LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !!

இயக்குனர்: சமுத்திரக்கனி

 

நடிகர் : ஜெயம் ரவி


நடிகை : அமலா பால் 


இசை : ஜி.வி.பிரகாஷ்


நாட்டில் நடக்கும் அநீதி கண்டு பொங்கி எழும் ஒரு இளைஞன் செய்கிற ஒரு சின்ன விஷயம் எப்படி நாட்டையே மாத்தி காட்டுது என்பது தான் நிர்மிந்து நில் படத்தின் முழு கதை. 


நேர்மையான மனிதனாக ஆசிரமத்தில் இருந்து வெளியே வரும் ஜெயம் ரவி, பைக்கில் செல்லும்போது எல்லாவிதமான டாக்குமெண்ட்கள் இருந்தும் லஞ்சம் கேட்கும் டிராபிக் போலீசிடம் மாட்டுகிறார். 


ஜெயம் ரவி, லஞ்சம் கொடுக்க மறுக்கவே, அங்கிருந்து அவருக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. இதனால் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. 


இதனை அடுத்து கொதித்து எழும் ஜெயம் ரவி உண்மையான சில அதிகாரிகளின் துணையோடு லஞ்சம் வாங்கும் போலீஸ், வக்கீல்கள், நீதிபதி என பலரையும் வீடியோ எடுத்து அதை கோபிநாத் உதவியுடன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப, பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. 


இதனால் ஜெயம் ரவியால் பாதிக்கபப்ட்ட லஞ்ச பெருச்சாளிகள் ஜெயம் ரவியை தீர்த்து கட்ட சதி செய்கிறார்கள், சதியில் சிக்கும் ஜெயம் ரவி, மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை தரும் ஆதரவின் மூலம் எப்படி வெளி வருகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.


படத்தின் சில கட்சிகள் அந்நியன், சாமுராய், இந்தியன், சிட்டிசன் போன்ற படங்களைப்போல இருப்பதால், வழக்கமான படத்தை போன்றே இந்த படமும் உள்ளது. 


முதல்பாதியில் வேகமாக செல்லும் திரைக்கதை இரண்டாவது பாதியில் இரண்டாவது ஜெயம் ரவி வந்தவுடன் ஆமை வேகத்தில் நகர்கிறது. 


ஆக்சன் காட்சிகளில் ஜெயம் ரவி சிறப்பாகவே நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கின்றார். என்ன இரண்டாவது பாதி தான் கொஞ்சம் டல் அடிக்கிறது. 


இந்த படத்தில் ஹீரோயினே தேவையில்லை, இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு, எல்லா படத்திலும் வருவது போல ஹீரோவை காதலிக்கவும், டூயட் பாடல்களுக்கும் மட்டும் என ஹீரோயின் அமலாபாலை வைத்துள்ளார்கள்.


கருப்புத்தங்கம் என்ற பட்டத்தோடு படத்தில் அறிமுகமாகும் சூரி படத்தில் ஓரளவுக்கு காமெடி செய்திருக்கிறார். 


குறைந்த நேரமே வரும் கோபிநாத் மற்றும் சரத்குமார் கேரக்டர்கள் மனதில் நிற்கிறது. 


ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகாவில்லை என்றாலும் காட்சிகளில் சற்று பரவாயில்லை...... 


மொத்தத்தில் நிமிர்ந்து நில்...... முதல் பாதி ஓகே..... பட் இரண்டாவது பாதி நல்ல பண்ணியிருக்கலாம்......

by Swathi   on 10 Mar 2014  1 Comments
Tags: நிமிர்ந்து நில்   நிமிர்ந்து நில் திரை விமர்சனம்   நிமிர்ந்து நில் விமர்சனம்   நிமிர்ந்து நில் கதை   Nimirnthu Nil   Nimirnthu Nil Review   Nimirnthu Nil Movie Review  
 தொடர்புடையவை-Related Articles
இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !! இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !!
நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !! நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !!
இன்று ரிலீசாக வேண்டிய நிமிர்ந்து நில் ரிலீசாவாததற்கு என்ன காரணம் ? இன்று ரிலீசாக வேண்டிய நிமிர்ந்து நில் ரிலீசாவாததற்கு என்ன காரணம் ?
பெர்லின் சர்வதேச பட விழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் !! பெர்லின் சர்வதேச பட விழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் !!
கருத்துகள்
11-Mar-2014 11:38:28 Selvakumar.A said : Report Abuse
First half super 2nd half k
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.