LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

நன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி

ஒருநாள் ஒரு பெண்மணி சுவாமிஜியைப் பார்க்க வந்தார். அவர் தன் கணவர் மீது மிகுந்த மனக்குறை இருப்பதாகக் கூறினார். என்னம்மா உன்குறை என்று மகரிஷி கேட்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்” என் கணவர் என்னை மிகவும் உதாசீனப்படுத்துகிறார். என்னை மதிப்பதில்லை. என்னிடம் எதையும் கலந்து ஆலோசிப்பதில்லை. அதனால் வரவர எனக்கு இல்வாழ்க்கையே வெறுப்பாகிவிட்டது சுவாமிஜி” என்கிறார்.

சுவாமிஜி அந்தப் பெண்ணிடம்” அம்மா, உங்கள் கணவர் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்திருக்கிறாரா? அதை நினைவுபடுத்திக் கூற முடியுமா?” என்றார்கள். சிறிதுநேரம் யோசித்த அவர் தன் வாழ்க்கைக் கதையைத் தொடர்கிறார். சுவாமிஜி நான் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்பொழுது எனது பெற்றோர்கள் எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

எனக்கு மேற்கொண்டு படிக்க மிகவும் ஆசை. என் விருப்பத்தை என் கணவரிடம் தெரிவித்தேன். அதற்கென்ன படியேன் என்று கூறி என்னை தினமும் பள்ளியின் வாசலில் கொண்டு வந்துவிட்டு வேலைக்குச் செல்வார். நான் 12வது தேர்வில் வெற்றி பெற்றேன். அதற்குமேல் பட்டப்படிப்பு படிக்க எனக்கு ஆசை. அதையும் அவரிடம் மெதுவாகத் தெரிவித்தேன். மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்து தபால் மூலம் கல்க உதவினார். பட்டப்படிப்பு படித்து முடித்தேன்.

எப்படி தேர்வெல்லாம் நீங்களே சென்று எழுதி வந்தீர்களா? உங்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா?

”இல்லை. மூன்றாம் ஆண்டில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கும், தேர்வு எழுதும்போதும் அவரை என்னுடைன் ஒரு மாதத்திற்கும் மேல் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து வெளியூரில் வந்து என்னுடன் தங்கியிருந்து படிப்பை முடிக்க உதவினார் சுவாமிஜி. அதற்கு மேல் B.Ed., படிக்க ஆசைப்பட்டேன். அந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றினார். B.Ed., முடித்தேன்.

எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியராகப் பணிபுரிய விருப்பம். நான் என் விருப்பத்தை அவரிடம் சொன்னேன். அவரும் பல பேரைப் பார்த்து அலைந்து நான் விரும்பியபடி ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலையும் வாங்கிக் கொடுத்தார். மார்க்கெட் சென்று காய்கறிகளெல்லாம் நீங்கள்தானே வாங்கி வருகிறீர்கள்? என்றார் சுவாமிஜி. இல்லை, அதையெல்லாம் அவர்தான் வாங்கி வருகிறார். தக்காளி என்ன விலை என்பது கூட எனக்குத் தெரியாது என்கிறார் பெருமையுடன்.

வீட்டு வேலைகளில் ஏதும் உதவுவாரா? காய்கறிகளெல்லாம் பெரும்பாலும் அவரே நறுக்கிக் கொடுத்து விடுவார். என்னுடைய வேலைகள் எல்லாவற்றையும் போட்டு ஒன்றாகக் கலக்குவதுதான் என்கிறார் புன்னகையோடு. சரி பள்ளிக்கு எவ்வாறு செல்வீர்கள்? அவரே ஸ்கூட்டரில் கொண்டுவந்து எங்கள் பள்ளியல் விட்டுவிட்டு அவருடைய அலுவலகம் சென்று விடுவார்கள் என்கிறார் மகிழ்ச்சியாக.

”ஏனம்மா, இதற்குமேல் ஒரு கணவர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்? இப்படி ஒரு கணவர் கிடைத்ததற்கு நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் வாழ்வில் இதுவரை உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எல்லாம் ஒரு சில நிமிடம் நினைத்துப் பாருங்களேன்” என்றார் மகரிஷி.

மகரிஷியின் வார்த்தைகளைக் கேட்டதும் சிறிது நேரம் அமைதியாயிருக்கிறார். நிறைகளை பார்க்கத் தெரியாத தன்னுடைய தவறை உணருகிறார். பிறகு, ஆம் சுவாமிஜி என் கணவரின் பெருமைகளை நான் அறியாமல் இருந்துவிட்டேன். இதுபோன்ற ஒரு கணவர் எந்தப் பெண்ணிற்கும் கிடைப்பது அரிதுதான். என் முன்னோர்கள் செய்த பாக்கியம்தான் என்றார் நாதழுதழுக்க. அந்த நிலையில் அவர் கண்கள் கலங்குகின்றன.

சுவாமிஜி அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள். சிறிதுகாலம் கழித்து அந்தப் பெண்மணி சுவாமிஜியைச் சந்திக்கிறார். ”சுவாமிஜி இப்போதெல்லாம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார்.

ஒருவர் பொறை இருவர் நட்பு என்பார்கள். பிறர் செய்த குறைகளை விட்டுவிட்டு நிறைகளை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் வசந்தம் வீசும்.

-வேதாத்திரி மகரிஷி

by Swathi   on 05 Jan 2017  1 Comments
Tags: நன்றி உணர்வு   வேதாத்திரி மகரிஷி   Nandri Unarvu   Vethathiri Maharishi   Kanavan Manaivi        
 தொடர்புடையவை-Related Articles
நன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி நன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி
இனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை ? இனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை ?
வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக விளக்கி மனித குலத்திற்கு பயன்படும்படி செய்த காயகல்ப பயிற்சி குறித்து நம் சித்தர்கள் பாடல்களில் உள்ள சில குறிப்புகள்: வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக விளக்கி மனித குலத்திற்கு பயன்படும்படி செய்த காயகல்ப பயிற்சி குறித்து நம் சித்தர்கள் பாடல்களில் உள்ள சில குறிப்புகள்:
உலகை வாழ்த்துவோம் உலகை வாழ்த்துவோம்
பிரம்மம் பிரம்மம்
நமக்குள் இருக்கும் இரகசியம் நமக்குள் இருக்கும் இரகசியம்
நல்ல குடும்பம் நல்ல குடும்பம்
வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்
கருத்துகள்
06-Jul-2018 08:26:51 Revathi said : Report Abuse
I request you to guide me in lighing Pooja lamps. Is it ok to light two kamatchi vilakku at a time...how many lamps can be light in Pooja room...shall we light single kuthu vilakku
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.