LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நன்னூல்

பொதுப் பாயிரம்

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்     1
பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்று ஏ     2
நூல் ஏ நுவல்வோன் நுவலும் திறன் ஏ
கொள்வோன் கோடல் கூற்று ஆம் ஐந்து உம்
எல்லா நூல் கு உம் இவை பொது பாயிரம்     3

1.1. நூலினது வரலாறு

நூலின் இயல்பு ஏ நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்று ஆய்
நால் பொருள் பயத்து ஓடு எழு மதம் தழுவி
ஐ இரு குற்றம் உம் அகற்றி அ மாட்சி ஓடு
எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்
என்னும் உறுப்பின் இல் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறும் ஏ     4
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்     5
அவற்று உள்
வினை இன் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்     6
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்     7
இருவர் நூல் கு உம் ஒரு சிறை தொடங்கி
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும்     8
முன்னோர் மொழி பொருள் ஏ அன்றி அவர் மொழி உம்
பொன் ஏ போல் போற்றுவம் என்பதன் உம் - முன்னோர் இன்
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதன் கு உம்
கூறு பழம் சூத்திரத்தின் கோள்     9
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயன் ஏ     10
எழு வகை மதம் ஏ உடன்படல் மறுத்தல்
பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவு ஏ
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பு ஏ
இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவு ஏ
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை
பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் ஏ     11
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈர் ஐம் குற்றம் நூல் கு ஏ     12
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்
முறையின் வைப்பு ஏ உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலின் கு அழகு எனும் பத்து ஏ     13
நுதலிப் புகுதல் ஓத்து முறை வைப்பு ஏ
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவு இடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல் (5)
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல் (10)
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒரு தலை துணிதல் எடுத்துக்காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் (15)
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்
ஒன்று இனம் முடித்தல் தன் இனம் முடித்தல்
உய்த்துணர வைப்பு என உத்தி எண் நான்கு ஏ (20)     14
நூல் பொருள் வழக்கு ஒடு வாய்ப்ப காட்டி
ஏற்புழி அறிந்து இதன் கு இ வகை ஆம் என
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி     15
நேர் இன மணி ஐ நிரல்பட வைத்தாங்கு
ஓர் இன பொருள் ஐ ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்     16
ஒரு நெறி இன்றி விரவிய பொருள் ஆல்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்     17
சில் வகை எழுத்து இல் பல் வகை பொருள் ஐ
செவ்வன் ஆடி இன் செறித்து இனிது விளக்கி
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்     18
ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை     19
பிண்டம் தொகை வகை குறி ஏ செய்கை
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம்     20
பாடம் கருத்து ஏ சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயன் ஓடு
ஆசிரியவசனம் என்ற ஈர் ஏழ் உரை ஏ     21
கருத்து பதப்பொருள் காட்டு மூன்றின் உம்
அவற்று ஒடு வினா விடை ஆக்கல் ஆன் உம்
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை     22
சூத்திரத்து உள் பொருள் அன்றி உம் ஆண்டை கு
இன்றி அமையா யாவை உம் விளங்க
தன் உரை ஆன் உம் பிற நூல் ஆன் உம்
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பு ஒடு
மெய்யின் ஐ எஞ்சாது இசைப்பது விருத்தி     23
பஞ்சி தன் சொல் ஆ பனுவல் இழை ஆக
செம் சொல் புலவன் ஏ சேயிழை ஆ - எஞ்சாத
கை ஏ வாய் ஆக கதிர் ஏ மதி ஆக
மை இலா நூல் முடியும் ஆறு     24
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கி பொல்லா - மரத்தின்
கன கோட்டம் தீர்க்கும் நூல் அஃது ஏ போல் மாந்தர்
மன கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு     25

1.2. ஆசிரியனது வரலாறு

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தௌிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி உம்
உலகு இயல் அறிவு ஓடு உயர் குணம் இனைய உம்
அமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ     26
தெரிவு அரும் பெருமை உம் திண்மை உம் பொறை உம்
பருவ முயற்சி அளவு இல் பயத்தல் உம்
மருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ     27
அளக்கல் ஆகா அளவு உம் பொருள் உம்
துளக்கல் ஆகா நிலை உம் தோற்றம் உம்
வறப்பின் உம் வளம் தரும் வண்மை உம் மலை கு ஏ     28
ஐயம் தீர பொருள் ஐ உணர்த்தல் உம்
மெய் நடு நிலை உம் மிகும் நிறைகோல் கு ஏ     29
மங்கலம் ஆகி இன்றி அமையாது
யாவர் உம் மகிழ்ந்து மேற்கொள மெல்கி
பொழுதின் முகம் மலர்வு உடையது பூ ஏ     30
மொழி குணம் இன்மை உம் இழி குண இயல்பு உம்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடல் உம்
கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை
முட தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ     31
பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்
செய்தி கழல் பெய் குடத்தின் சீர் ஏ     32
தான் ஏ தர கொளின் அன்றி தன் பால்
மேவி கொள கொடா இடத்தது மடல் பனை     33
அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர் கு
எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை     34
பல் வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர் கு அளிக்குமது முட தெங்கு ஏ     35

1.3. பாடஞ்சொல்லலின் வரலாறு

ஈதல் இயல்பு ஏ இயம்பும் காலை
காலம் உம் இடன் உம் வாலிதின் நோக்கி
சிறந்த உழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப     36

1.4. மாணாக்கனது வரலாறு

தன் மகன் ஆசான் மகன் ஏ மன் மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோன் ஏ
உரைகோளாளன் கு உரைப்பது நூல் ஏ     37
அன்னம் ஆ ஏ மண் ஒடு கிளி ஏ
இல்லி குடம் ஆடு எருமை நெய் அரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்     38
களி மடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொல் நூல் கு அஞ்சி
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர் கு பகரார் நூல் ஏ     39

1. 5. பாடம் கேட்டலின் வரலாறு

கோடல் மரபு ஏ கூறும் காலை
பொழுது ஒடு சென்று வழிபடல் முனியான்
குணத்து ஒடு பழகி அவன் குறிப்பின் சார்ந்து
இரு என இருந்து சொல் என சொல்லி
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி
சித்திர பாவை இன் அ தகவு அடங்கி
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
போ என போதல் என்மனார் புலவர்     40
நூல் பயில் இயல்பு ஏ நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்
அ மாண்பு உடையோர் தம் ஒடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்ற இவை
கடன் ஆ கொளின் ஏ மடம் நனி இகக்கும்     41
ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்
பெருக நூல் இல் பிழைபாடு இலன் ஏ     42
மு கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்     43
ஆசான் உரைத்தது அமைவர கொளின் உம்
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்     44
அ வினையாளர் ஒடு பயில் வகை ஒரு கால்
செவ்விதின் உரைப்ப அவ் இரு கால் உம்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்     45
அழல் இன் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழல் இன் நீங்கான் நிறைந்த நெஞ்சம் ஓடு
எ திறத்து ஆசான் உவக்கும் அ திறம்
அறத்து இன் திரியா படர்ச்சி வழிபாடு ஏ     46

1. 6. சிறப்புப் பாயிரத்திலக்கணம்

ஆக்கியோன் பெயர் ஏ வழி ஏ எல்லை
நூல் பெயர் யாப்பு ஏ நுதலிய பொருள் ஏ
கேட்போர் பயன் ஓடு ஆய் எண் பொருள் உம்
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பு ஏ     47
காலம் களன் ஏ காரணம் என்று இ
மூ வகை ஏற்றி மொழிநர் உம் உளர் ஏ     48
முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தின் உம்
இடுகுறி ஆன் உம் நூல் கு எய்தும் பெயர் ஏ     49
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப     50
தன் ஆசிரியன் தன் ஒடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்ற
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடன் ஏ     51
தோன்றா தோற்றி துறை பல முடிப்பின் உம்
தான் தன் புகழ்தல் தகுதி அன்று ஏ     52
மன் உடை மன்றத்து ஓலைத்தூக்கின் உம்
தன் உடை ஆற்றல் உணரார் இடையின் உம்
மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதின் உம்
தன் ஐ மறுதலை பழித்த காலை உம்
தன் ஐ புகழ்தல் உம் தகும் புலவோன் கு ஏ     53
ஆயிரம் முகத்து ஆன் அகன்றது ஆயின் உம்
பாயிரம் இல்லது பனுவல் அன்று ஏ     54
மாட கு சித்திரம் உம் மா நகர் கு கோபுரம் உம்
ஆடு அமை தோள் நல்லார் கு அணி உம் போல் - நாடி முன்
ஐது உரையாநின்ற அணிந்துரை ஐ எ நூல் கு உம்
பெய்து உரையா வைத்தார் பெரிது     55

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.