LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1008 - குடியியல்

Next Kural >

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நச்சப்படாதவன் செல்வம் - வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரால் விரும்பப்படாதவன் செல்வ முடையவனாயிருத்தல்; நடு ஊருள் நச்சு மரம் பழுத்த அற்று- ஊர் நடுவில் எட்டி மரம் பழுத்தாற் போலும். இரண்டும் அருகிலிருந்தும் பயனில்லை யென்பதாம். ' நடுவூர்' என்பது ' புறநகர் ' என்பது போன்ற இலக்கணப் போலி.
கலைஞர் உரை:
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.
சாலமன் பாப்பையா உரை:
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
Translation
When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
Explanation
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
Transliteration
Nachchap Pataadhavan Selvam Natuvoorul Nachchu Marampazhuth Thatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >