|
|||||
நார்வே சதுரங்கப் போட்டி - உலக வாகையரை வீழ்த்திய இந்திய வீராங்கனை வைஷாலி |
|||||
நார்வே சதுரங்கப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக வாகையர் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் சர்வதேசச் சதுரங்கத் தொடர் நடக்கிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, தனது 8வது சுற்றில் 5 முறை வாகையரான சீனாவின் ஜூ வென்ஜூனை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜூ வென்ஜூனை வைஷாலி தோற்கடித்து அசத்தினார்.
உலக வாகையரான வென்ஜூனை வைஷாலி தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், 6 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் வைஷாலி 5வது இடத்தில் உள்ளார். இவர் சீனாவின் லெய் டிங்ஜியை விட அரைப் புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நார்வே சதுரங்கப் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக வாகையரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாகத் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|
|||||
| by hemavathi on 05 Jun 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|