LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயமோகன்

நாக்கு

 

கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ‘ ‘ அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? ‘ ‘ என்றான்
நாசர் ‘ ‘ இல்லையே ‘ ‘ என்றார். ‘ ‘ நம்முடைய பங்குதாரரா ? ‘ ‘
‘ ‘ தொழில்முறையில் மருத்துவர். வேதியியலிலும் ஈடுபாடு இருந்தது. அத்துடன் மத அறிஞரும்கூட ‘ ‘ என்றான் கிருஷ்ணன். ‘ ‘ பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ‘ ‘
‘ ‘ஓகோ ‘ ‘ என்றார் நாசர் ஆர்வமிழந்து . இறந்தவர்கள் அவரது வியாபாரத்துக்கு உதவமாட்டார்கள்.
‘ ‘ அசல்பெயர் அபூ முவஃபக் அத்தீன் அப்துல் லதீஃப் அல் பக்தாதி . ஹிஜ்ரி 557ல் பாக்தாதில் பிறந்தார் பிறந்தார். அதாவது 1162ல் ‘ ‘
‘ ‘ஈராக்கியன் ‘ ‘
‘ ‘அப்போது ஈராக் இல்லை ‘ ‘ என்றான் கிருஷ்ணன். ‘ ‘ அவருக்கு ஹீப்ரூ உட்பட எட்டு மொழிகள் தெரியும். தன் வாழ்நாள் முழுக்க பிரயாணம் செய்துகொண்டே இருந்தார். அவரது முக்கியமான நூல் மனித உடலமைப்பு பற்றிய அவரது விளக்க நூல்தான். பதினாறாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் அதுதான் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டது. உண்மையில் ஐரோப்பிய மருத்துவ இயல் கிரேக்க மரபைவிட அரபு மரபுக்கு அதிகம் கடன்பட்டது ‘ ‘
‘ ‘ சுவாரஸியமான மனிதர் ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ இந்த மதுவின்பெயர் சாக்ஷ். கெய்ரோவில் ஒரு மதிப்புமிக்க விருந்தினரை உபசரிக்கவேண்டுமானால் இதைத்தான் பரிமாறுவோம். ‘ ‘
‘ ‘கடுமையானதா ? ‘ ‘ என்றபடி கிருஷ்ணன் படிகக் கோப்பையை எடுத்தான்
‘ ‘மிக மென்மையானது. சொல்லப்போனால் இது மதுவே அல்ல, குளிர்பானம். ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ இதை எல்லாரும் தயாரிப்பதில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே தலைமுறைதலைமுறையாக இதன் தயாரிப்பு ரகசியத்தை வைத்திருக்கின்றன. சொல்லப்போனால் குடும்ப ரகசியம்போல ‘ ‘
‘எகிப்திய கோலா ‘ ‘ என்றான் கிருஷ்ணன்.
‘ ‘கிட்டத்தட்ட ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘எப்படி இருக்கிறது ? ‘ ‘
‘ஆர்வமூட்டும் மணம் , வினோதமான மெல்லிய ருசி ‘ ‘
‘ ‘அதுதான் அதன் சிறப்பம்சம். நாலைந்துமுறை குடித்தால் அந்த மணத்துக்கும் ருசிக்கும் அடிமையாகிவிடுவீர்கள் ‘ ‘
கிருஷ்ணன் நாஃப்கினால் உதடுகளைத் துடைத்துக் கொண்டான். ‘ ‘ லதீஃப் கிபி 1197ல் எகிப்துக்கு வந்தார். இங்கே இருந்த அஸ்ஹர் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். கெய்ரோ அனுபவங்களை ‘அல் இஃபாதஹ் வல் இஃதிபார் ‘ என்ற நூலில் சொல்லியிருக்கிறார். அதில் மிகமிக விசித்திரமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த கேக்கைப்பார்த்ததும் நினைவுகூர்ந்தேன்… ‘ ‘
‘ ‘ நாம் இறைச்சிக்குச் செல்லலாம் ‘ ‘
‘ ‘ நான் சைவம் ‘ ‘ என்றான் கிருஷ்ணன்
‘ ‘மீன் ? ‘ ‘
‘ ‘ஊன் உணவே சாப்பிடமாட்டோம். தலைமுறை தலைமுறையாக அபப்டித்தான் ‘ ‘
‘ ‘உங்கள் மத வழக்கமா ? ‘ ‘
‘இல்லை. எங்கள் இனக்குழு வழக்கம். அல்லது ஒருவகை மனப்பழக்கம் என்று சொல்லலாம். இப்போது நிறையபேர் சாப்பிடுகிறார்கள். எனக்கு மாமிசத்தை சாப்பிடுவதுபற்றி கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை ‘ ‘
‘ ‘விசித்திரமான வழக்கம். கீரைசாப்பிடுவீர்களா ? சாலட் ? ‘ ‘
‘சரி. ‘ ‘ கிருஷ்ணன் தொடர்ந்தான் ‘ ‘ என்ன சொல்லிவந்தேன், கிபி 1200 முதல் 1203 வரை தொடர்ச்சியாக மூன்றுவருடம் நைல் முற்றிலும் வரண்டது. எகிப்தை கொடுமையான பஞ்சம் பிடித்துக் கொண்டது. அதைப்போன்ற பெரும்பஞ்சங்களை அபூர்வமாகவே காணமுடியும் என்று லதீஃப் சொல்கிறார். பசியால் இறந்தவர்கள் மட்டும் அரசங்க கணக்குப்படி ஒன்றரை லட்சம். மக்கள் உணவுக்காக வெறிபிடித்து அலைந்தார்கள். கண்ணில கண்ட பச்சைகளை எல்லாம் தின்றார்கள் . கொலையும் கொள்ளையும் செய்தார்கள். நாய்நரிகளையெல்லாம் பிடித்து தின்றார்கள் புழுப்பூச்சிகளை தின்றார்கள். பிறகு எதுவுமே எஞ்சாமலாயிற்று. எல்லாரும் பட்டினியானார்கள். அப்போதுதான் நரமாமிசம் தின்னும் வழக்கம் உருவாகியது.. ‘ ‘
‘ ‘ காய்கறிகள் இங்கே… ‘ ‘ என்ற நாசர் நிறுத்தி கூர்ந்து பார்த்து , ‘ ‘ என்ன ? ‘ ‘ என்றார்
‘ ‘மனிதனை மனிதன் தின்ன ஆரம்பித்தான். ‘ ‘
‘ ‘உண்மையாகவா ? ‘
