LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

நேர்நின்றால் இருக்கமாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்

காதலிக்க   மறுத்தாலோ   அமிலத்   தாலே

----கருக்குகின்றீர்   புகழ்ந்திட்ட   மதிம  கத்தை

 

காதலித்தோன்   வேறுசாதி   என்ற   போது

 

----கண்முன்னே   வெட்டுகின்றீர்   துடிது   டிக்க !

 

வாதங்கள்   புரிந்துண்மை   எடுத்து   ரைத்தால்

 

----வார்த்தைகளில்   அவதூறு   பரப்பு  கின்றீர்

 

மீதமென்ன   கண்களிலே   உடைகி   ழித்து

 

---மிருகமென   மின்னுடலை   நக்கு   கின்றீர் !

 

 

 

சிறுகுழந்தை   என்றபோதும்   பெண்ணென்   றாலோ

 

----சிறுநீரின்   துவாரத்தைக்   கிழிக்கின்   றீர்கள்

 

எறும்புடலில்   ஊர்வதுபோல்    கைக   ளாலே

 

----எடுத்தணைத்துத்   தடவுகின்றீர்   மார்பி   டத்தை !

 

உறுப்புக்கள்    என்னநீங்கள்   தின்ப   தற்கா

 

----உடலினிலே   இயற்கையன்னை   படைத்த  ளித்தாள்

 

அறுவடைக்கு    முற்றாத   நெல்லென்   றாலும்

 

----அறுக்கின்றீர்    அடுத்தவீட்டு   விளைச்ச  ளென்றே !

 

 

 

பொருள்களினை    விற்பதற்கும்   காட்சி   யாக்கிப்

 

----பொழுதெல்லாம்   எம்முடலைக்   காட்டு   கின்றீர்

 

விருப்பந்தான்   இருந்தாலும்   இலையென்   றாலும்

 

----விளக்கணைத்தால்    உடன்படுக்கப்   பணிக்கின்  றீர்கள் !

 

வருவாயை   மதுவிற்குக்   கொடுத்து   விட்டு

 

----வளைகரத்தை    ஒடித்தெட்டி    உதைக்கின்   றீர்கள்

 

நெருப்பாக   எழுமுன்னே   திருத்தம்   கொள்வீர்

 

----நேர்நின்றே   எதிர்த்திட்டால்   இருக்க   மாட்டீர் !

Neernintral

நீதியைத்தேடி

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

ஆதியிலே   புறாவிட்ட   கண்ணீர்க்   காக

            அரிந்துசதை   அளித்துமன்னன்   நீதி   காத்தான்

வாதியாக   பசுஅடித்த    மணியைக்   கேட்டு

            வழங்கிட்டான்   நீதியினை   மகனைக்   கொன்று

ஏதிலியாய்   சிலம்புடைத்த    பெண்ணிற்   காக

            ஏந்தியுயிர்    தந்துநீதி   காத்த   மண்ணில்

நீதிவிலை   போகாதெனும்    நம்பிக்   கையில்

            நீதியினைத்    தேடுகின்றார்   கிடைக்கு   மென்றே !

 

பண்ணிசைத்துக்   காவிரியாள்   நடந்தா   ளென்று

            பகர்கின்ற   பாடல்கள்   பலவி   ருந்தும்

கண்முன்னே   காட்சிதரத்   தடைவி   தித்துக்

            கன்னடத்தான்    சிறைக்குள்ளே   அடைத்து   வைக்கக்

கண்ணெல்லாம்   பூரிக்க   வயல்கள்    பூத்துக்

            கண்டிட்ட    முப்போகம்   கனவாய்ப்   போகத்

தண்ணீர்க்காய்   நீதியினைத்   தேடித்   தேடித்

            தவிக்கின்றான்   விவசாயி   தமிழ  கத்தில் !

 

காலந்தான்   கடந்தபோதும்   உச்ச   மன்றம்

            காவிரியாள்    விலங்கொடித்துத்   தீர்ப்ப   ளிக்கப்

பாலமாக    இருக்கின்ற   நடுவண்   ஆட்சி

            பசுதானா   தோலணிந்த   புலியா   என்னும்

கோலத்தின்   ஐயத்தைத்   தீர்க்கும்   வண்ணம்

            கோல்சாயா    நடவடிக்கை   எடுக்க   வேண்டும்

சீலமுடன்   ஒற்றுமையாய்    இந்தி    யாவும்

            சிறப்புறவே   நேயமுடன்   வாழ   வேண்டும் ! 

by Karumalaithamizhazhan   on 16 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.