|
||||||||
ஜப்பானில் ஒரே நாளில் படித்து பட்டம் வாங்கலாம்! |
||||||||
பள்ளிக் காலம் கடந்து நீண்ட காலம் ஆனபிறகே மீண்டும் ஒருமுறை அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசை நடக்காது அல்லவா? இருப்பினும், ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அத்தகைய ஒரு வாழ்க்கையை அனுபவிக்க முடியும். “ஒரு நாள் மாணவர்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய திட்டம், மாணவர்களை ஒரு நாள் ஜப்பானியப் பள்ளியில் படிக்க வைக்கிறது. ஜப்பானின் சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை நீங்கள் வெறும் ரூ.17,000-க்கு பெறலாம்.
அதாவது ரூ.17,000 (30,000 யென்) செலுத்திய பிறகு, ஜப்பானில் உள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பள்ளியில் மாணவராக ஒரு நாளைக் கழிக்கலாம். இந்த ‘மாணவர்கள்’ இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாகக் கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். உண்டோகயா என்ற நிறுவனத்தால் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியை நிறுவனம் இதற்காகத் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது.
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்றாலும், ஜப்பானில் உள்ள கலாச்சாரம் மற்றும் கல்வி முறைகளுக்கு வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் இது முக்கியத்துவம் அளிக்கிறது. பங்கேற்பாளர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் வழங்கப்படுகின்றன, அந்தச் சீருடையை அணிந்து கொண்டு கிளப் நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் மற்றும் ஜப்பானின் தனித்துவமான பள்ளி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.
பள்ளிக்கு வருபவர்கள் கிளாசிக் பள்ளி சீருடை அல்லது சூட் அணிய வேண்டும். இதனையடுத்து அங்குள்ள ஆசிரியர்கள், பங்கேற்பாளருக்கு எழுத்துக் கலை, பேரிடரிலிருந்து தப்பிக்கும் பயிற்சி, அவசரக்காலத் திறன்கள் மற்றும் பாரம்பரிய ஜப்பானிய நடனங்கள் உள்ளிட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். மேலும் கட்டானை (சாமுராய் பயன்படுத்தும் வாள்) எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் இங்குப் பயிற்சி அளிக்கப்படும். மேலும் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான நடைமுறை அறிவும் வழங்கப்படும்.
இது தவிர, ஜப்பானில் எப்போதும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. அப்படி நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். எந்த வயதினரும் ஒரு நாள் இங்கு மாணவராகலாம். ஆனால், ஒரு நாளில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், அனைவருக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். |
||||||||
by hemavathi on 13 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|