‘ஆம். லதீஃப் அவர் பார்த்தவற்றை எழுதிவைத்திருக்கிறார். மிகையாகச் சொல்வது அவரது வழக்கம் இல்லை. அவர் விஞ்ஞானி ‘ ‘
‘ ‘யார் சாப்பிட்டார்கள் ? ‘ ‘
‘ ‘ எல்லாரும்தான். முதலில் இறந்தவர்களை சிலர் ரகசியமாக சுட்டு தின்றார்கள். மெல்லமெல்ல அது பரவியது. ஆரம்பத்தில் ,இருந்த தயக்கங்கள் விலகியதும் எல்லாரும் கூட்டம்கூட்டமாக தின்ன ஆரம்பித்தார்கள். பிணங்கள் தீர்ந்ததும் வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள். கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களுடன் இறங்கி மனிதர்களைப் பிடித்து கொன்று உண்டார்கள். அதிகமும் குழந்தைகளையும் முதியவர்களையும். சிலநாட்களிலேயே அதில் ருசி கண்டுகொண்டார்கள். விதவிதமாக சமைத்து உண்ண ஆரம்பித்தார்கள். தங்கள் தேவைக்கு மிஞ்சியதை விற்றார்கள். அது ஒரு வணிகமாக மாறியது . கடைகளில் வேகவைத்த மனித மாமிசம் விற்கப்பட்டது. மிஸ்ர் என்ற ஊரில் விற்பனைக்காக கூடைகளில் பொரித்த குழந்தைகள் வைக்கப்பட்டிருப்பதை லதீஃப் கண்டாராம். மனித மாமிசம் உப்பிலிடப்பட்டு ஜாடிகளில் விதவிதமாக அலங்காரமாக வைக்கபப்ட்டது. கூவி விற்கப்பட்டது…. ‘ ‘
‘ ‘நம்ப முடியவில்லை ‘ ‘
‘ ‘ நம்பியாக வேண்டும் ‘ ‘ என்றான் கிருஷ்ணன் ‘ ‘பிறகு வேறு ஊர்களிலிருந்து உணவு வந்ததும் பஞ்சம் அடங்க ஆரம்பித்தது. ஆனால் ஏராளமான மக்கள் இதில் ருசியும் இத்தொழிலில் சுகமும் கண்டுகொண்டார்கள். அவர்களை மனித வேட்டையிலிருந்து தடுக்க முடியவில்லை. எகிப்திய அரசாங்கம் அவர்களை ஒடுக்க முனைந்தபோது அவர்கள் ஊர்களுக்கு வெளியே தனிச் சமூகங்களாக குடியேறினார்கள். வழிப்போக்கர்களை கொன்று தின்றார்கள். கெய்ரோவுக்கு வெளியே அப்படி ஒரு பகுதியை ராணுவம் தாக்கியபோது மலைபோல எலும்புகள் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள். மருத்துவர்களை நோயாளியைப்பார்க்க என்று கூட்டிச்சென்று கொன்று தின்பதும் மதகுருக்களை கூட்டிச்சென்று தின்பதும் சாதாரணமாக இருந்தது….பிறகு மெல்ல இப்பழக்கம் அழிந்தது ‘ ‘
‘ ‘படைத்தவனுக்கு நன்றி ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ பேரர், சாலட்… ‘ ‘
‘ ‘ஆனால் என்னுடைய கொள்கைப்படி இத்தகைய பழக்கங்கள் அழியவே அழியாது. ஏதோ ஒருவகையில் உருமாறி அவை நீடிக்கும். நாம் கலாச்சாரம் என்று சொல்வதெல்லாம் இம்மாதிரி உருமாறிய பழக்கங்களின் தொகுப்பைத்தான்… ‘ ‘
‘ ‘இப்போதும் மனிதமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்கிறீர்களா ? ‘ ‘
‘ இருக்கலாம். எங்கோ சிலர். மிக ரகசியமாக . சிலசமயம் அது ஏதாவது மதச் சடங்கின் ஒரு பகுதியாக மாறியிருக்கும். வருடத்தில் ஒருநாள் சில நிபந்தனைகளுடன் உண்ணலாம். ஏதோ ஒருவடிவில் கண்டிப்பாக அப்பழக்கம் இங்கே இருக்கும்…. ‘ ‘ கிருஷ்ணன் சொன்னான் ‘ ‘ ருசி என்பது அப்படிப்பட்டது. அது மொழிபோல. இரண்டுமே நாக்குடன் தொடர்புடையவை. இரண்டுக்கும் மனிதனின் ஆழ்மனதுடன் நேரடியான தொடர்பு உண்டு. பல்வேறு விஷயங்கள் புதைந்து மட்கி உருவான ஒன்றுதான் நம் ஆழ்மனம். மனிதனின் எந்த உணவுப்பழக்கமும் அழிந்துபோகாது. அது ருசியாக மாறி நாக்கில் வாழும். நாக்கு அதை தேடியபடியேதான் இருக்கும்… ‘ ‘
‘ ‘கற்பனையே செய்யமுடியவில்லை ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ நாங்கள் இங்கே இறைச்சியாலான பலவகை அப்பங்களை விருந்தினருக்கு அளிப்பதுண்டு… ஆனால் மனித மாமிசம்… அய்யோ ! ‘ ‘
‘ ‘ அப்படியா ‘ ‘ என்றான் கிருஷ்ணன் ‘ ‘ இறைச்சி இல்லாமல் சூப் கொண்டுவரச்சொல்லுங்கள். ‘ ‘ வாய் துடைத்தபடி ‘ ‘ நான் தேடிப்பார்க்க விரும்புகிறேன். கெய்ரோவில் இரண்டுவாரம் எனக்கு வேறுவேலை இல்லை. என் கோட்பாட்டை மெய்யா என்று பார்க்க விரும்புகிறேன். இப்பகுதியில் உள்ள அத்தனை மக்களின் உணவுப்பழக்கங்களையும் சோதிக்க வேண்டும் ‘ ‘
‘ ‘பைத்தியக்காரத்தனம். இந்த நூற்றாண்டில்… ‘ ‘
‘ ‘ மனிதர்களின் பழக்கங்களில் பைத்தியக்காரத்தனம் இன்றியமையாத ஒரு அம்சம். கண்டிப்பாக இங்கே யாரோ எங்கோ நரமாமிசம் தின்கிறார்கள். ஏதோ ஒரு வடிவில். அதைக் கண்டுபிடிக்கவேண்டும் ‘ ‘
நாசர் தலையசைத்தார்.
**
‘ ‘ இனிமையான நாட்கள் ‘ ‘ என்று நாசர் கைகுலுக்கினார். ‘ ‘ இத்தனை நாட்கள் நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்றும் நம் இத்தனை நாள் சேர்ந்து சுற்றக்கூடும் என்றும் நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னைப்பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய கெளரவம்…. ‘ ‘
