LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தேசீய கீதங்கள் - பாரத நாடு பகுதி - 1

 

1. வந்தே மாதரம்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி)
பல்லவி
வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)
சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
2. ஜய வந்தே மாதரம்
ராகம்-ஹிந்துஸ்தானி பியாக்தாளம்-ஆதி
பல்லவி 
வந்தே- மாதரம்- ஜய
வந்தே மாதரம் (வந்தே)
சரணங்கள்
1. ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
2. ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
3. நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
4. ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம் (வந்தே)
3. நாட்டு வணக்கம்
ராகம்--காம்போதி தாளம்-ஆதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?  1
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?  2
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? 3
4. பாரத நாடு
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி
பல்லவி 
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு
சரணங்கள்
1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
2. தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)
3. நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)
5. வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
6. யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
7. ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
8. தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
5.பாரத தேசம்
ராகம்--புன்னாகவராளி
பல்லவி 
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்
சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)
2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)
3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)
4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)
5. சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)
6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)
7. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)
8. பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)
9. ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
10. குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)
11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். (பாரத)
12. காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)
13. சாதி இரண்டொழிய வேறில்லையென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். (பாரத)
6. எங்கள் நாடு
ராகம்-பூபாளம்
மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே  1
மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே  2
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே  3
7.ஜய பாரத!
1. சிறந்து நின்ளற சிந்தை யோடு
தேயம் நூறு வென் றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே!
2. நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்வி தேய
வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை யொன்று
இறைஞ்சி நிற்பள் வாழ்கவே!
3. வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல்கெ டாது காப்பள்
வாழி அன்னை வாழியே!
4. தேவ ருண்ணும் நன்ம ருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவு வார்க டற்க ணுள்ள
வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சி னோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவி லாத செல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!
5. இதந்த ரும்தொ ழில்கள் செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்த ரற் குரிய வாய
பன்ம தங்கள் நாட்டினள்
விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு
வேறொ ருண்மை தோற் றவே
சுதந்தி ரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!

