|
||||||||
ஓங்கி உலகளந்த தமிழர் - 9 : எது எதிலிருந்து |
||||||||
![]() - முனைவர் கி.செம்பியன் யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன் (341)
(யாதனின் யாதனின் நீங்கியான்----ஒருவன் எவ்வெப் பொருளினின்று நீங்கினானோ; அதனின் அதனின் நோதல் இலன்---அவ்வப் பொருளால் துன்பமுறுத லில்லை
அடுக்குத் தொடர்கள் பன்மை குறித்தன. நீங்குதல், மனத்தால் நீங்குதல், அதாவது பற்று விடுதல், பொருள்களால் வரும் இம்மைத் துன்பங்கள்,
ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பம்--காத்தல் குறைபடின் துன்பம் கெடின் துன்பம் துன்பக் குறைபதி மற்றைப் பொருள் (நாலடி-280) என்பதனாலுணர்க.........பாவாணர்)
அலெக்ஸாண்டருக்கு உலகையே ஆளவேண்டும் என்று ஆசை!
அசோகனுக்குக் கலிங்கத்தை வீழ்த்திட ஆசை!
என் உயிர் உனக்கு
நீயின்றி நானில்லை!
உன்னை வேறொருவனுக்குத் திருமணம் முடித்து விட்டார்களா?
வாழ்நாள் வருத்தம்!
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, இவை பெரிய ஆசைகள்!
சின்னச் சின்ன ஆசை!
குழந்தைக்குப் பொம்மை மீது; தூக்கத்திலும் பிரிய மறுக்கிறது!
பொம்மை காணாமல் போய்விட்டது; குழந்;தைக்குத் துன்பம்!
சிறுவனுக்குக் கிரிக்கெட் பேட்டில்
தூக்கத்திலும் மட்டையைப் பிடித்திருக்கின்றது கை!
பேட்டு உடைந்துவிட்டது; சிறுவனுக்குத் துன்பம்!
பருவத்தில் பெண்ணின்மீது; பெண்ணுக்கு ஆணின்மீது; கணவனுக்கு மனைவியின்மீது!
கணவனின் பிரிவைத் தாங்காமல் கோப்பெருந்தேவி உயிர்நீத்தாள்.
மனைவியின் பிரிவு ஷாஜஹானுக்கு
அவன் மாமன்னன்
தாஜ்மகாலை எழுப்பிக் கவலையை மறந்தான்!
கோவலனுக்கு மாதவியிடம்
கண்ணகிக்குக் கோவலனிடம்
அதனால், ஊரைவிட்டு இரவோடு இரவாக ஓடவேண்டிய துன்பம்!
பாண்டியன் நெடுஞ்;செழியனுக்கு ஆடலழகி மீது நாட்டம்!
அதனால், செங்கோல் வளைந்தது; மதுரை மாநகரமே அழிந்தது!
தசரத மாமன்னனுக்குக் கைகேயி மீது ஆசை!
அந்த ஆசை அவனைப் படுக்க வைத்தது!
ஆசைப் பிள்;ளை காட்டுக்குப் போனான்; அந்தச் செய்தி மன்னனைச் சாகடித்தது!
சீதைக்கு மானின் மீது
இராவணனுக்குச் சீதையின் மிது
ஜீவகனுக்கு அரசி விசயை மீது; உயிரை இழந்தான்!
தருமனுக்குச் சூதாட்டத்தின் மீது!
விளையாட்டு வீரர்களுக்கு, வீராங்;கனைகளுக்கு
கால்பந்து வயிற்றில் அடித்தது; உயிர் போனது!
முழங்கால் முட்டி நழுவிவிட்டது!
கிரிக்கெட்டுப் பந்து தலையில் அடித்தது; உயிர்நிலையில் ;அடித்தது!
குத்துச் சண்;டை, கத்திச் சண்டை, கம்புச் சண்டை!
படக்கூடாத இடத்தில் பட்டது!
அந்த மிதிவண்டி தாத்தா வாங்கிக்; கொடுத்ததாம்
அதில்தான் தந்தை பள்ளிக்குச் சென்றுவந்தாராம்
நானும் அதில்தான் சென்று வந்தேன்
அதிர்ஷ்டமான மிதிவண்டி!
