|
|||||
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன் |
|||||
“தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உள்ளது” எனச் சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். செ.கிருஷ்ண முரளி, எச்.ஐ.வி நோய்த் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசும்போது, “தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 நபர்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 1 லட்சத்து 41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 76 கூட்டு மருத்துவச் சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர எச்.ஐ.வி தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.5 கோடி வைப்பு நிதியைக் கொடுத்தார். அது தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்மூலம் எச்.ஐ.வியால் பதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்காக ரூ.1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
“தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு உள்ளது” எனச் சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். செ.கிருஷ்ண முரளி, எச்.ஐ.வி நோய்த் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசும்போது, “தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 நபர்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 1 லட்சத்து 41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 76 கூட்டு மருத்துவச் சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர எச்.ஐ.வி தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.5 கோடி வைப்பு நிதியைக் கொடுத்தார். அது தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்மூலம் எச்.ஐ.வியால் பதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்காக ரூ.1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
|
|||||
| by hemavathi on 16 Apr 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|