|
||||||
நெடுஞ்சாலை திரைவிமர்சனம் !! |
||||||
நடிகர் : ஆரி, நடிகை : ஷிவதா இயக்கம் : கிருஷ்ணா இசை : சத்யா டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் தனது மூன்று கூட்டாளிகளுடன் திருடி பிழைப்பை நடித்தி வருகிறார் நாயகன் ஆரி(தார்ப்பாய் முருகன்). அதே நெடுஞ்சாலையில் டெல்லி தாபா என்னும் ஓட்டல் நடத்தி வருகிறார் நாயகி ஷிவதா(மங்கா). ஒருநாள் நாயகி ஷிவதாவின் ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் ஆரி. நன்றாக சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தப்பிக்க முயற்சி செய்கிறார். இதனை கவனிக்கும் ஷிவதா ஆரியிடம் நைசாக பேசி அவரை வீட்டில் அடைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். போலீஸ் வந்து ஆரியை பார்க்கும் போது, தாங்கள் நீண்ட நாட்களாக தேடி வந்த நெடுஞ்சாலை திருடன் இவன் தான் என்று தெரிந்தவுடன் ஆரியை கைது செய்து அழைத்துச் செல்கிறனர். அங்கு புதிய போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிரசாந்த் நாராயண் ஆரியை சரமாரியாக அடித்து துவைக்கிறார். அப்போது அங்கு வரும் திருட்டு பொருள் வாங்கும் சேட்டு பிரசாந்த்திடம் இனி நாங்கள் திருடுவதில் உங்களுக்கு பங்கு தருகிறோம் என்று கூறி ஆரியை வெளியே கொண்டு வருகிறார். இந்நிலையில், போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் ஷிவதாவை கண்டவுடன் பிரசாந்த் நாராயண் அவளை அடைய விரும்புகிறார். இதற்கு ஷிவதா மீது ஆரிக்கு உள்ள கோபத்தை சாதகமாக பயன்படுத்தி, அவனை தூண்டி விட்டு ஷிவதாவின் தாபா கடையை அழிக்க சூழ்ச்சி செய்கிறார் வில்லன் பிரசாந்த். இதை தடுப்பது போல் தாபா கடையையே சுற்றி சுற்றி வருகிறார் பிரசாந்த் நாராயண். ஒரு நாள் ஷிவதாவிடம் தப்பாக நடக்க முயற்சி செய்யும் பிரசாந்த் நாராயணை ஷிவதா தாக்கிவிடுகிறார். இதனால் கோபம் அடைந்து ஷிவதா மீது விபச்சார வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கோர்ட்டில் ஆரியை சாட்சி சொல்ல வைக்கிறார் பிரசாந்த். ஆரியோ ஷிவதாவை நான் பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். ஷிவதா தன் மானத்தை காப்பாற்றிய ஆரியை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் வெறுக்கும் ஆரி பிறகு ஷிவதாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலித்த பின் ஆரி திருந்தி வாழ முயற்சி செய்கிறார். இதையறிந்த பிரசாந்த் ஆரியை தீர்த்து கட்டிவிட்டு ஷிவதாவை அடைய முடிவு செய்கிறார். இறுதியில் பிரசாந்திடம் இருந்து ஆரி தப்பித்தாரா? ஆரியும் ஷிவதாவும் சேர்ந்து வாழ முடிந்ததா? என்பதே மீதிக்கதை. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆரி ஏற்கனவே ரெட்டைசுழி படத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவரை நன்றாக நடிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக லாரிகளில் திருடும் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், மோதல் காட்சிகளிலும் ரசிக்கக் வைத்திருக்கிறார். நாயகியாக வரும் ஷிவதாவோ படம் முழுக்க பாவாடை சட்டையிலே பவனி வருகிறார். நடிப்பில் ஓரளவுக்கு பரவாயில்லை. படத்தின் காமெடிக்கு ஆதாரமே, சேட்டாக வரும் சலீம்குமார் தான். நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் நாராயண் படம் முழுக்க மிரட்டி இருக்கிறார். சத்யாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை. மொத்தத்தில் "நெடுஞ்சாலை" பரவால.... |
||||||
| by Swathi on 29 Mar 2014 0 Comments | ||||||
| Tags: நெடுஞ்சாலை Nedunchalai Nedunchalai Review Nedunchalai Movie Review Nedunchalai thiraivimarsanam Nedunchalai Online Review | ||||||
|
||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|