கிருஷ்ணன் புன்னைகை செய்தான் ‘ ‘ நீங்கள் மிக நன்ற்காக உபசரித்தீர்கள் நாசர். நான் கண்டிப்பாக இதை எப்போதும் நினைவுகூர்வேன். அதிலும் இந்த மது…. சாக்ஷ்! இதன் ருசிக்கு நான் கிட்டத்தட்ட அடிமையாகிவிட்டேன். … ‘
‘ ‘நீங்கள் அமெரிக்கா செலும்போது உங்களைத்தேடி இது அங்கேவந்து காத்திருக்கும் ‘ ‘ என்றார் நாசர் சிரித்தபடி ‘ ‘நான் பத்துநாள் முன்னரே நாற்பது புட்டி சாக்ஷ் அனுப்பிவிட்டேன்…. ‘ ‘
‘ ‘நன்றி ‘ ‘ கிருஷ்ணன் வாட்சைப்பார்த்தான் ‘ ‘ நேரமாகிறது ‘ ‘
‘ ‘இன்னும் பத்து நிமிடங்கள் . நீண்ட நாள் நண்பரைப்பிரியும்போது இறுதி வினாடிகளே அந்த நீண்டநாட்களாக மாறிவிடுகின்றன என்று ஒரு பழமொழி எங்கள் இனக்குழுவில் உண்டு ‘ ‘ என்றார் நாசர்.
‘ ‘இந்த சாக்ஷ் மதுவின் ருசியில் எங்கள் ஊரில் உள்ள ஒரு பானத்தின் வாசனை இருக்கிறது. அதை நேற்றுத்தான் கண்டுபிடித்தேன் ‘ ‘ என்றான் கிருஷ்ணன். ‘ ‘ அதை எங்கள் நிலங்களை வேளாண்மைசெய்யும் சில இனக்குழுக்கள் தயாரிக்கிறார்கள். நாங்கள் வருடத்தில் நாற்பதுநாள் காளி பூசை செய்வோம். அந்நாட்களில் அதை தயாரித்து எங்களுக்குக் கொண்டுவருவார்கள். அதை ஆண்கள் மட்டுமே குடிப்போம். என் சிறுவயதில் சிலமுறை அதை குடித்திருக்கிறேன். இப்போது தயாரிக்கிறார்களா என்று தெரியவில்ல்லை. காளிபூசையே இருக்கிறதா என்று தெரியவில்லை ‘ ‘
‘ ‘மாமிசம் சாப்பிடாத இனக்குழு என்றீர்கள்…. ‘ ‘
‘ ‘நூறு வருடம் முன்புகூட நாங்கள் சாப்பிட்டதுண்டு. ஆனால் உணவாக அல்ல, பூசையின் பகுதியாக. நாங்கள் சாக்தேயர்கள். கடவுளை நாங்கள் மரணமாக , அனைத்தையும் அழிக்கும் சக்தியாக, பெண் வடிவம் கொண்டவளாக வணங்குகிறோம். அவளுக்கு விலங்குகளை பலிகொடுப்போம். அந்த ஊனை உண்போம். அதில் மதுவும் ஓர் அம்சம்…. ‘ ‘
அறிவிப்புகள் ஒலித்தன
‘ ‘என் கோட்பாட்டை நான் இன்னும் கைவிடவில்லை. ‘ ‘ என்றான் கிருஷ்ணன் ‘ ‘ நாக்கு ஒரு போதும் மறக்காது. அதன் நினைவுக்கு மனிதவரலாற்றைவிட ஆழம் உண்டு. ‘ ‘
‘ ‘ எகிப்தில் நாம் இனிமேல் எங்கே தேடுவது ? அனேகமாக எல்லா உணவுப்பழக்கங்களையும் எல்லா பழங்குடிகளையும் ஆராய்ந்துவிட்டோம்…. ‘ ‘
‘ ‘ஆம். கண்டிப்பாக நீங்கள் சரியான வேலை செய்தீர்கள். ஆனால் ஆய்வுகளைப்பொறுத்தவரை எதுவுமே முடிவு அல்ல. நாம் போன பாதை தவறாக இருக்கலாம். நாம் ஏதாவது ஒரு முக்கிய அம்சத்தை தவற விட்டிருக்கலாம். நான் மீண்டும் அடுத்த ஜனவரியியில் கெய்ரோ வரக்கூடும்… ‘
‘ ‘ ஆனால் நாம் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. நம் தொழில் அதுவல்ல… ‘ ‘ நாசர் சற்று சலிப்புடன் சொன்னார்
‘ ‘ஆம். ஆகவேதான் நமக்கு அது ஹாபி. ஆராய்ச்சியாளர்கள் ஒருவேளை ஹாபியாக பிஸினஸ் செய்வார்கள்… ‘ ‘ கிருஷ்ணன் சிரித்தான். நாசரும் சிரித்தார்.
விமானம் கிளம்பியது. கிருஷ்ணன் நாசரின் தோளை தட்டிவிட்டு சிரித்தபடி கிளம்பினான் ‘ ‘ நன்றி நாசர். நல்ல நாட்கள். நைல் நதி அழகானது. மாநிறப் பெண்கள் அழகானவர்கள். சாக்ஷ் இனியது ‘ ‘
‘ ‘ நன்றி . மீண்டும் வாருங்கள் ‘ ‘
**
காரை பாரம்பரிய உடையணிந்த ஒரு வயதான பெண் கைகாட்டி நிறுத்தினாள். கார்கள் நிறுத்துமிடத்திலிருந்து ஒவ்வொரு காராகச் சீறிச்சென்றுகொண்டிருந்தன.
காருக்குள் தலைவிட்டு ‘ ‘ ஐயா நான் அவசரமாகச்செல்ல வேண்டும்.என்னை கெய்ரோநகருக்குள் இறக்கிவிடுங்கள்.எனக்காக கார் வரவில்லை ‘ ‘ என்றாள்
நாசர் ‘ ‘ வாருங்கள் ‘ ‘ என்றார். அவள் ஏறிக்கொண்டாள்.
‘ ‘ நீங்கள் என்ன இனக்குழு ? ‘ ‘
‘வாங்காய் இனக்குழு ‘ ‘ என்றாள் அவள். ‘ ‘ வெளியூர் போனேன் நான் வருவது என் பெண்ணுக்குத்தெரியும்.ஆனால் அவள் வரவில்லை. வரமுடியவில்லை போலும் . மிகவும் நன்றி… ‘ ‘
அவள் நகங்கள் மிக மிக நீளமாக இருந்தன. சிப்பிகள் போல சுருண்டு.
‘ ‘நகம் வளர்ப்பது பொழுதுபோக்கா ? ‘
‘ ‘ இல்லையில்லை. இது எங்கள் இனக்குழு வழக்கம். நான்குவருடம் வரை வெட்டாமல் வளர்ப்போம். இப்போது இந்த வழக்கம் இங்கே அதிகமாக இல்லை. ஆனால் கிராமங்களில் நிறையபேர் வளர்க்கிறார்கள்… ‘ ‘
‘ ‘சடங்குபோல ? ‘ ‘
‘ஆமாம். ஆனால் வெறும் சடங்கு அல்ல. நாங்கள் நகங்களை ஏராளமாக வெட்டி ஒரு கலவையில் போட்டு ஆறுமாதகாலம் ஊறவைப்போம் .அப்படியே கரைந்து கலந்துவிடும். அது மிக மிக சுவையான ஒரு மது… ‘ ‘
நாசர் திடாரென்று ஒரு மனவிழிப்பைப் பெற்றார் ‘ ‘ என்ன அது ? ‘ ‘ என்றார்
‘ ‘ சாக்ஷ் ‘ ‘ .

            கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ‘ ‘ அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? ‘ ‘ என்றான்நாசர் ‘ ‘ இல்லையே ‘ ‘ என்றார். ‘ ‘ நம்முடைய பங்குதாரரா ? ‘ ‘‘ ‘ தொழில்முறையில் மருத்துவர். வேதியியலிலும் ஈடுபாடு இருந்தது. அத்துடன் மத அறிஞரும்கூட ‘ ‘ என்றான் கிருஷ்ணன். ‘ ‘ பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ‘ ‘‘ ‘ஓகோ ‘ ‘ என்றார் நாசர் ஆர்வமிழந்து . இறந்தவர்கள் அவரது வியாபாரத்துக்கு உதவமாட்டார்கள்.‘ ‘ அசல்பெயர் அபூ முவஃபக் அத்தீன் அப்துல் லதீஃப் அல் பக்தாதி . ஹிஜ்ரி 557ல் பாக்தாதில் பிறந்தார் பிறந்தார். அதாவது 1162ல் ‘ ‘‘ ‘ஈராக்கியன் ‘ ‘‘ ‘அப்போது ஈராக் இல்லை ‘ ‘ என்றான் கிருஷ்ணன். ‘ ‘ அவருக்கு ஹீப்ரூ உட்பட எட்டு மொழிகள் தெரியும். தன் வாழ்நாள் முழுக்க பிரயாணம் செய்துகொண்டே இருந்தார். அவரது முக்கியமான நூல் மனித உடலமைப்பு பற்றிய அவரது விளக்க நூல்தான். பதினாறாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் அதுதான் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டது. உண்மையில் ஐரோப்பிய மருத்துவ இயல் கிரேக்க மரபைவிட அரபு மரபுக்கு அதிகம் கடன்பட்டது ‘ ‘‘ ‘ சுவாரஸியமான மனிதர் ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ இந்த மதுவின்பெயர் சாக்ஷ்.

