக்கி.முதல் தேங்காய்பாலை சொதியில் சேர்க்கவும்.ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து சேர்க்கவும்.

Mutton Soothi Salna

Ingredients for Mutton Soothi Salna:

 

Mutton-1/4 G,

Ginger, Garlic Paste-2 Tsp,

Turmeric powder-1/2 Tsp,

Pepper-1/2 Tsp,

Green Chilly-2, (Chopped Lengthwise)

Coconut-1 Cup,

Cinnamon- 1 Piece,

Cumin-1/2 Tsp,

Fennel-2 Tsp,

Coriander-2 Tsp,

Small Onion-8, (Chopped Lengthwise)

Cloves-2,

Lemon-Small Lemon Size,

Curry Leaves, Salt-as Needed.

 

Procedure to make Mutton Soothi Salna:

 

1. In a cooker, add mutton, ginger, garlic paste, turmeric powder, 3 cup of water and allow 3 whistles to boil. Allow to cool and seperate the mutton from the boiled water. Mutton boiled water is enough to make soothi. Grind the coconut and take first, second and third stage milk.

2. Grind onion, green chilly, pepper, cumin, fennel and coriander. Mix mutton boiled water along with second stage coconut milk and grinded paste. Heat 3 spoons of oil in a vessel, add cinnamon, cloves, 1/2 tea spoon of fennel and let to splutter. Add chopped onion, green chilly and fry well. 

3. Pour the mixed soothi in boiling vessel. Add tamarind in it. Add salt and boil for 15 minutes. Remove from flame and add first stage milk in soothi. Allow to cool and squeeze the lemon in it.

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.