விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசின் புதிய அறிவிப்பு
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விவசாயப் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் பழங்களுக்கு 226 மாவட்டங்கள், காய்கறிகளுக்கு 107 மாவட்டங்கள், மசாலா பொருட்களுக்கு 105 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் நெல், கோதுமை போன்ற பொருட்களுக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மத்திய வேளாண் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் மொத்தம் 728 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் 36 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வேளாண் பொருட்களை விளைவிக்க எம்ஐடிஎச், என்எப்எஸ்எம், ஆர்கேவிஒய், பிகேவிஒய் போன்ற திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உதவிகள் கிடைக்கும். இதனால் மாவட்ட அளவில் அந்தந்த விவசாயப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டது.
|