 

        கெய்ரோவில் ஒரு மதிப்புமிக்க விருந்தினரை உபசரிக்கவேண்டுமானால் இதைத்தான் பரிமாறுவோம். ‘ ‘‘ ‘கடுமையானதா ? ‘ ‘ என்றபடி கிருஷ்ணன் படிகக் கோப்பையை எடுத்தான்‘ ‘மிக மென்மையானது. சொல்லப்போனால் இது மதுவே அல்ல, குளிர்பானம். ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ இதை எல்லாரும் தயாரிப்பதில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே தலைமுறைதலைமுறையாக இதன் தயாரிப்பு ரகசியத்தை வைத்திருக்கின்றன. சொல்லப்போனால் குடும்ப ரகசியம்போல ‘ ‘‘எகிப்திய கோலா ‘ ‘ என்றான் கிருஷ்ணன்.‘ ‘கிட்டத்தட்ட ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘எப்படி இருக்கிறது ? ‘ ‘‘ஆர்வமூட்டும் மணம் , வினோதமான மெல்லிய ருசி ‘ ‘‘ ‘அதுதான் அதன் சிறப்பம்சம். நாலைந்துமுறை குடித்தால் அந்த மணத்துக்கும் ருசிக்கும் அடிமையாகிவிடுவீர்கள் ‘ ‘கிருஷ்ணன் நாஃப்கினால் உதடுகளைத் துடைத்துக் கொண்டான். ‘ ‘ லதீஃப் கிபி 1197ல் எகிப்துக்கு வந்தார். இங்கே இருந்த அஸ்ஹர் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். கெய்ரோ அனுபவங்களை ‘அல் இஃபாதஹ் வல் இஃதிபார் ‘ என்ற நூலில் சொல்லியிருக்கிறார். அதில் மிகமிக விசித்திரமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த கேக்கைப்பார்த்ததும் நினைவுகூர்ந்தேன்… ‘ ‘‘ ‘ நாம் இறைச்சிக்குச் செல்லலாம் ‘ ‘‘ ‘ நான் சைவம் ‘ ‘ என்றான் கிருஷ்ணன்‘ ‘மீன் ? ‘ ‘‘ ‘ஊன் உணவே சாப்பிடமாட்டோம்.

 

