LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தேசீய கீதங்கள் - சுதந்திரம்

 

1. சுதந்திரப் பெருமை
தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர்
திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு)
1. வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?-என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?   (வீர)
2. புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்
கொய்யென்று கண்டா ரேல்-அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ?   (வீர)
3. பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தா ரேல்-மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ?   (வீர)
4. மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ?   (வீர)
5. விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ?   (வீர)
6. மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ!   (வீர)
7. வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவ ரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?   (வீர)
2. சுதந்திரப் பயிர்
கண்ணிகள்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா! இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?  1
 
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?  2
 
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 3
 
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ? 4
 
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? 5
 
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? 6
 
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?  7
 
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?  8
 
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?  9
 
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? 10
 
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?  11
 
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே  12
 
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?  13
 
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? 14
 
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே  15
3. சுதந்திர தாகம்
ராகம்-கமாஸ்  தாளம்-ஆதி
 
என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ?  1
 
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ
அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி!ஆரியர் கோனே!   2
4. சுதந்திர தேவியின் துதி
விருத்தம்
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.  1
 
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி,
படைத்துயர்ந் திட்டா ரேனும்,
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்,
அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.  2
 
தேவி!நின் னொளிபெ றாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ?ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ!
பாவிய ரன்றோ நின்தன்
பாலனம் படைத்தி லாதார்?  3
 
ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார்;
கழிவறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்;
இழிவறு வாழ்க்கை தேரார்,
கனவினும் இன்பங் காணார்;
அழிவறு பெருமை நல்கும்
அன்னை!நின் அருள்பெ றாதார்.  4
வேறு
 
தேவி!நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யும்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே  5
 
அம்மை உன்தன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்;
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.  6
 
மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர்.  7
 
அன்ன தம்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே?
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.  8
 
பேர றத்தினைப் பேணுநல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர், மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே!நினை வேண்டுவேன்.  9
5. விடுதலை
ராகம்-பிலகரி
விடுதலை!   விடுதலை!  விடுதலை!
1. பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை)
2. ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே!  (விடுதலை)
3. மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே!  (விடுதலை)
31. சுதந்திரப் பள்ளு (பள்ளர் களியாட்டம்)
ராகம்-வராளி  தாளம்-ஆதி
பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று  (ஆடுவோமே)
சரணங்கள்
1. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே  (ஆடுவோமே)
2. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே  (ஆடுவோமே)
3. எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே  (ஆடுவோமே)
4. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்  (ஆடுவோமே)
5. நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.  (ஆடுவோமே)

