|
||||||||
எனது இசை குரு...அமெரிக்கா அட்லாண்டாவிலிருந்து ஸ்ரீ உத்ரா |
||||||||
‘தெளிவு குருவின் திருநாமம் செப்பல்’ என்றார் திருமூலர். என் இசை குரு திருபுவனம் நி.ஆத்மநாதன் அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்வதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். சென்னையில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது அவரிடம் இசை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அன்பும் பண்பும், பெரும் புகழும், பேராற்றலும் கொண்டவர் இவர். இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள்சர்மா அவர்கள் முன்னிலையில் மதுரை&திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்சி நடத்திப் பாராட்டைப் பெற்றவர். எட்டாவது உலகத்தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது இரண்டு முறை இசை நிகழ்ச்சி பாடியவர். அருட்பா இசைச்சங்கம் வடலூர், தியாகபிரம்ம சபா திறுவையாறு, ஆகியவற்றின் செயல் அலுவல் குழுவில் பங்குகொண்டு அரும்பணி ஆற்றி வருபவர். தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நவராத்திரி இசைவிழாவின் தோற்றுநர் இவரே. பலமுறை அவ்விழாவில் நான் பாடியுள்ளேன். தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இணைந்து அமைத்த ‘துளிர்’ என்ற அமைப்பு மேடையேற்றிய ‘நந்தன் கதை’ என்ற நாடகத்தில் நந்தனாராக பாடிக் கொண்டே நடித்து புதுடெல்லி, மைசூர், தஞ்சாவூர், அமெரிக்க நீயூஜெர்ஸி ஆகிய இடங்களில் தனி முத்திரை பதித்தவர். இந்திய அரசியலில் நிலையான இடத்தைப் (ரிவீஸீரீ விணீளீமீக்ஷீ) பிடித்த பெரியவர் தெய்வத்திரு நி.கருப்பையா மூப்பனார் அவர்கள் இவரது முதல் இசைக் குறுந்தகட்டை வெளியிட்டுச் சிறப்பித்தார் என்பதே என் இசை குருவின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியல்லவா. தஞ்சையில் கலைமாமணி போழக்குடி தீ.ஸ்.கணேசய்யர், தஞ்சாவூர் க்ஷி.பிரேமா, சவாய்கந்தர்வ தஞ்சாவூர் க்ஷீ.உதயசங்கர் ஜோசி ஆகியவர்களிடம் இசை பயின்ற என் குரு சென்னையில் வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி க்ஷீ.வைத்தியநாதன் அவர்களிடம் இசையமைப்பாளர் பயிற்சி பெற்றார். என்னுடைய பத்தாவது வயதிலேயே என்னைப்பாட வைத்து ‘‘தேனென இனிக்கும் திருவருட்பா’ என்ற இசைப் பேழையை இசையமைத்து வெளியிட்டு எனக்குப் பெரும் புகழ் சேர்த்தார். பல்வேறு இசைக்கலைஞர்களைப் பாட வைத்து ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட இசைப்பேழைகளை வெளியிட்டுள்ளார். ஹிந்தியிலும் இசையமைத்துக் குறுந்தகடு கொடுத்துள்ளார். தனது ஆரம்பகால குருநாதர்களின் நினைவைப் போற்றும் வகையில் கடந்த பத்து ஆண்டுகளாக அவர்களது நினைவு நாள் விழாவில் பல்வேறு கலைஞர்கலைப் பாட வைத்து இசை வேள்வி நடத்தி வருகிறார். இதுவே இவரது பெருமைக்கும் புகழுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. எனது தாய்வழிப் பாட்டி ஞிக்ஷீ.மனோரமா அவர்கள் பிறந்த மாவட்டமான தஞ்சாவூரில் சாலியமங்கலத்திற்கு அருகில் உள்ள திருபுவனத்தில் இசை குரு பிறந்தார். தந்தையார் குருமூர்த்தி தாயார் சந்தான லட்சுமி அம்மாள். இவரது தந்தையார் 15 ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பணியாளர் தேர்வுக்குழு (கிஜீஜீஷீவீஸீt சிஷீனீனீவீttமீ) உறுப்பினராகவும் இருந்தார். கிராம முன்சீப் (க்ஷி.பி.வி) பொறுப்பும் இவரது குடும்பத்திடமே (சிறிய தகப்பனார் t.ஸீ.ராஜப்பா) இருந்தது. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்து நூற்றுக்கணக் கானவர்களுக்கு இசை பயிற்றுவித்து பெருந்தொண்டாற்றி வருகிறார். 2003&ம் ஆண்டில் நந்தனார் நாடகத்திற்காகவும் 2011&ல் இசை கச்சேரிக்கா அமெரிக்கா வந்த இவருக்கு வட அமெரிக்காவில் தெற்கேயுள்ள செயிண்ட்லூயிஸ், வாஷிங்டன் ஞி.சி. முதல் வடக்கேயுள்ள கலிஃபோர்னியா, டல்லாஸ் என எல்லாப் பெருநகரங்களிலும் மாணவர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். தமிழக அரசின் ‘‘கலைநன்மணி’ விருது முதல் ‘‘இன்னிசை ஏந்தல்’’, ‘‘அருட்பாமணி’’ என ஏராளமான பற்பல பட்டங்களும் பாராட்டுகளும் கிஷ்ணீக்ஷீமீபீமீபீ - sமீஸீவீஷீக்ஷீ யீமீறீறீஷீஷ்sலீவீஜீ வீஸீ tலீணீ யீவீமீறீபீ ஷீயீ நீணீக்ஷீஸீணீtவீநீ (ஸ்ஷீநீணீறீ) தீஹ் ரீஷீஸ்t.ஷீயீ வீஸீபீவீணீ. (னீவீஸீவீstக்ஷீஹ் ஷீயீ நீuறீtuக்ஷீமீ, ஸீமீஷ் பீமீறீலீவீ) பெற்றவர் என் இசை குரு. 1978 ஜூன் திங்கள் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் தலைமையில் தஞ்சாவூர் மேலவீதி நவநீதகிருஷ்ணன் கோவிலில் இவரது அரங்கேற்றம் நிகழ்ந்தது. இவரிடம் இசை பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களின் இசை அரங்கேற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது. ஸ்ரீலங்கா, பர்மா, வட அமெரிக்கா முதலானப் பல்வேறு நாடுகளில் இசையைப் பரப்பிய என் குரு உலகின் எல்லா நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனையும் வள்ளல் பெருமானையும் வணங்கி வேண்டுகிறேன். |
||||||||
by Swathi on 28 Jan 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|