     தலைமுறை தலைமுறையாக அபப்டித்தான் ‘ ‘‘ ‘உங்கள் மத வழக்கமா ? ‘ ‘‘இல்லை. எங்கள் இனக்குழு வழக்கம். அல்லது ஒருவகை மனப்பழக்கம் என்று சொல்லலாம். இப்போது நிறையபேர் சாப்பிடுகிறார்கள். எனக்கு மாமிசத்தை சாப்பிடுவதுபற்றி கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை ‘ ‘‘ ‘விசித்திரமான வழக்கம். கீரைசாப்பிடுவீர்களா ? சாலட் ? ‘ ‘‘சரி. ‘ ‘ கிருஷ்ணன் தொடர்ந்தான் ‘ ‘ என்ன சொல்லிவந்தேன், கிபி 1200 முதல் 1203 வரை தொடர்ச்சியாக மூன்றுவருடம் நைல் முற்றிலும் வரண்டது. எகிப்தை கொடுமையான பஞ்சம் பிடித்துக் கொண்டது. அதைப்போன்ற பெரும்பஞ்சங்களை அபூர்வமாகவே காணமுடியும் என்று லதீஃப் சொல்கிறார். பசியால் இறந்தவர்கள் மட்டும் அரசங்க கணக்குப்படி ஒன்றரை லட்சம். மக்கள் உணவுக்காக வெறிபிடித்து அலைந்தார்கள். கண்ணில கண்ட பச்சைகளை எல்லாம் தின்றார்கள் . கொலையும் கொள்ளையும் செய்தார்கள். நாய்நரிகளையெல்லாம் பிடித்து தின்றார்கள் புழுப்பூச்சிகளை தின்றார்கள். பிறகு எதுவுமே எஞ்சாமலாயிற்று. எல்லாரும் பட்டினியானார்கள். அப்போதுதான் நரமாமிசம் தின்னும் வழக்கம் உருவாகியது.. ‘ ‘‘ ‘ காய்கறிகள் இங்கே… ‘ ‘ என்ற நாசர் நிறுத்தி கூர்ந்து பார்த்து , ‘ ‘ என்ன ? ‘ ‘ என்றார்‘ ‘மனிதனை மனிதன் தின்ன ஆரம்பித்தான். ‘ ‘‘ ‘உண்மையாகவா ? ‘‘ஆம். லதீஃப் அவர் பார்த்தவற்றை எழுதிவைத்திருக்கிறார்.

 

            மிகையாகச் சொல்வது அவரது வழக்கம் இல்லை. அவர் விஞ்ஞானி ‘ ‘‘ ‘யார் சாப்பிட்டார்கள் ? ‘ ‘‘ ‘ எல்லாரும்தான். முதலில் இறந்தவர்களை சிலர் ரகசியமாக சுட்டு தின்றார்கள். மெல்லமெல்ல அது பரவியது. ஆரம்பத்தில் ,இருந்த தயக்கங்கள் விலகியதும் எல்லாரும் கூட்டம்கூட்டமாக தின்ன ஆரம்பித்தார்கள். பிணங்கள் தீர்ந்ததும் வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள். கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களுடன் இறங்கி மனிதர்களைப் பிடித்து கொன்று உண்டார்கள். அதிகமும் குழந்தைகளையும் முதியவர்களையும். சிலநாட்களிலேயே அதில் ருசி கண்டுகொண்டார்கள். விதவிதமாக சமைத்து உண்ண ஆரம்பித்தார்கள். தங்கள் தேவைக்கு மிஞ்சியதை விற்றார்கள். அது ஒரு வணிகமாக மாறியது . கடைகளில் வேகவைத்த மனித மாமிசம் விற்கப்பட்டது. மிஸ்ர் என்ற ஊரில் விற்பனைக்காக கூடைகளில் பொரித்த குழந்தைகள் வைக்கப்பட்டிருப்பதை லதீஃப் கண்டாராம். மனித மாமிசம் உப்பிலிடப்பட்டு ஜாடிகளில் விதவிதமாக அலங்காரமாக வைக்கபப்ட்டது. கூவி விற்கப்பட்டது…. ‘ ‘‘ ‘நம்ப முடியவில்லை ‘ ‘‘ ‘ நம்பியாக வேண்டும் ‘ ‘ என்றான் கிருஷ்ணன் ‘ ‘பிறகு வேறு ஊர்களிலிருந்து உணவு வந்ததும் பஞ்சம் அடங்க ஆரம்பித்தது. ஆனால் ஏராளமான மக்கள் இதில் ருசியும் இத்தொழிலில் சுகமும் கண்டுகொண்டார்கள். அவர்களை மனித வேட்டையிலிருந்து தடுக்க முடியவில்லை.

 

        எகிப்திய அரசாங்கம் அவர்களை ஒடுக்க முனைந்தபோது அவர்கள் ஊர்களுக்கு வெளியே தனிச் சமூகங்களாக குடியேறினார்கள். வழிப்போக்கர்களை கொன்று தின்றார்கள். கெய்ரோவுக்கு வெளியே அப்படி ஒரு பகுதியை ராணுவம் தாக்கியபோது மலைபோல எலும்புகள் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள். மருத்துவர்களை நோயாளியைப்பார்க்க என்று கூட்டிச்சென்று கொன்று தின்பதும் மதகுருக்களை கூட்டிச்சென்று தின்பதும் சாதாரணமாக இருந்தது….பிறகு மெல்ல இப்பழக்கம் அழிந்தது ‘ ‘‘ ‘படைத்தவனுக்கு நன்றி ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ பேரர், சாலட்… ‘ ‘‘ ‘ஆனால் என்னுடைய கொள்கைப்படி இத்தகைய பழக்கங்கள் அழியவே அழியாது. ஏதோ ஒருவகையில் உருமாறி அவை நீடிக்கும். நாம் கலாச்சாரம் என்று சொல்வதெல்லாம் இம்மாதிரி உருமாறிய பழக்கங்களின் தொகுப்பைத்தான்… ‘ ‘‘ ‘இப்போதும் மனிதமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்கிறீர்களா ? ‘ ‘‘ இருக்கலாம். எங்கோ சிலர். மிக ரகசியமாக . சிலசமயம் அது ஏதாவது மதச் சடங்கின் ஒரு பகுதியாக மாறியிருக்கும். வருடத்தில் ஒருநாள் சில நிபந்தனைகளுடன் உண்ணலாம். ஏதோ ஒருவடிவில் கண்டிப்பாக அப்பழக்கம் இங்கே இருக்கும்…. ‘ ‘ கிருஷ்ணன் சொன்னான் ‘ ‘ ருசி என்பது அப்படிப்பட்டது. அது மொழிபோல. இரண்டுமே நாக்குடன் தொடர்புடையவை.

