LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. - வித்யாசாகர்

து உண்மையிலேயே ஒரு
இனிய காலம் தான்..

நீயும் நானும்
மேடுபள்ளங்களில் நடப்போம்
மனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை..

பேசி பேசி சிரிப்போம்
பொய்யிற்கோ பகட்டிற்கோ
துளிகூட சிரித்ததேயில்லை..

கட்டிப்பிடித்துக்கொண்டு
வாஞ்சையோடு அணைத்துக் கொள்வோம்
முத்தத்திற்கு அவசியமேற்பட்டதில்லை..

முழு நிலவோ, ஒரு சூரியனோ கூட
நமது ஒருநாள் பிரிவைத் தாண்டி
போனதேயில்லை..

நெற்றியில் ஒற்றைப் பொட்டிருப்பதுபோல்
உனக்கு நானும், எனக்கு நீயும்
மிக அழகாகத் தெரிந்தோம்..

மழை பெய்கையிலும்
முறுக்கிவிட்டுக்கொள்ளும் மீசையைப்போல்
நமதன்பு எதிலுமே தாழாதிருந்தது..

பிழை ஒன்றுதான்
நாம் வளர்ந்தேயிருக்கக் கூடாது
அல்லது வளர்ந்ததும்
கொள்கை கருத்து சாக்கடை என்றெல்லாம்
பிரிந்திருக்கக் கூடாது..

போகட்டும் –

உயிர் ஒன்றுதானிருக்கிறது
மீண்டும் சந்திக்கையில் அன்றைப்போலவே
கட்டி அணைத்துக்கொள்வோம்

நட்பில் நாசமாய்ப் போகட்டுமந்த
கொள்கை கருத்து சாக்கடையெல்லாம்..

 

ன் காதலிக்குக் கூட
கடிதம் எழுதுபவன்
நீயாகவே இருந்தாய்..

உன்னிடமிருந்து பேசி
வளர்ந்துதான் உலகமெனக்கு
இத்தனைப் பெரிதாக தெரிந்தது..

என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு
வண்ணமடித்தவனும்
உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்..

நீ வரும்நாளில்தான் என்வீட்டுச்
செல்லநாய்க்குட்டி கூட என்னிடம்
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
அதைக் கொஞ்சவில்லையென்று..

உனக்கும் உயிர்க்கும்
பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை
உயிர் போனாலும் நான் பிணம்தான்
நீ போனாலும் பிணம்தான்..

 

ள்ளிநாட்களில்
நாம் பார்த்த உலகைவிட அழகு
வேறில்லை..

பட்டம் விடுவதுகூட இன்று
மாடிக்குமேல் நிகழ்ந்துவிடுகிறது
நாம் பக்கத்தில் அமர்ந்துபேசிய கதைகளை
காணவில்லையே..

கொம்பு தள்ளி தள்ளி
ஊரெல்லாம் ஓடினாலும்
உன் செருப்பிட்டு ஓடிய கால்தடம் தான்
நினைவெல்லாம் இருக்கிறது..

நீச்சல் அடிக்க குளம் தேடி
அலைந்ததும்
மீன்பிடிக்கப் போய் தவளை பிடித்துத்
தின்றதும்; இன்று நினைக்கையில்

ச்சீ.. என்றுத் தோன்றினாலும்
இன்றும் நெஞ்சிலினிப்பது
அந்த நாம் நடந்தோடி திரிந்த நாட்களின்
நினைவொன்று தான் நண்பா..

காதலிக்கும் உனக்கும் ஒன்றுதான்
பெரிய வேறுபாடு
அவள் நெஞ்சில் இருப்பாள்
நீ நெஞ்சாய் இருக்கிறாய்..

ரவின் விளக்கொளியிலமர்ந்து
படித்ததும் சரி
எங்கோ எவர்நாட்டு அரசியல் குறித்தோ
பேசி வருந்தியதும் சரி
நாளெல்லாம் பேசிமுடியாமல்
நம் விடுதலைப் பற்றியும்
சமூக விடிவு பற்றியும்
நல்லொழுக்கம் குறித்தும் அலசி அலசி
அயர்ந்துப்போன இரவுநிலா குறிப்பில் கூட
அந்த நட்பின் நாட்கள்
பேசிய நினைவுகளெல்லாம் அழிந்துபோயிருக்கலாம்

ஆனால் நம் நினைவில்
அந்த நிலவும் நினைவும்
நிழலைவிட நெருங்கியே இருக்கும்..

ரு தோழனோ தோழியோ
தோள்சாய கிடைப்பது
மீண்டும் மடிசாய தாய் கிடைப்பதற்கீடு..

ஆம் நண்பா
நீயும் சரி
எனது தோழிமார்களும் சரி
அன்பில் அழுக்கு சேராதவர்கள்..

எல்லோரிடமும் நான்
பேசிக்கொள்வதில்லை
அத்தனையொன்றும்
கூடி உறவாடிக்கொள்வதில்லை

ஆனால் அத்தனைப் பேருமே
உள்ளே
அவ்வளவு நெருக்கமாய் இருக்கிறார்கள்..

காரணம்
அனைவருக்கும் முகமாய்
நீ இருக்கிறாய்,

ஒரு சொல்லில் இருக்கிறாய்
நட்பு எனும் ஒரு சொல்லில்..

நட்பு தாய்மையில் அடங்குவதில்லை
காதலில் அடங்குவதில்லை
சகோதரப் பாசத்திலும் அடங்குவதில்லை; ஆனால்
நட்பில் எல்லாமே அடங்கிப் போகிறது..

தோழியரும்
தோழர்களுமாய் இருக்கும்
எனதுயிர் நண்பர்கள் வாழ்க..

 

- வித்யாசாகர்

by Swathi   on 23 Aug 2015  0 Comments
Tags: Nanba   Nanban   Vidhyasagar   Vidhyasagar Kavithai   நண்பா   நண்பன்   நண்பன் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
நட்பு - கவிப்புயல் இனியவன் நட்பு - கவிப்புயல் இனியவன்
பேச்சாட்டன்.. - வித்யாசாகர் பேச்சாட்டன்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..  - வித்யாசாகர் நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. - வித்யாசாகர்
யாதுமாகிய அவள்..  வித்யாசாகர்! யாதுமாகிய அவள்.. வித்யாசாகர்!
பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர் பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.