|
||||||||
வேப்பம்பூ வடகம் (Neem Flower Vathal) |
||||||||
தேவையானவை : வேப்பம்பூ - 3 கப் (காய வைத்தது) உளுந்து - 1 கப் மிளகு - 1 டீஸ் ஸ்பூன் பெரிய சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் சிறிய சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் (பொடித்தது) கறிவேப்பிலை - 2 கட்டு மிளகாய் பிளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு செய்முறை : 1.முதலில் மிளகு மற்றும் பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்.உழுந்தை 5 மணிநேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்கவும். 2.இந்த கலவையை கோழிகுண்டளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.வேப்பம்பூ வடகம் தயார். |
||||||||
by kanika on 12 Jun 2012 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|