 

          இரண்டுக்கும் மனிதனின் ஆழ்மனதுடன் நேரடியான தொடர்பு உண்டு. பல்வேறு விஷயங்கள் புதைந்து மட்கி உருவான ஒன்றுதான் நம் ஆழ்மனம். மனிதனின் எந்த உணவுப்பழக்கமும் அழிந்துபோகாது. அது ருசியாக மாறி நாக்கில் வாழும். நாக்கு அதை தேடியபடியேதான் இருக்கும்… ‘ ‘‘ ‘கற்பனையே செய்யமுடியவில்லை ‘ ‘ என்றார் நாசர் ‘ ‘ நாங்கள் இங்கே இறைச்சியாலான பலவகை அப்பங்களை விருந்தினருக்கு அளிப்பதுண்டு… ஆனால் மனித மாமிசம்… அய்யோ ! ‘ ‘‘ ‘ அப்படியா ‘ ‘ என்றான் கிருஷ்ணன் ‘ ‘ இறைச்சி இல்லாமல் சூப் கொண்டுவரச்சொல்லுங்கள். ‘ ‘ வாய் துடைத்தபடி ‘ ‘ நான் தேடிப்பார்க்க விரும்புகிறேன். கெய்ரோவில் இரண்டுவாரம் எனக்கு வேறுவேலை இல்லை. என் கோட்பாட்டை மெய்யா என்று பார்க்க விரும்புகிறேன். இப்பகுதியில் உள்ள அத்தனை மக்களின் உணவுப்பழக்கங்களையும் சோதிக்க வேண்டும் ‘ ‘‘ ‘பைத்தியக்காரத்தனம். இந்த நூற்றாண்டில்… ‘ ‘‘ ‘ மனிதர்களின் பழக்கங்களில் பைத்தியக்காரத்தனம் இன்றியமையாத ஒரு அம்சம். கண்டிப்பாக இங்கே யாரோ எங்கோ நரமாமிசம் தின்கிறார்கள். ஏதோ ஒரு வடிவில். அதைக் கண்டுபிடிக்கவேண்டும் ‘ ‘நாசர் தலையசைத்தார்.**‘ ‘ இனிமையான நாட்கள் ‘ ‘ என்று நாசர் கைகுலுக்கினார். ‘ ‘ இத்தனை நாட்கள் நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்றும் நம் இத்தனை நாள் சேர்ந்து சுற்றக்கூடும் என்றும் நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னைப்பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய கெளரவம்…. ‘ ‘கிருஷ்ணன் புன்னைகை செய்தான் ‘ ‘ நீங்கள் மிக நன்ற்காக உபசரித்தீர்கள் நாசர்.

 

           நான் கண்டிப்பாக இதை எப்போதும் நினைவுகூர்வேன். அதிலும் இந்த மது…. சாக்ஷ்! இதன் ருசிக்கு நான் கிட்டத்தட்ட அடிமையாகிவிட்டேன். … ‘‘ ‘நீங்கள் அமெரிக்கா செலும்போது உங்களைத்தேடி இது அங்கேவந்து காத்திருக்கும் ‘ ‘ என்றார் நாசர் சிரித்தபடி ‘ ‘நான் பத்துநாள் முன்னரே நாற்பது புட்டி சாக்ஷ் அனுப்பிவிட்டேன்…. ‘ ‘‘ ‘நன்றி ‘ ‘ கிருஷ்ணன் வாட்சைப்பார்த்தான் ‘ ‘ நேரமாகிறது ‘ ‘‘ ‘இன்னும் பத்து நிமிடங்கள் . நீண்ட நாள் நண்பரைப்பிரியும்போது இறுதி வினாடிகளே அந்த நீண்டநாட்களாக மாறிவிடுகின்றன என்று ஒரு பழமொழி எங்கள் இனக்குழுவில் உண்டு ‘ ‘ என்றார் நாசர்.‘ ‘இந்த சாக்ஷ் மதுவின் ருசியில் எங்கள் ஊரில் உள்ள ஒரு பானத்தின் வாசனை இருக்கிறது. அதை நேற்றுத்தான் கண்டுபிடித்தேன் ‘ ‘ என்றான் கிருஷ்ணன். ‘ ‘ அதை எங்கள் நிலங்களை வேளாண்மைசெய்யும் சில இனக்குழுக்கள் தயாரிக்கிறார்கள். நாங்கள் வருடத்தில் நாற்பதுநாள் காளி பூசை செய்வோம். அந்நாட்களில் அதை தயாரித்து எங்களுக்குக் கொண்டுவருவார்கள். அதை ஆண்கள் மட்டுமே குடிப்போம். என் சிறுவயதில் சிலமுறை அதை குடித்திருக்கிறேன். இப்போது தயாரிக்கிறார்களா என்று தெரியவில்ல்லை. காளிபூசையே இருக்கிறதா என்று தெரியவில்லை ‘ ‘‘ ‘மாமிசம் சாப்பிடாத இனக்குழு என்றீர்கள்…. ‘ ‘‘ ‘நூறு வருடம் முன்புகூட நாங்கள் சாப்பிட்டதுண்டு. ஆனால் உணவாக அல்ல, பூசையின் பகுதியாக. நாங்கள் சாக்தேயர்கள்.