1. வந்தே மாதரம்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி)
பல்லவி
வந்தே மாதரம் என்போம்-எங்கள்மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)
சரணங்கள்1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே- அன்றிவேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?சீனத்த ராய்விடு வாரோ?-பிறதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வேநன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்தஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டுபோயின நாட்களுக் கினிமனம் நாணித்தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
2. ஜய வந்தே மாதரம்
ராகம்-ஹிந்துஸ்தானி பியாக்தாளம்-ஆதி
பல்லவி வந்தே- மாதரம்- ஜயவந்தே மாதரம் (வந்தே)
சரணங்கள்1. ஜயஜய பாரத ஜயஜய பாரதஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
2. ஆரிய பூமியில் நாரிய ரும் நரசூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
3. நொந்தே போயினும் வெந்தே மாயினும்நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
4. ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்சென்றா யினும்வலி குன்றா தோதுவம் (வந்தே)
3. நாட்டு வணக்கம்
ராகம்--காம்போதி தாளம்-ஆதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிஇருந்ததும் இந்நாடே-அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துமுடிந்ததும் இந்நாடே-அவர்சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்துசிறந்ததும் இந்நாடே-இதைவந்தனை கூறி மனதில் இருத்தி, என்வாயுற வாழ்த்தேனோ-இதைவந்தே மாதரம், வந்தே மாதரம்என்று வணங்கேனோ?  1
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்ஈந்ததும் இந்நாடே- எங்கள்அன்னையர் தோன்றி மழலைகள் கூறிஅறிந்ததும் இந்நாடே- அவர்கன்னிய ராகி நிலவினி லாடிக்களித்ததும் இந்நாடே-தங்கள்பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்போந்ததும் இந்நாடே-இதைவந்தே மாதரம், வந்தே மாதரம்என்று வணங்கேனோ?  2
மங்கைய ராயவர் இல்லறம் நன்குவளர்த்ததும் இந்நாடே-அவர்தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்தழுவிய திந்நாடே-மக்கள்துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்அங்கவர் மாய அவருடற் பூந்துகள்ஆர்ந்ததும் இந்நாடே-இதைவந்தே மாதரம், வந்தே மாதரம்என்று வணங்கேனோ? 3
4. பாரத நாடு
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி
பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்பாரத நாடு
சரணங்கள்1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்மானத்தி லேஅன்ன தானத்திலேகானத்தி லேஅமு தாக நிறைந்தகவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
2. தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்ஈரத்தி லேஉப காரத்திலேசாரத்தி லேமிகு சாத்திரங் கண்டுதருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)
3. நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்பன்மை யிலேமறத் தன்மையிலேபொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புயவீக்கத்தி லேஉயர் நோக்கத்திலேகாக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)
5. வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்தண்மையி லேமதி நுண்மையிலேஉண்மையி லேதவ றாத புலவர்உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
6. யாகத்தி லேதவ வேகத்திலே-தனியோகத்தி லேபல போகத்திலேஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
7. ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்காற்றினி லேமலைப் பேற்றினிலேஏற்றினி லேபயன் ஈந்திடும் காலிஇனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
8. தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனிஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலேதேட்டத்தி லேஅடங் காத நிதியின்சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
5.பாரத தேசம்
ராகம்--புன்னாகவராளி
பல்லவி பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்
சரணங்கள்1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)
2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)
3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றேஎண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)
4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லேமொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்துநம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)
5. சிந்து நதியின் மிசை நிலவினிலேசேரநன் னாட்டிளம் பெண்களுட னேசுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)
6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டுசேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)
7. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;ராசபுத் தானத்து வீரர்தமக் குநல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)
8. பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)
9. ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
10. குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)
11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;வானையளப் போம் கடல் மீனையளப் போம்;சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். (பாரத)
12. காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)
13. சாதி இரண்டொழிய வேறில்லையென் றேதமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். (பாரத)
6. எங்கள் நாடு
ராகம்-பூபாளம்
மன்னும் இமய மலையெங்கள் மலையேமாநில மீதது போற்பிறி திலையே!இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறேஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?பன்னரும் உபநிட நூலெங்கள் நூலேபார்மிசை யேதொரு நூல்இது போலே?பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடேபோற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே  1
மாரத வீரர் மலிந்தநன் னாடுமாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடுநாரத கான நலந்திகழ் நாடுநல்லன யாவையும் நாடுறு நாடுபூரண ஞானம் பொலிந்தநன் னாடுபுத்தர் பிரானருள் பொங்கிய நாடுபாரத நாடு பழம்பெரு நாடேபாடுவம் இஃதை எமக்கிலை நாடே  2
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்உன்னத ஆரிய நாடெங்கள் நாடேஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே  3
7.ஜய பாரத!
1. சிறந்து நின்ளற சிந்தை யோடுதேயம் நூறு வென் றிவள்மறந்த விர்ந்தந் நாடர் வந்துவாழி சொன்ன போழ்தினும்இறந்து மாண்பு தீர மிக்கஏழ்மை கொண்ட போழ்தினும்அறந்த விர்க்கி லாது நிற்கும்அன்னை வெற்றி கொள்கவே!
2. நூறு கோடி நூல்கள் செய்துநூறு தேய வாணர்கள்தேறும் உண்மை கொள்ள இங்குதேடி வந்த நாளினும்மாறு கொண்டு கல்வி தேயவண்மை தீர்ந்த நாளினும்ஈறு நிற்கும் உண்மை யொன்றுஇறைஞ்சி நிற்பள் வாழ்கவே!
3. வில்லர் வாழ்வு குன்றி ஓயவீர வாளும் மாயவேவெல்லு ஞானம் விஞ்சி யோர்செய்மெய்மை நூல்கள் தேயவும்சொல்லும் இவ் வனைத்தும் வேறுசூழ நன்மை யுந்தரவல்ல நூல்கெ டாது காப்பள்வாழி அன்னை வாழியே!
4. தேவ ருண்ணும் நன்ம ருந்துசேர்ந்த கும்பம் என்னவும்மேவு வார்க டற்க ணுள்ளவெள்ள நீரை ஒப்பவும்பாவ நெஞ்சி னோர் நிதம்பறித்தல் செய்வ ராயினும்ஓவி லாத செல்வம் இன்னும்ஓங்கும் அன்னை வாழ்கவே!
5. இதந்த ரும்தொ ழில்கள் செய்துஇரும்பு விக்கு நல்கினள்பதந்த ரற் குரிய வாயபன்ம தங்கள் நாட்டினள்விதம்பெ றும்பல் நாட்டி னர்க்குவேறொ ருண்மை தோற் றவேசுதந்தி ரத்தி லாசை இன்றுதோற்றி னாள்மன் வாழ்கவே!

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.