|
||||||||
நான் |
||||||||
எனது நடை
சறுக்குமென்றா
நீ நினைத்தாய்....?
தாமரையில் தௌித்துவிட்ட
தண்ணீரா எனது நடை?
தோட்பட்டை நனையும்படி
காகம் முக்கிவிட்ட எச்சத்தின்
இரு சொட்டா
எனது நடை?
சொல்லிவிடத்
தேவையில்லை!
உன்
தலைக்குமேல் என்பாதம்
பதிவதனை நீயறிவாய்.
பதிந்து அது உன்னுடைய
விதை வரைக்கும் மிக எளிதாய்
புதைவதையும் நீயுணர்வாய்.
என்னுடைய
பாதங்கள்
இரும்பு கொண்டு செய்ததல்ல.
நீ வைத்த நெருப்பினிலே
சூடு கண்டு இறுகியது.
சுட்டுப்போய், சுட்டுப்போய்
அக்கினியைப் பழக்கியது.
கல்லென்ன மேடென்ன
என்பாதம் நடைபோடும்
நீயென்ன தீயென்ன
கூசாமல் அடிவைக்கும்.
ஒரு பூவும்
நுனிப்புல்லும்
சிறு புள்ளும்
சிற்றெறும்பும்
செத்ததென்றால் கேளு!
இதயத்தைக் கழற்றி எறிந்து விடுகிறேன்
அது
திராட்சைப் பழம்போல சுருங்கச் செய்கிறேன்.
எனது நடை சறுக்குமென்றா நீ நினைத்தாய்....?
தாமரையில் தௌித்துவிட்ட தண்ணீரா எனது நடை? தோட்பட்டை நனையும்படி காகம் முக்கிவிட்ட எச்சத்தின் இரு சொட்டா எனது நடை? சொல்லிவிடத் தேவையில்லை!
உன் தலைக்குமேல் என்பாதம் பதிவதனை நீயறிவாய். பதிந்து அது உன்னுடைய விதை வரைக்கும் மிக எளிதாய் புதைவதையும் நீயுணர்வாய்.
என்னுடைய பாதங்கள் இரும்பு கொண்டு செய்ததல்ல.
நீ வைத்த நெருப்பினிலே சூடு கண்டு இறுகியது. சுட்டுப்போய், சுட்டுப்போய் அக்கினியைப் பழக்கியது.
கல்லென்ன மேடென்ன என்பாதம் நடைபோடும் நீயென்ன தீயென்ன கூசாமல் அடிவைக்கும்.
ஒரு பூவும் நுனிப்புல்லும் சிறு புள்ளும் சிற்றெறும்பும் செத்ததென்றால் கேளு!
இதயத்தைக் கழற்றி எறிந்து விடுகிறேன் அது திராட்சைப் பழம்போல சுருங்கச் செய்கிறேன்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|