 

            கடவுளை நாங்கள் மரணமாக , அனைத்தையும் அழிக்கும் சக்தியாக, பெண் வடிவம் கொண்டவளாக வணங்குகிறோம். அவளுக்கு விலங்குகளை பலிகொடுப்போம். அந்த ஊனை உண்போம். அதில் மதுவும் ஓர் அம்சம்…. ‘ ‘அறிவிப்புகள் ஒலித்தன‘ ‘என் கோட்பாட்டை நான் இன்னும் கைவிடவில்லை. ‘ ‘ என்றான் கிருஷ்ணன் ‘ ‘ நாக்கு ஒரு போதும் மறக்காது. அதன் நினைவுக்கு மனிதவரலாற்றைவிட ஆழம் உண்டு. ‘ ‘‘ ‘ எகிப்தில் நாம் இனிமேல் எங்கே தேடுவது ? அனேகமாக எல்லா உணவுப்பழக்கங்களையும் எல்லா பழங்குடிகளையும் ஆராய்ந்துவிட்டோம்…. ‘ ‘‘ ‘ஆம். கண்டிப்பாக நீங்கள் சரியான வேலை செய்தீர்கள். ஆனால் ஆய்வுகளைப்பொறுத்தவரை எதுவுமே முடிவு அல்ல. நாம் போன பாதை தவறாக இருக்கலாம். நாம் ஏதாவது ஒரு முக்கிய அம்சத்தை தவற விட்டிருக்கலாம். நான் மீண்டும் அடுத்த ஜனவரியியில் கெய்ரோ வரக்கூடும்… ‘‘ ‘ ஆனால் நாம் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. நம் தொழில் அதுவல்ல… ‘ ‘ நாசர் சற்று சலிப்புடன் சொன்னார்‘ ‘ஆம். ஆகவேதான் நமக்கு அது ஹாபி. ஆராய்ச்சியாளர்கள் ஒருவேளை ஹாபியாக பிஸினஸ் செய்வார்கள்… ‘ ‘ கிருஷ்ணன் சிரித்தான். நாசரும் சிரித்தார்.விமானம் கிளம்பியது. கிருஷ்ணன் நாசரின் தோளை தட்டிவிட்டு சிரித்தபடி கிளம்பினான் ‘ ‘ நன்றி நாசர். நல்ல நாட்கள். நைல் நதி அழகானது. மாநிறப் பெண்கள் அழகானவர்கள். சாக்ஷ் இனியது ‘ ‘‘ ‘ நன்றி .

 

          மீண்டும் வாருங்கள் ‘ ‘**காரை பாரம்பரிய உடையணிந்த ஒரு வயதான பெண் கைகாட்டி நிறுத்தினாள். கார்கள் நிறுத்துமிடத்திலிருந்து ஒவ்வொரு காராகச் சீறிச்சென்றுகொண்டிருந்தன.காருக்குள் தலைவிட்டு ‘ ‘ ஐயா நான் அவசரமாகச்செல்ல வேண்டும்.என்னை கெய்ரோநகருக்குள் இறக்கிவிடுங்கள்.எனக்காக கார் வரவில்லை ‘ ‘ என்றாள்நாசர் ‘ ‘ வாருங்கள் ‘ ‘ என்றார். அவள் ஏறிக்கொண்டாள்.‘ ‘ நீங்கள் என்ன இனக்குழு ? ‘ ‘‘வாங்காய் இனக்குழு ‘ ‘ என்றாள் அவள். ‘ ‘ வெளியூர் போனேன் நான் வருவது என் பெண்ணுக்குத்தெரியும்.ஆனால் அவள் வரவில்லை. வரமுடியவில்லை போலும் . மிகவும் நன்றி… ‘ ‘அவள் நகங்கள் மிக மிக நீளமாக இருந்தன. சிப்பிகள் போல சுருண்டு.‘ ‘நகம் வளர்ப்பது பொழுதுபோக்கா ? ‘‘ ‘ இல்லையில்லை. இது எங்கள் இனக்குழு வழக்கம். நான்குவருடம் வரை வெட்டாமல் வளர்ப்போம். இப்போது இந்த வழக்கம் இங்கே அதிகமாக இல்லை. ஆனால் கிராமங்களில் நிறையபேர் வளர்க்கிறார்கள்… ‘ ‘‘ ‘சடங்குபோல ? ‘ ‘‘ஆமாம். ஆனால் வெறும் சடங்கு அல்ல. நாங்கள் நகங்களை ஏராளமாக வெட்டி ஒரு கலவையில் போட்டு ஆறுமாதகாலம் ஊறவைப்போம் .அப்படியே கரைந்து கலந்துவிடும். அது மிக மிக சுவையான ஒரு மது… ‘ ‘நாசர் திடாரென்று ஒரு மனவிழிப்பைப் பெற்றார் ‘ ‘ என்ன அது ? ‘ ‘ என்றார்‘ ‘ சாக்ஷ் ‘ ‘ .

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.