1. சுதந்திரப் பெருமை
தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர்திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு)
1. வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்வேறொன்று கொள்வாரோ?-என்றும்ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்அறிவைச் செலுத்துவாரோ?   (வீர)
2. புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்கொய்யென்று கண்டா ரேல்-அவர்இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்குஇச்சையுற் றிருப்பாரோ?   (வீர)
3. பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்பெற்றியை அறிந்தா ரேல்-மானம்துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வதுசுகமென்று மதிப்பாரோ?   (வீர)
4. மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவறஉடன்படு மாறுள தோ?   (வீர)
5. விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்மின்மினி கொள்வா ரோ?கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்கைகட்டிப் பிழைப்பா ரோ?   (வீர)
6. மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்மாண்பினை யிழப்பாரோ?கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்கைகொட்டிச் சிரியாரோ!   (வீர)
7. வந்தே மாதரம் என்று வணங்கியபின்மாயத்தை வணங்குவ ரோ?வந்தே மாதரம் ஒன்றே தாரகம்என்பதை மறப்பாரோ?   (வீர)
2. சுதந்திரப் பயிர்
கண்ணிகள்தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா! இப்யிரைக்கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?  1 எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்தவண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?  2 ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 3 தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ? 4 மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? 5 எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? 6 மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்துகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?  7 எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்துநொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?  8 இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?  9 வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயாதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? 10 நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?  11 பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே  12 நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?  13 இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? 14 நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே  15
3. சுதந்திர தாகம்
ராகம்-கமாஸ்  தாளம்-ஆதி என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ?  1 பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோஅஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?வீர சிகாமணி!ஆரியர் கோனே!   2
4. சுதந்திர தேவியின் துதி
விருத்தம்இதந்தரு மனையின் நீங்கிஇடர்மிகு சிறைப்பட் டாலும்,பதந்திரு இரண்டும் மாறிப்பழிமிகுத் திழிவுற் றாலும்விதந்தரு கோடி இன்னல்விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்தொழுதிடல் மறக்கி லேனே.  1 நின்னருள் பெற்றி லாதார்நிகரிலாச் செல்வ ரேனும்பன்னருங் கல்வி கேள்வி,படைத்துயர்ந் திட்டா ரேனும்,பின்னரும் எண்ணி லாதபெருமையிற் சிறந்தா ரேனும்,அன்னவர் வாழ்க்கை பாழாம்,அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.  2 தேவி!நின் னொளிபெ றாததேயமோர் தேய மாமோ?ஆவியங் குண்டோ? செம்மைஅறிவுண்டோ?ஆக்க முண்டோ?காவிய நூல்கள் ஞானக்கலைகள் வேதங்க ளுண்டோ!பாவிய ரன்றோ நின்தன்பாலனம் படைத்தி லாதார்?  3 ஒழிவறு நோயிற் சாவார்,ஊக்கமொன் றறிய மாட்டார்;கழிவறு மாக்க ளெல்லாம்இகழ்ந்திடக் கடையில் நிற்பார்;இழிவறு வாழ்க்கை தேரார்,கனவினும் இன்பங் காணார்;அழிவறு பெருமை நல்கும்அன்னை!நின் அருள்பெ றாதார்.  4
வேறு தேவி!நின்னருள் தேடி யுளந்தவித்துஆவி யும்தம தன்பும் அளிப்பவர்மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்தாவில் வானுல கென்னத் தகுவதே  5 அம்மை உன்தன் அருமை யறிகிலார்செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்;இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தைவெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.  6 மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர்.  7 அன்ன தம்மைகொள் நின்னை அடியனேன்என்ன கூறி இசைத்திட வல்லனே?பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.  8 பேர றத்தினைப் பேணுநல் வேலியே!சோர வாழ்க்கை, துயர், மிடி யாதியகார றுக்கக் கதித்திடு சோதியே!வீர ருக்கமு தே!நினை வேண்டுவேன்.  9
5. விடுதலை
ராகம்-பிலகரி
விடுதலை!   விடுதலை!  விடுதலை!
1. பறைய ருக்கும் இங்கு தீயர்புலைய ருக்கும் விடுதலை;பரவ ரோடு குறவருக்கும்மறவ ருக்கும் விடுலை;திறமை கொண்ட தீமை யற்றதொழில்பு ரிந்து யாவரும்தேர்ந்த கல்வி ஞானம் எய்திவாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை)
2. ஏழை யென்றும் அடிமை யென்றும்எவனும் இல்லை ஜாதியில்,இழிவு கொண்ட மனித ரென்பதுஇந்தி யாவில் இல்லையேவாழி கல்வி செல்வம் எய்திமனம கிழ்ந்து கூடியேமனிதர் யாரும் ஒருதி கர்சமான மாக வாழ்வமே!  (விடுதலை)
3. மாதர் தம்மை இழிவு செய்யும்மடமை யைக்கொ ளுத்துவோம்;வைய வாழ்வு தன்னில் எந்தவகையி னும்ந மக்குளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்க ளோடு பெண்களும்சரிநி கர்ச மான மாகவாழ்வம் இந்த நாட்டிலே!  (விடுதலை)
31. சுதந்திரப் பள்ளு (பள்ளர் களியாட்டம்)
ராகம்-வராளி  தாளம்-ஆதி
பல்லவிஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று  (ஆடுவோமே)
சரணங்கள்1. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சைஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மைஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே  (ஆடுவோமே)
2. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே  (ஆடுவோமே)
3. எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனிநல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்டநயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே  (ஆடுவோமே)
4. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்  (ஆடுவோமே)
5. நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இதுநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரிபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.  (ஆடுவோமே)

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.