LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சுதந்திரப்போராட்ட தமிழர்கள்

வெ. இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
கவிஞரின் நாட்டுப்பற்று
முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
எழுதிய நூல்கள்
மலைக்கள்ளன் (நாவல்)
காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
பிரார்த்தனை (கவிதை)
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
திருக்குறளும் பரிமேலழகரும்
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
திருக்குறள் புது உரை
கம்பனும் வால்மீகியும்
கம்பன் கவிதை இன்பக் குவியல்
என்கதை (சுயசரிதம்)
அவனும் அவளும் (கவிதை)
சங்கொலி (கவிதை)
மாமன் மகள் (நாடகம்)
அரவணை சுந்தரம் (நாடகம்)
மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு
கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

by Swathi   on 27 Nov 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
01-Jan-2014 14:51:41 CH . NAMASIVAYAM said : Report Abuse
கவிஞரின் படைப்புகளில் 'அவளும் அவனும்' தனிச்சிறப்புடையது. தமிழ்க்கவிதை இலக்கியத்தில் அது போன்றவை மிகவும் குறைவே. Tennyson இயற்றிய Enoch Arden ஐப் போல idyll என்ற வகையைச் சார்ந்த கதைப் பாட்டு. நாமக்கல் கவிஞர் உலகளாவிய எண்ணங்களால் (universality )ஆட்கொள்ளப்பட்டவர். இவ்வகையில் இவர் பாரதியாருக்கு நிகர். 20ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களில் வெறுப்புகளில் தம்மைத் தளைப் படுத்திக்கொள்ளாமல் இவர் போலவே உலகளாவிய எண்ணங்களில் உலவி வந்தவர் கவிப்பேரரசர் கண்ணதாசன் மட்டுமே.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.