நேற்று அதை ஒருவன் திருடிவிட்டான்.
போகட்டும் காசு பெரிதில்iலை!
எத்தனையோ மிதிவண்டி வாங்கிவிடலாம்
தாத்தா வாங்கிக்கொடுத்த மிதிவண்டி போலாகுமா?
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே!
இந்த எழுதுகோலைக் கொண்டுதான் 6, 7, 8, 9, 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எல்லாம் எழுதினேன்
அத்தனையிலும் வெற்றி!
இராசியான எழுதுகோல்!
அது காணாமல் போய்விடது!
உலகமே இருண்டுவிட்டது!
இந்த நாய்; அதை எப்படியெல்லாம் வளர்த்தேன்!
எத்தனை நன்றி; ஒருநாள் பார்க்காவிடால் எப்படி வருந்தும்; மாற்றாரைக் கண்டால் எப்படிக் குரைக்கும்; குழந்தையைக் கண்டால் எப்படிக் குழையும்!
அதைப் பாம்பு கடித்துவிட்டது!
மறக்கமுடியவில்லை; மனமே சரியில்லை!
இந்த நாதஸ்வரத்தால் ஊரையெல்லாம் மயக்கினேன்!
கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தேன்; ஒருநாள் கைதவறிப் போட்டுவிட்;டேன்!
இஃது எங்கள் பரம்பரைச் சொத்து! எத்தனை தலைமுறைகளைக் கண்டதோ! அதுதான் எங்களுக்குப் பெரும்புகழைச் சேர்த்தது! நாட்டியப் பேரொளியானோம்! அந்தச் சதங்கைகள் எப்படியோ தவறிவிட்டன!
இந்த மண்வெட்டி; அந்தக் கத்தி; இந்த மாடு; அந்த மரம்!
மக்கள் எங்கெல்லாம் ஆசை வைத்திருக்கின்றார்கள்!
அந்தப் பட்டணம் பொடி இப்போது வருவதில்லை!
அந்தப் பத்திரிகை இப்போது நின்றுவிட்டது!
இந்தத் தலைவன் மறைந்துவிட்டான்!
மாநாட்டிற்கு வரும்போது அந்தத் தொண்டன் இறந்துவிட்டான்!
எதில் எதிலெல்லாம் ஆசை; அதை அதை இழக்கும்போது துன்பமோ துன்பம்!
30 ஆசைகளைத் துறந்தால் 30 துன்பங்கள் இல்லை! 100 ஆசைகளை விட்டுவிட்டால்...........!
மனிதனே நீ எது எதிலிருந்து விலகுகின்றாயோ, அது அதிலிருந்து உனக்குத் துன்பம் இல்லை!
சரிதான்.
இது யாருக்குப் பொருந்தும்?
ஆசை இல்லாமல் வாழமுடியுமா?
உயிர்களின் தோற்றமே ஆசையிலிருந்துதான்!
ஆசைகளை முற்றிலும் துறப்பதா?
இல்லறத்தானுக்குப் பொருந்துமா?
ஆசைகளைப் பெருக்கிக்கொள்ளாதே; அவற்றிற்கேற்பத் துன்பம் பெருகும்!
குறைத்துக்கொள்; குறைந்த ஆசைகளுடன் வாழக் கற்றுக்கொள்!
ஆசையின்றி விஞ்ஞானம் ஏது?
தெரிந்துகொள்ளும், புரிந்துகொள்ளும், கண்டுபிடிக்கும் ஆசைகள்!
இவையில்லாமல் முன்னேற்றமில்லை!
ஆசைகளால் நமக்கு ஏற்பட்டிருக்கும் பயன் பெரிது; இழப்புக்களும் பெரிது!
நீங்கினால் துன்பமில்லை!
சரிதான்
வள்ளுவரே வணக்கம்!
ஒரு கேள்வி!
நீங்கினால், அனுபவமும் இல்லை!
அனுபவ ஞானத்தைப் பெறுவது எப்படி?
மனிதன் நீங்கி வாழப் பிறந்தவனா?
நீந்தி வாழப்பிறந்தவனா? (தொடரும்....)
|
||||||||
by Swathi on 15 Mar 2016 0 Comments | ||||||||
Tags: Ulagam Thirukkural Thirukkural Katturai எது எதிலிருந்து | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|