LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 908 - நட்பியல்

Next Kural >

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.
தேவநேயப் பாவாணர் உரை:
நல் நுதலாள் பெட்ட ஆங்கு ஒழுகுபவர்- தாம் விரும்பிய வாறன்றி அழகிய நெற்றியையுடைய தம் மனைவி விரும்பிய வாறே நடப்பவர்; நட்டார் குறை முடியார்-தம் நண்பருக்குத் தேவையானவற்றைச் செய்து தீர்க்க மாட்டார்; அன்றி ஆற்றார்-அதோடு மறுமைக்குத் தமக்குத் துணையான அறமுஞ் செய்ய மாட்டார். மனைவியின் விருப்பப்படி யொழுகுதற்குக் கரணியமான நெற்றியழகு பற்றியும், அங்ஙனம் ஒழுகாவிடின் செ்ய்யும் நெற்றி நெறிப்புப் (browbeating) பற்றியும், 'நன்னுதலாள்' என்றார். நட்டார் குறை முடித்தலையும் நன்றாற்றலையும் மனைவியுஞ் செய்யாமையின் இருமைக்கும் வேண்டுவன செய்யப்படா என்பதாம்.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
Translation
In Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform.
Explanation
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
Transliteration
Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal Pettaangu Ozhuku Pavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >