LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தேசீய கீதங்கள் - பாரத நாடு பகுதி - 3

 

17.பாரத சமுதாயம்
ராகம்-பியாக்  தாளம்-திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள்
1. மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)
2. இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)
3. எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)
4. எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத)
18.ஜாதீய கீதம்-1
(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
1. இனிய நீர்ப் பெருக்கினை!இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
2. வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்வகை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)
3. முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என் றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்!அருளினை போற்றி?
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
4. நீயே வித்தை, நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
5. தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே! (வந்தே)
6. ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே)
7. போற்றி வான்செல்வீ! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே)
19. ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)
1. நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
2. தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களம்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை, (வந்தே)
3. கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனைஎன்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே)
4. அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)
5. பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)
6. திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை;
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

17.பாரத சமுதாயம்
ராகம்-பியாக்  தாளம்-திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்முழுமைக்கும் பொது உடைமைஒப்பி லாத சமுதாயம்உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள்
1. மனித ருணவை மனிதர் பறிக்கம்வழக்கம் இனியுண்டோ?மனிதர் நோக மனிதர் பார்க்கும்வாழ்க்கை இனியுண்டோ-புலனில்வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்தவாழ்க்கை இனியுண்டோ?இனிய பொழில்கள் நெடிய வயல்கள்எண்ணரும் பெருநாடு;கனியும் கிழங்கும் தானி யங்களும்கணக்கின் றித்தரு நாடு-இதுகணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)
2. இனியொரு விதிசெய் வோம்-அதைஎந்த நாளும் காப்போம்;தனியொருவனுக் குணவிலை யெனில்ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)
3. எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையைஇந்தியா உலகிற் களிக்கும்-ஆம்இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)
4. எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்எல்லாரும் இந்தியா மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலைஎல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத)
18.ஜாதீய கீதம்-1
(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதியவந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
1. இனிய நீர்ப் பெருக்கினை!இன்கனி வளத்தினை!தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
2. வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!நல்வகை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)
3. முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்திறனிலாள் என் றுனை யாவனே செப்புவன்?அருந்திற லுடையாய்!அருளினை போற்றி?பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
4. நீயே வித்தை, நீயே தருமம்!நீயே இதயம், நீயே மருமம்!உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
5. தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே! (வந்தே)
6. ஒருபது படைகொளும் உமையவள் நீயே!கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே)
7. போற்றி வான்செல்வீ! புரையிலை, நிகரிலை!இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே)
19. ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)
1. நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
2. தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களம்புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை, (வந்தே)
3. கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்கோடி கோடி புயத்துணை கொற்றமார்நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்கூடு திண்மை குறைந்தனைஎன்பதென்?ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவைமாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே)
4. அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடைமருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீஆலயந் தோறும் அணிபெற விளங்கும்தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)
5. பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)
6. திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;மருவு செய்களின் நற்பயன் மல்குவை,வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனைபெருகு மின்ப முடையை குறுநகைபெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை;இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.