LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -18 , நாகேஸ்வரி அண்ணாமலை,நியூ ஹாம்ஷயர் ,அமெரிக்கா

பெயர்             : நாகேஸ்வரி அண்ணாமலை
பிறந்த ஊர்     : இராமநாதபுரம்
வசிக்கும் ஊர் : நியூ ஹாம்ஷயர்

உலக அரசியலைப் பற்றித் தமிழில் நூல் எழுதும் ஒன்றிரண்டு தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான நாகேஸ்வரி அண்ணாமலை சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் நிலைமைகளை ஊன்றிக் கவனிப்பதிலும் வேறுபட்ட பண்பாடுகளை ஒப்பிட்டு ஆராய்வதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர்.  ஜப்பான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் சில காலம் வாழ்ந்த அனுபவம் பெற்ற இவர் ஓர் அபுனைவு (non-fiction) எழுத்தாளர். 

ஆணித்தரமான வாதங்களுடனும், தரவுகளோடும் கூடிய காத்திரமான இவருடைய நூல்களில் உள்ள அடிநாதம் உலகில் பலநிலைகளில் நிலவும் நியாயமின்மையை எடுத்துக்காட்டுவதே ஆகும்.  அவருடைய நூல் பட்டியல் கீழே.

நூல்கள்:

அமெரிக்காவில் முதல் வேலை – ஒரு புதிய அனுபவம்’ (அடையாளம் பதிப்பகம்)

அமெரிக்காவின் வணிக இயல்பை அறிமுகப்படுத்தும் நூல்

அமெரிக்காவின் மறுபக்கம்’  (அடையாளம் பதிப்பகம்)

அமெரிக்காவின் சமூக, அரசியல், பொருளாதார வரலாற்றை எளிய நடையில் விளக்குகிறது 

அமெரிக்க அனுபவங்கள்’ (அடையாளம் பதிப்பகம்)

அமெரிக்க வாழ்க்கையை உள்ளபடி விவரிக்கும் நூல்

பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை’ (அடையாளம் பதிப்பகம்)

இஸ்ரேலுக்குச் சென்று, ஆய்வுசெய்து விவரிக்கிறது

கியூபாவின் விடுதலை: அன்று முதல் இன்று வரை’ (அடையாளம் பதிப்பகம்)

ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சியையும் அவர் கியூபாவின் சமத்துவ சமூகத்தை உருவாக்கிய வரலாற்றையும் விவரிக்கும் நூல்

போப் பிரான்சிஸ: நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ (அடையாளம் பதிப்பகம்)

கத்தோலிக்க மதத்தலைவரைப் புதிய பரிமாணத்தில் சொல்கிறது

வியட்நாமில் அமெரிக்கப் போர்:: வென்றது யார்? (அடையாளம் பதிப்பகம்)

வியட்நாமில் நடந்த போரின் முரண்களைக் காட்டும் நூல்

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை’  (அடையாளம் பதிப்பகம்)

நாடார் சமூகத்தின் திருமண முறையில் பெண்களின் நிலையைப் பற்றிச் சொல்லும் நூல்

மால்குடி மனிதர்கள்’  (க்ரியா வெளியீடு)

ஆர். கே. நாராயணனின் புகழ்பெற்ற மால்குடிச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் இது

 

தீவிர ஆர்வத்துடன் களத்திலிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு பிரச்சினைகளை அலசி எழுதப்படும் சில தமிழ் நூல்களுள் இவருடையவை முதன்மையானவை.  இயல்பான தமிழில் தொய்வில்லாத நடையில் எழுதுவது இவருடைய தனித் தன்மை. வாசகர்கள் நேரில் இருந்து கேட்பதைப் போன்ற உணர்வைத் தரும் தன்மை உடையவை. 

இவர் முகநூலிலும் (facebook.com/a.nageswari), டுவிட்டரிலும் (twitter.com/a_nageswari) தம்முடைய கருத்துக்களை வாசகர்களுடன் பகிந்துகொள்கிறார்.  

ஓர் ஆண்டில் சில மாதங்கள் அமெரிக்காவில் கணவருடனும் (சிகாகோ பலகலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) மகள்களுடனும் வாழ்கிறார். பிற மாதங்களில் மைசூரில் வாசம். 

 

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 19 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.