LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில்

- முனைவர் கி.செம்பியன்

 

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு      (27)


(சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை---சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமுமென்று சொல்லப்பட்ட தன்மாத்திரை களைந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு---- ஆராய்வானறிவின் கண்ணதே உலகம்-- பரிமேலழகர்)

சுவை - நாக்கு - நீர் ->  உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு

ஒளி - கண் - தீ -> நிறம், நீளம், குட்டை, பருமன்

ஊறு - உடல் - காற்று -> குளிர்ச்சி, வெப்பம், வன்மை, மென்மை

ஓசை - செவி - விண் -> ஓசைகள்

நாற்றம் - மூக்கு - மண் -> வாசனைகள்

சுவை நாவினால் அறியப்படுவது; நாக்கு நீரின் வடிவம்.

ஓளி கண்ணால் உணரப்படுவது; கண் தீயின் வடிவம்.

ஊறு உடலால் தெரியப்படுவது; உடல் காற்றின் வடிவம்.

ஓசை செவியால் கேட்கப்படுவது; செவி விண்ணின் வடிவம்.

நாற்றம் மூக்கால் அறியப்படுவது; மூக்கு மண்ணின் வடிவம்.

ஐந்து இயல்புகள், ஐந்து புலன்கள், ஐந்து பூதங்கள்.

இவைதாம் மனிதன்!

இவைதாம் உலகம்!

மனிதனை உலகம் படைத்தது!

இந்தக் குறள் முடிவாக என்ன சொல்கிறது?

இவற்றை ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம்!

உலகத்தால் படைக்கப்பட்ட மனிதன் உலகை ஆராய்கிறான்!

உலகத்தால் படைக்கப்பட்ட மனிதன் உலகை ஆராய்ந்தால் உலகப் பயன்கள் கிட்டும்!

நீரின் தன்மையை ஆராய்ந்தால், நீராவி இயங்கி, நீராவி ஆற்றல்........

நீரைப் பிரித்தால் நைட்டிரஜன், ஆக்ஸிஜன்

நீரைக் காற்றுடன் கலந்து அழுத்திப் பாய்ச்சினால் பாறைகளைத் துளைக்கலாம்!

நீரின் வீச்சால் பெரிய டர்பைன்களை இயக்கலாம்!

ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்!

தீயை ஆராய்ந்தால்,

வெப்ப இயங்கிகளை (என்ஜின்) உருவாக்கலாம்!

அதைப் பயன்படுத்தி 200 கி.மீ. வேகத்தில் ஓட்டலாம்!

மின்னாற்றலைப் பெறலாம் (Thermo Power)

அணுவைப் பிளந்தால் வெப்பம்!

வெப்பத்தின் வெளியேற்றமே ஏவுகணைகளைத் தூக்குகின்றது!

புவி ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து விண்ணில் திரியலாம்!

காற்றின் தன்மையை ஆராய்ந்தால்

வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை அமைக்கலாம்!

செல்லிடங்களில் பேசலாம்!

இயங்கிகளின் டயர்களில் காற்று, மேடு பள்ளங்களில் விழுந்து செல்லும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு 100 பேரைத் தூக்கிச்செல்கின்றது!

ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்!

விண்ணின் தன்மையை ஆராய்ந்தால்,

ஏவுகணை செலுத்தலாம்; விண்கலங்களை மிதக்கவைக்கலாம். விண்ணிலிருந்து மண்ணை அளக்கலாம்; மண்ணிலிருந்து விண்ணை அளக்கலாம்!

மண்ணின் தன்மையை ஆராய்ந்தால்,

நிலக்கரி, கன்னெய், சிலிகான், டைட்டானியம், எரிவாயு, நவமணிகள் இன்னும் பல்வேறு தாதுக்களை அறியலாம்!

ஆராய்வான் அறிவில் அடங்குவதே உலகம்!

பஞ்சபூதங்களால் ஆன இந்த மனித உடலை ஆராய்ந்தால், ஆணும் பெண்ணும் சேராமல் குழந்தையைப் பிறக்கவைக்கலாம்!

ஒரு பூதத்தால் (புல், மரம்)

இரு பூதங்களால் (நத்தை, சிப்பி, முரள்மீன்)

மூன்று பூதங்களால் (கறையான், எறும்;பு)

ஐந்து பூதங்களால் (விலங்கு)

ஆன உயிர்களும் உள்ளன.

இவற்றை ஆராய்ந்தால்,

வௌவாலிடத்தில் ரேடார் ஆற்றல் உண்டு!

கரப்பான் பூச்சி மீசையில் ஆண்டனா ஆற்றல் உண்டு!

எறும்பிற்கு வாசனை ஆற்றல் மிகுதி!

பூனைக்கு இரவில் கண் தெரியும்!

இவற்றை மேலும் ஆராய்ந்தால்,

ஆராய்வான் அறிவின்பாற்பட்டதே உலகம்!

ஏவுகணையின் விலை என்ன?

விண்கலன்களின் விலை என்ன?

வானூர்தியின் விலை என்ன?

உலகம் எதற்கு விலை கொடுக்கிறது?

உலகத்தில் கிடைக்கும் பொருள்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டுப் புதிய பொருள்கள் ஆகின்றன!

உலகில் இல்லாதது வெளியில் இல்லை!

அந்த உலகமோ,

பஞ்சபூதங்களுக்குக் கட்டுப்பட்டன!

ஐந்தின் வகைதெரிவான் கண்ணதே உலகம்!

இதைச் சொன்னவன் தமிழ் வள்ளுவன்!

வணக்கம் வள்ளுவரே!

(தொடரும்....)

by Swathi   on 15 Feb 2016  0 Comments
Tags: தமிழர்   உலகம்   திருவள்ளுவர்   திருக்குறள்   செம்பியன்   கி.செம்பியன்   Ulagam  
 தொடர்புடையவை-Related Articles
பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!! பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!!
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்! ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்!
தமிழர்களின் 12 வகையான உணவுப் பழக்கங்கள்!! தமிழர்களின் 12 வகையான உணவுப் பழக்கங்கள்!!
உலகம்  உனக்காக - ச.சவகர்லால் உலகம் உனக்காக - ச.சவகர்லால்
ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது? ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.