LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் சாதனையாளர்கள்-Tamil Achievers Print Friendly and PDF
- Contribution- Agriculture

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றிய குறிப்பு

குறிப்பு:

1.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்றவர்.
 

2.1960-ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவர். 

3.ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். பிறகு நோபல் பரிசு பெற்ற ’டோம்னிக் பையர்’ என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார்.

4.ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். 

5.நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர்.

6.இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். 

7.டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.

8.தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர். 

9.இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார். இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது.

 

 

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்

 

அவர் எழுதிய நூல்கள்:

நம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள் 

1."உழவுக்கும் உண்டு வரலாறு" விகடன் வெளியீடு 
2."தாய் மண்ணே வணக்கம்" நவீன வேளாண்மை வெளியீடு 
3."நெல்லைக் காப்போம்" 
4."வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்" 
5."இனி விதைகளே பேராயுதம் " இயல்வாகை வெளியீடு-9442593448,9942118080 
6."நோயினைக் கொண்டாடுவோம் " இயல்வாகை வெளியீடு 
7."எந்நாடுடையே இயற்கையே போற்றி" விகடன் வெளியீடு 
8."பூமித்தாயே"(மிக முக்கியமான புத்தகம் கட்டாயம் படிக்க வேண்டியது ) இயல்வாகை வெளியீடு 
9."மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்" (நூல்) வாகை வெளியீடு 
10."களை எடு " கிழக்கு பதிப்பகம்

நம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள் 

1."உழவுக்கும் உண்டு வரலாறு" விகடன் வெளியீடு 

2."தாய் மண்ணே வணக்கம்" நவீன வேளாண்மை வெளியீடு 

3."நெல்லைக் காப்போம்" 

4."வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்" 

5."இனி விதைகளே பேராயுதம் " இயல்வாகை வெளியீடு-9442593448,9942118080 

6."நோயினைக் கொண்டாடுவோம் " இயல்வாகை வெளியீடு 

7."எந்நாடுடையே இயற்கையே போற்றி" விகடன் வெளியீடு 

8."பூமித்தாயே"(மிக முக்கியமான புத்தகம் கட்டாயம் படிக்க வேண்டியது ) இயல்வாகை வெளியீடு 

9."மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்" (நூல்) வாகை வெளியீடு 

10."களை எடு " கிழக்கு பதிப்பகம்

 

by Swathi   on 31 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடிய மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா எழுச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடிய மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா
மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார்
திருமதி. நவநீதம்பிள்ளை -Navanethem Pillay திருமதி. நவநீதம்பிள்ளை -Navanethem Pillay
ஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி!! ஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி!!
ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்) ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !! தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !!
சுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்) சுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)
சீனிவாச இராமானுஜன் (கணிதம்) சீனிவாச இராமானுஜன் (கணிதம்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.