LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூக்கு பராமரிப்பு(Nose Care)

மூக்கு அடைப்பை விரட்ட முத்தான ஆலோசனைகள் !!

பொதுவாக மழைக்காலங்களில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.


மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழ் போல்டு ஸ்கை மூக்கடைப்புக்கான ஒருசில எளிய இயற்கை நிவாரணிகளை பட்டியலிட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து, மூக்கடைப்பில் இருந்து விடுபடுங்கள்.


ஆவி பிடித்தல்


மூக்கடைப்பின் போது, ஆவிப் பிடித்தால், உடனே மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். மேலும் மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் குணமாகிவிடும். அதிலும் அரை வாளி சூடான நீரில் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, ஆவி பிடித்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.


சூடான டீ


மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபட வேண்டுமெனில், சூடான ஒரு கப் டீ குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான ஏதேனும் நீர்மத்தை குடித்தால், அது மூக்கில் அடைப்பை ஏற்படுத்திருக்கும் பொருளை தளரச் செய்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஆனால் நல்ல சூடான இஞ்சி டீயைக் குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால், மூக்கில் உள்ள அடைப்புகளுடன், அங்குள்ள புண்களும் குணமாகிவிடும்.


சூடு நீர் குளியல்


மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, சூடு நீர் குளியலை மேற்கொண்டால், உடனே மூக்கடைப்பு நீங்கிவிடும்.


காரமான உணவுகள் நல்ல காரமான உணவுகளை சாப்பிட்டால், உடலில் வெப்பமானது அதிகரித்து, சளியானது தளர்ந்து வெளியேற்றப்படும். இதனால் மூக்கடைப்பும் நீங்கும்.


தண்ணீர் மற்றும் உப்பு


இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் குணமாகும்.


வெங்காயம்


மற்றொரு சிறந்த மூக்கடைப்பு நிவாரணி என்றால், அது வெங்காயத்தின் மூலம் தான். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, அதனை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும். இல்லையென்றால், வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டாலும், மூக்கடைப்பு போய்விடும்.


சூடான தக்காளி சூப்


1 கப் தக்காளி சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, நன்கு சூடேற்றி, ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பாக குடித்தால், மூக்கடைப்பு அகலும்.

by Swathi   on 11 Feb 2014  12 Comments
Tags: மூக்கடைப்பு   மூக்கடைப்பு குணமாக   மூக்கடைப்பு நீங்க   மூக்கடைப்பு சரியாக   Mookadaippu   Mokadaippu   Nasal Congestion Treatment  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூக்கு அடைப்பை விரட்ட முத்தான ஆலோசனைகள் !! மூக்கு அடைப்பை விரட்ட முத்தான ஆலோசனைகள் !!
கருத்துகள்
26-Dec-2018 19:09:46 Prasanna said : Report Abuse
எனக்கு மூக்கில் சதை வளர்துருக்கு நானும் சித்தா herobocare மருந்து சாப்பிட்டேன் கேட்கல மூக்கடைப்பு எப்போதும் இருக்கு operation செய்வது நல்லத கெட்டத
 
27-Aug-2018 16:28:55 chitra said : Report Abuse
Nose sali na child irutha feling nose any treatment pls
 
12-Dec-2017 23:43:10 Gopalakrishnan said : Report Abuse
ஐயா, நான் மூக்கு அடைப்பு மற்றும் சளி பிரச்சனையால் அவதி படுகிறேன். இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
 
16-Sep-2017 17:50:22 ஙகபககபப said : Report Abuse
ஒகமநணறஎவலஙஔஉ
 
31-Mar-2017 07:12:15 குருநாதன் said : Report Abuse
நாள் பட்ட சளி
 
23-Jan-2017 21:29:57 govindaraj said : Report Abuse
சார் வணக்கம் என்னக்கு மூக்கில் துரு நாற்றம் மிக்க அதிகமாக வீசுகிறது என்னால் மூச்சி விட மூடிய வில்லை என்ன செய்வது சார் சல்லி அதிகமாக இருக்கிறது
 
06-Aug-2016 01:55:18 தேவன் சு said : Report Abuse
வணக்கம், தங்களின் குறிப்புகள் உபயோகமாக இருந்தது.
 
02-Aug-2016 09:05:02 chelladurai said : Thank you
முகில் சதாi வளர்கேறது அதர்குயென வைத்தியம் பேணவேண்டும்
 
17-Nov-2015 07:59:37 வணக்கம் said : Report Abuse
வணக்கம்
 
06-Oct-2015 03:27:12 sathish kumar said : Report Abuse
முகில் சதை இருக்கு அதற்கு என்னே செய்வது ? ஆபரேஷன் செய்தல் மறு படியும் வளர்கிறது
 
07-Aug-2014 04:06:05 pavi said : Report Abuse
முகில் சதை இருக்கு அதற்கு என்னே செய்வது ? ஆபரேஷன் செய்தல் மறு படியும் வளர்கிறது .
 
08-Mar-2014 06:45:02 S.arunkumar said : Report Abuse
IAMsaefgngjkmghik
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.