LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

நல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் !!

தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றியும், அவற்றை சமைக்கும் விதம் பற்றியும், சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் விளக்கம் அளிக்கிறார் நல்லசோறு அமைப்பைச் சேர்ந்த ராஜமுருகன் அவர்கள். இந்த இனிய நிகழ்ச்சியை வலைத்தமிழ் இணையதளம் நேரடியாக ஒளிபரப்புகிறது.


இந்திய நேரப்படி, மார்ச், 8, காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், அமெரிக்க நேரப்படி, மார்ச் 7, இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் நிகழ்ச்சியை நேரடியாக காணலாம்.


நல்லசோறு ராஜமுருகனை பற்றி :

சொகுசான வேலை, கை நிறைய சம்பளம், பகட்டான வாழ்க்கை இதுதான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்பும் வாழ்க்கை. இவை அனைத்திற்கும் வாய்ப்புகள் அமைந்தும், அதனை உதறி விட்டு, இந்த சமுகத்தின் நலனுக்காக தன்னலம் கருதாமல் அயராது உழைத்து கொண்டிருக்கும் ஓர் இளைஞர். இதற்காக இவருடைய பின்புலம் ஒன்றும் பணபலம் மிக்கது இல்லை. அன்றாட அடிப்படை தேவை மட்டுமே பூர்த்தி செய்யகூடிய விவசாய பெற்றோருக்கு பிறந்த மகனே ரா.ராஜமுருகன்.

இன்று இலட்சங்களில் இருந்தால் கோடிகளுக்கும், கோடிகளில் இருந்தால் மில்லியனுக்கும் ஆசைபடும் பலர் போல் அல்லாது, இவர் இச்சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஓர் விடிவெள்ளி ஆவார். திருச்செங்கோட்டில் பள்ளிபடிப்பை முடித்து, இளங்கலை பட்டத்தை (B.Sc - Catering Science and Hotel Management, RVS College of Arts and Science) பாரதியார் பலகலைக்கழகம், கோவையில் முடித்து, முதுகலை பட்டத்தை(MBA, M.Kumarasamy College of Engineering) அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே பல்வேறு கருத்தரங்குகளில் பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை உணவுகளை பற்றி ஆய்வு கட்டுரைகளை சமர்பித்து உள்ளார். கல்லூரி முடித்த பின்  தனக்கு வந்த பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை உணவு மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த "நல்ல சோறு" என்ற அமைப்பை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு சமூக பணிகள் செய்து ஊடகங்கள், கருத்தரங்கு, உணவுதிருவிழா, பயிலரங்கு மற்றும் தொடர்பியல் சாதனைகள் வழியாக பல தரப்பட்ட மக்களுக்கும், மக்கள் நலம், மண் வளம் மற்றும் விவசாய நலன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவிப்பவர்கள் http://www.valaitamil.com/events/tamils-traditional-millets-foods-tview257.html என்ற முகவரியில் தங்களது விவரங்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் http://www.valaitamil.com/webtv/ என்ற இணைய முகவரிக்கு சென்று நிகழ்ச்சியை நேரலையாக பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள், http://www.valaitamil.com/webtv/ என்ற வலைபக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பி உங்களது கேள்விக்கனைகளை தொடுக்கலாம்.

by Swathi   on 06 Mar 2015  1 Comments
Tags: Millet Foods   Nalla Soru Rajamurugan   Nall Soru   நல்ல சோறு   ராஜமுருகன்   சிறுதானியங்கள்   பாரம்பரிய சிறுதானியங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
நல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் !! நல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் !!
கருத்துகள்
06-Aug-2015 08:49:29 sakthivel.c said : Report Abuse
vikadan katturai very nice shall I meet u Mr.rajamurugan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.